Tuesday 12 October 2010

கொலை வெல்த் விளையாட்டு விழா


பொதுநலவாய விளையாட்டுப் போட்டி இறுதி வைபவத்தில் கௌரவ அதிதியாக ஜனாதிபதி
இன்று டில்லி பயணம்;
மன்மோகன் சிங்குடன் முக்கிய சந்திப்பு
பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் இறுதி நாளான நாளை வியாழக்கிழமை இடம்பெறும் வைபவத்தில் கௌரவ விருந்தினராக கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
புதுடில்லிக்கான இந்த விஜயத்தின்போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி ராஜபக்ஷவின் இந்த விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸும் உடன் செல்லவுள்ளார்.இந்தத் தருணத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர்
எஸ்.எம்.கிருஷ்ணா,உள்விவகார அமைச்சர் ப.சிதம்பரம்,வெளிநாட்டு இந்திய விவகார அமைச்சர் வயலார் ரவி,வர்த்தக கைத் தொழில்துறை அமைச்சர் ஆனந்தசர்மா,மனிதவலு வள அபிவிருத்தி அமைச்சர் கலிலீ சியால் ஆகியோர் உட்பட இந்திய சிரேஷ்ட தலைவர்களுடன் அமைச்சர் பீரிஸ் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அத்துடன், புதுடில்லியில் நாளை மறுதினம் 15 ஆம் திகதி ஒப்சேவர் ரிசேர்ச் பவுண்டேஸனின் ஸ்தாபக தின உரையையும் பேராசிரியர் பீரிஸ் நிகழ்த்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு
தெரிவித்தது.இந்தியத் தலைநகர் புதுடில்லியில் இடம்பெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாளான நாளை வியாழக்கிழமை கௌரவ விருந்தினராக ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவிருக்கும் அதேசமயம், இந்த இறுதிநாள் நிகழ்வில் பொதுநலவாயத்தின் தலைவியான பிரிட்டிஷ் மகாராணியார் 2 ஆம் எலிசபெத்தின் கடைசி மகனான
இளவரசர் எட்வேட்டும் கலந்துகொள்ளவுள்ளார்.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஏற்பாட்டாளர்களும் இந்திய அரசாங்கமும் இணைந்து விடுத்துள்ள அழைப்பை ஜனாதிபதி ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளாரெனவும் இன்று
புதன்கிழமை இந்தியாவுக்கு அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் டில்லியிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்ததாக எ.என். ஐ. செய்திச்சேவை தெரிவித்தது.
அழைப்பிதழை ஏற்றுக்கொள்ளாமல் விடுவதானது பொருத்தமானதல்ல என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜயசிங்க கூறியதாக த கார்டியன் பத்திரிகை தெரிவித்திருக்கிறது.நாங்கள்
நகர்ந்து சென்றுள்ளோம். எமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சரியானவை அல்ல என்பதை அதிகளவு மக்கள் இப்போது அறிந்துள்ளனர். பிரிட்டனிலுள்ள புதிய அரசாங்கம் இதனை
தெளிவுபடுத்தியுள்ளது. தமது முன்னைய ஆட்சியாளர்களின் போக்கை தாங்கள் தொடர்ந்தும் போசிப்பதில்லை என்பதை பிரிட்டனின் புதிய அரசாங்கம் தெளிவுபடுத்தியிருக்கிறது என்றும்
ரஜீவ விஜயசிங்க கூறியுள்ளார்.
பொதுநலவாய விளையாட்டுகளுக்கான இராஜதந்திர நடைமுறை ஏற்பாடுகளுக்கான தலைவர் அஸ்லம் கான் இறுதிநாள் வைபவத்தில் விருந்தாளிகளை தெரிவு செய்வதில் இந்திய
அரசாங்கமும் ஏற்பாட்டுக்குழுவும் இணைந்து மேற்கொண்ட விடயமென்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்த நிகழ்வில் ஜனாதிபதி ராஜபக்ஷ உரையாற்றுவாரென
எதிர்பார்க்கப்படவில்லையென கான் மேலும் கூறியுள்ளார். இது இவ்வாறிருக்க 2018 இல் பொதுநலவாய விளையாட்டுப்போட்டியை அம்பாந்தோட்டையில் நடத்துவதற்கான கோரிக்கையை
முன்வைப்பது தொடர்பாக இலங்கை பரிசீலித்து வருகின்றது.

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...