SHARE

Sunday, January 30, 2011

சர்வதேச சமூகம் தனி நாட்டுக் கோரிக்கையை ஒரு போதும் ஆதரிக்காது - எரிக் சொல்கெய்ம்

மீண்டும் தமிழருக்கு ஆப்பு வைக்க முனையும் எரிக் சொல்கெய்ம்


அரசுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வல்ல அனுசரணையாள்ராக செயல்பட நோர்வே விருப்பம் தெரிவித்துள்ளது.

அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் நோர்வேயின் சமாதான தூதுவராக செயல்பட்ட எரிக் சொல்ஹெய்ம் இவ்விருப்பத்தை ஊடகம் ஒன்றுக்கு வழங்கி உள்ள பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தி உள்ளார்.

இவர் இப்பேட்டியில் முக்கியமாக தெரிவித்தவை வருமாறு:

“நான் இலங்கை வரக் கூடும். இது தொடர்பான ஊடக செய்திகள் உண்மையானவை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கடந்த வருடம் சந்தித்தபோது இது குறித்து பேசப்பட்டது. ஆனால் இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

அரசு, புலிகள் ஆகிய இரு தரப்பினரும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டமையாலேயே சமாதான அனுசரணைப் பணியில் நோர்வே ஈடுபட்டது. நாட்டில் வாழும் மூவின மக்களும் வரவேற்றமையாலேயே நோர்வே இப்பணியில் ஈடுபட்டது. ஆனால் நாம் எவர் பக்கமும் சார்ந்து செயல்பட்டு இருக்கவில்லை.

இறுதிக் கட்ட யுத்தம் மிகுந்த வேதனைக்கு உரியது. யுத்த அழிவுகளுக்கு இரு தரப்பினருமே பொறுப்பு.புலம்பெயர் தமிழர்கள் ஜனநாயக வழிமுறைகளை கைக்கொள்ள வேண்டும். பேச்சுக்கள் மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கு உதவி செய்ய வேண்டியமை இவர்களின் முதல் கடமை.

இதற்காக இலங்கையின் ஜனநாயக கட்டமைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழர்களின் சட்ட ரீதியான உரிமைகளுக்காக சர்வதேச சமூகம் பேராதரவு வழங்குகின்றது. ஆனால் இவர்களின் தனி நாட்டுக்
கோரிக்கையை ஒரு போதும் ஆதரிக்காது.

அரசும், புலம்பெயர் தமிழர்களும் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும். இரு தரப்பினருக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வல்ல அனுசரணையாளராக செயல்பட நோர்வே தயாராகவே உள்ளது.”

Jan 27, 2011 / பகுதி: சிறப்புச் செய்தி / நன்றி: பதிவு.கொம்

No comments:

Post a Comment

மோடி வருகை: அதிகாரபூர்வ அரசாங்க அறிவிப்பு

மோடி ஏன் வருகின்றார்?