SHARE

Sunday, October 24, 2010

கடந்தகால வரலாறு கிளறப்படுவதற்கு அஞ்சும் நிகழ்கால அமைச்சர் - கருணா

600 பொலிஸார் படுகொலைக்கு பிரபாகரன்தான் முழுப்பொறுப்பு பிரதியமைச்சர் முரளிதரன் தெரிவிப்பு
கடந்த கால விடயங்களைக் கிளறுவதை விட எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுப்பது அவசியம்.
கொழும்பு, ஒக்.23
கடந்த கால விடயங்களைக் கிளறுவதை விட எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுப்பது அவசியம். 1990ஆம் ஆண்டு மட்டக்களப்பில் 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள்
படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது, அந்தக் காலத்தில் நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன்.
இவ்வாறு மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் வி.முரளிதரன் மேலும் கூறியவை வருமாறு:
மட்டக்களப்பில் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கிடையாது. 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் மட்டக்களப்பு
மாவட்டத்தில் போராட்டங்கள் நடைபெற்றபோது நான் அந்தக் காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்தேன்.
குறித்த சம்பவம் இடம்பெற்ற காலத்தில் பொட்டு அம்மான், கரிகாலன் மற்றும் நியூட்டன் ஆகியோர் கிழக்குப் பிராந்தியத்தை வழிநடத்தினார்கள்.
கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்த யுத்தத்தினால் ஏற்பட்ட பேரவலங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே பொறுப்பேற்க வேண்டும் இப்படி அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நன்றி: உதயன் செய்தி

No comments:

Post a Comment

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம். ஏப்ரல் 5, 2025 ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிமேதகு பிரதமர் ஸ்ரீ நரேந்த...