Wednesday, 15 December 2010

தமிழீழ தேசிய கீதம்

தமிழீழ தேசிய கீதம்
வாழ்க ஈழத்தமிழகம் வாழ்க இனிது வாழ்கவே!

வாழ்க ஈழத் தமிழகம் வாழ்க இனிது வாழ்கவே,

மலை நிகர்த்தின் உலகில் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கவே

மலை நிகர்த்தின் உலகில் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கவே

வாழ்க ஈழத் தமிழகம் வாழ்க இனிது வாழ்கவே!

அமுதை வென்ற மொழியினள்

அருள் கனிந்த விழியினள்

அரிய பண்பு நிதியினள்

அவனி மெச்சும் மதியினள்;

மமதை கொண்ட பகைவரும்

வணங்கும் அன்பு விதியினள்

வளரும் 25 இலட்சம் மக்கள் கொண்ட பதியினள்.

வாழ்க ஈழத் தமிழகம் வாழ்க இனிது வாழ்கவே,

மலை நிகர்த்தின் உலகில் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கவே!

பட்டிப்பளை மகாவலி பயிலருவி முத்தாறுகள்,

பல வளங்கள் பொலியவே எழில் நடம் செய்துலவிடும்,

மட்டக்களப்பு யாழ்நகர் மாந்தை வன்னி திருமலை,

மகிழ்வொடு மலைத் தமிழர்கள்

மலரடி தொழும் இனியவள்.

வாழ்க ஈழத் தமிழகம் வாழ்க இனிது வாழ்கவே,

மலை நிகர்த்தின் உலகில் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கவே!

மலை நிகர்த்தின் உலகில் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கவே!

தலை நிமிர்ந்து வாழ்கவே!

தலை நிமிர்ந்து வாழ்கவே!

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...