SHARE

Tuesday, November 30, 2010

சிறீலங்காவின் அடக்குமுறைக்குள்ளும் தமிழ் ஈழத்தில் மாவீரர் நாள்

சிறீலங்காவின் அடக்குமுறைக்குள்ளும் தமிழீழத்தில் மாவீரர் நாள்
Nov 29, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / பதிவு.கொம்
நவம்பர் 27. தமிழீழ தேசத்தின் விடிவுக்காகவும், எதிர்கால சந்ததியின் வாழ்வுக்காகவும் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு, உலகெங்கும் வாழும் ஈழத்தமிழினம் ஈகச் சுடரேற்றி வணக்கம் செலுத்தும் உயரிய நாள்.
எமது தாயகமண் எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புக்கள் போடப்பட்டிருந்த நிலையிலும் மக்களால் எம் மண்ணின் மைந்தர்களுக்கு ஈகச் சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.
தாயகத்தை ஆக்கிரமித்து, மாவீரர் துயிலுமில்லங்களை உழுதெறிந்து உடைத்தாலும், எம் மக்களின் மனங்களில் ஆழமாக வேரூன்றியுள்ள தாயக இலட்சியக் கனவையும், அக் கனவை நெஞ்சிலே சுமந்து உயிரீந்த மாவீரரின் நினைவையும் எவராலும் அழிக்கமுடியாது என்பதை பறைசாற்றி நிற்கிறது.

No comments:

Post a Comment

Modi meets Yunus in Bangkok

PM Modi meets Bangladesh Chief Adviser Yunus, raises India’s concerns over safety of Hindus External Affairs Minister S Jaishankar and Natio...