Wednesday, 14 September 2011

பாபர் மசூதியை இடித்த இந்திய அரசால் ஊட்டிவளர்க்கப்படும் சிங்கள இனவெறிப்பாசிச சீறீலங்கா அரசு, ஈழமுஸ்லீம்களின் தொழுகைத் தலங்களைத் தகர்த்துத் தரைமட்டமாக்குகிறது!


'அநுராதபுரத்தில் தர்கா இடிப்பு'


பி.பி.சி.தமிழோசை கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 செப்டம்பர், 2011 - 15:36 ஜிஎம்டி

இலங்கையின் அநுராதபுரத்தில் அமைந்திருந்த ஒரு முஸ்லீம் தர்காவை சில பொளத்த பிக்குகள் அடங்கிய குழு ஒன்று சில நாட்களுக்கு முன்னர் இடித்து தரைமட்டமாக்கியதாக சில ஊடகச் செய்திகள் கூறியுள்ளன.

இந்தச் சம்பவம் போலிசாரின் முன்னிலையிலேயே நடந்ததாகவும் அந்தச் செய்திகள் கூறின.

இந்தத் தர்கா , பௌத்தர்கள் புனிதமான இடமாகக் கருதும் சிங்கள மன்னன் துட்டகெமுனுவின் அஸ்தி புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகே அமைந்திருப்பதால் அது இடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து தமிழோசையிடம் பேசிய அனுராதபுரம் மொய்தீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலின் முன்னாள் செயலாளர் அப்துல் ரசாக் அவர்கள், இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்ததாகவும், பிக்குமார் அடங்கலாக சுமார் 60 பேர் கொண்ட குழு ஒன்று இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் கூறினார்.

அதேவேளை அந்த தர்கா தாக்கப்படுவதில் இருந்து பாதுகாக்க வந்த முஸ்லிம்களை பொலிஸார் தடுத்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் இப்படியான சம்பவம் ஒன்றும் அநுராதபுரத்தில் நடக்கவில்லை என்று இலங்கை பொலிஸ் தரப்பில் பேசவல்ல அதிகாரி மறுத்துள்ளார்.

இது குறித்து இணையத்தளங்களில் புகைப்படங்கள் வெளிவந்துள்ளமை குறித்துக் கேட்டதற்குப் பதிலளித்த அவர், அப்படி இலங்கையில் உள்ள எந்த ஊடகமும் தகவல் வெளியிடவில்லை என்றும், வெளிநாட்டு ஊடகங்களில் அப்படி எதுவும் வந்திருந்தால் அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார்.
-------------
செய்தி 2
அநுராதபுரத்தில் அமைந்திருந்த பள்ளி வாசலொன்றை பௌத்த பேரினவாதிகள் இடித்துத் தகர்த்துள்ளனர்.

துட்டகைமுனு மன்னனின் சமாதி அமைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகில் அமைந்திருந்த காரணத்தினாலேயே பௌத்த பேரினவாதிகள் கடும் கோபத்துடன் பிரஸ்தாப பள்ளிவாசலை இடித்துத் தகர்த்துள்ளனர்.சிங்கள ராவய தேசிய இயக்கம், பௌத்த பாதுகாப்புப் பேரவை, தம்மவிஜய மன்றம் ஆகியவற்றின் உறுப்பினர்களான கடும்போக்கு இனவாதிகள் பௌத்த பிக்குகள் தலைமையில் ஒன்று திரண்டு பள்ளிவாசலை இடித்தழித்துள்ளனர்.

பள்ளிவாசல் இடிக்கப்படும் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிசார் இனவாதிகளைக் கட்டுப்படுத்தத் தவறியதுடன், கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2009ம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றியின் பின் தற்போது நாட்டின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள சிறுபான்மை மக்களின் வணக்கத்தலங்கள் பேரினவாதிகளின் கடும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள அதே நேரம், அரசாங்கமும் இவ்விடயத்தில் பராமுகமாக இருக்கின்றதாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...