SHARE

Wednesday, October 06, 2010

தலைமைகளா? கழுதைகளா?


வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்குங்கள் நாடாளுமன்றில் மாவை கோரிக்கை
யாழ்- உதயன் கொழும்பு, ஒக். 6
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்திருப்பதுடன் அவற்றுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியது மிக அவசியம். வடக்கு கிழக்கு பிரிந்திருப் பதால்
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று நாடாளுமன்றில்
கூறினார். நாடாளுமன்றில் இடம்பெற்ற மாகாணசபை திருத்தச்சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு அவை 18வருடங்களாக இணைந்த மாகாணங்களாக நிர்வகிக்கப்பட்டு வந்தன.வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட முறைமை பிழை என்று நீதிமன்றம் கூறியது. ஆனால் அவற்றைப் பிரிக்குமாறு கூறவில்லை. இருப்பினும், அரசு வடக்கு கிழக்கைப்
பிரித்துவிட்டது. அதை மீண்டும் இணைக்க சட்டமூலம் கொண்டுவந்தால் நாம் அதற்கு ஆதரவு வழங்குவோம் என்று ஐ.தே.க. அப்போது கூறியது. ஆனால், எதுவும் நடக்கவில்லை.வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்திருப்பது இப்போது மிகவும் அவசியமாகின்றது. அவை பிரிந்திருப்பதால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.காணி, சட்ட ஒழுங்கு அதிகாரங்கள் இப்போது மாகாணசபையில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன. நில அதிகாரம் இருப்பது யாரிடமென்று தெரியவில்லை. அது இருப்பது இராணுவத்திடமா அல்லது அரசிடமா?வடக்கு கிழக்கில் சுமார் 50 வருடங்களாக வாழ்ந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் நிலங்கள் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு அங்கு இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன.வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரம் இல்லாததால் அங்கு இந்த நில ஆக்கிரமிப்பு இடம்பெறுகின்றது. அம்மாகாணங்களில் உள்ள தமிழ், முஸ்லிம்களின் கைகளில் அதிகாரம் இருந்தால் மாத்திரமே இந்த நிலங்களைப் பாதுகாக்க முடியும் என்றார்
=====================================
இந்தத் 'தலைமைகள்' தங்கள் உடனடி துன்பத்தைக் குறைக்க அதிகாரப் பரவலாக்கத்தை சுமக்கின்றன!
இது தமிழ் மக்களின் எதிர்கால சுதந்திர வாழ்வின் முன்னேற்றத்துக்கு எவ்வகையிலும் உதவப் போவதில்லை!
===================================

No comments:

Post a Comment

Le Pen barred from politics

French far-right leader Le Pen barred from politics in embezzlement verdict March 31, 2025  By Annabelle Timsit The sentence means Le Pen, t...