SHARE

Wednesday, March 23, 2011

லிபிய மக்களின் விடுதலைக்கான புரட்சிப்பாதை.

லிபியமக்களே, ஒமர்முக்தாவின்

வீரப்புதல்வர்களே,


அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் உலகமறுபங்கீட்டிற்கும், எண்ணெய்வளத் திருட்டுக்கும், சாவு ஆயுத வியாபாரத்துக்கும் லிபிய மக்களுக்கு எதிராகத் தொடுத்துள்ள ஆக்கிரமிப்பு யுத்தம் அநீதியானதாகும்!

தேசிய சுதந்திரத்தைக் காக்கவும், தேசிய வளங்களைப் பாதுகாக்கவும், ஜனநாயகத்துக்காகவும் விடுதலைக்காகவும் லிபியமக்கள் நடத்தும் தற்காப்பு யுத்தம் நீதியானதாகும்!

ஆக்கிரமிப்பு யுத்தத்தில் பங்கேற்றுள்ள நாடுகளின் உழைக்கும் மக்கள் அதன் ஆளும் வர்க்கங்களை எதிர்த்து போர்க்கொடி உயர்த்துவர்!

மத்திய கிழக்கு, வட ஆபிரிக்க தேசிய ஜனநாயக இயக்கங்கள் லிபிய விடுதலையை ஆதரிப்பர்!

உலகத் தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட தேசங்களும்,ஏகாதிபத்திய அநீதி யுத்தத்தை எதிர்த்து, லிபிய மக்களின் நீதியான யுத்தத்தின் பக்கம் என்றும் நிற்பர்.

ஏகாதிபத்திய தாச விதேசிய அரபு ஆபிரிக்க ஆளும் கும்பல்கள் அம்பலப்பட்டு தனிமைப்படுவர்!

அநீதி யுத்தமுகாம் பிளவுபட்டு பலமிழக்கும்! நீதி யுத்த முகாம் ஒன்றுபட்டு பலம் பெருக்கும்!

ஏகாதிபத்திய இராணுவப் படை நேற்றோ ஒழிக!

ஏகாதிபத்திய அரசியல் படை ஐ.நா.ஒழிக!

ஏகாதிபத்தியம் ஒழிக!!

இறுதி வெற்றி லிபிய மக்களுக்கே!
 
உலகத் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்பட்ட தேசங்களுக்குமே.

மேலும்: http://senthanal.blogspot.com/2011/03/blog-post.html

No comments:

Post a Comment

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம். ஏப்ரல் 5, 2025 ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிமேதகு பிரதமர் ஸ்ரீ நரேந்த...