SHARE

Thursday, October 14, 2010

மரண விளையாட்டு











நன்றி: Thirumurugan Gandhi கார்டூனிஸ்ட் பாலாவின் அந்த ஓவியத்தை சுவரொட்டியாக போட்டிருந்தோம். வழக்கம் போல எல்லாவற்றையும் கிழிக்கும் காவல் துறை இதையும் விட்டு வைக்கவில்லை. "இவனுகளுக்கு வெள்ளைக்காரனே மேல் ".

ரத்தம் தேவை..
by Elangovan Anban on Thursday, 14 October 2010 at 10:12.
ஏன் இத்தனை கூப்பாடு.
உங்களுக்கு ஏன் எரிகிறது.

அவர்தான் வரவேண்டும்.
வரவேற்பது எனது கடமை.

அடிக்கடி விரித்து நடந்து
வெளுத்துப்போனது என் சிவப்புக்கம்பளம்.
அதற்கு வண்ணமேற்ற
இன்னும் தேவைப்படுகிறது ரத்தம்.

தந்துதவத் தயாரா நீங்கள்.
நீங்கள் மறுத்தாலும்
எடுத்துக் கொள்(ல்)வதில்
உறுதியாய் இருக்கிறேன் நான்.

கடல்கடந்து வந்தவன்
ஆயுதமுனையில் கட்டியமைத்த
ரத்ததேசம் நான்.

உங்களின் அடங்கிய மூச்சில்தான்
என் உயிர்ப்பு இருக்கிறது.

No comments:

Post a Comment

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...