Thursday, 16 September 2010

ஐ.நா.வில் ராஜபக்ச!

''எத்தனை நாள் துயின்றிருப்பாய் எனதருமைத் தாயகமே!''
ஐ.நா. அமர்வில் பங்கேற்க ஜனாதிபதி பயணம்
ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று புதன்கிழமை புறப்பட்டுச் சென்றுள்ளார்.ஐ.நா.வின் பொதுச் சபைக் கூட்டத்தில் முதற்கட்ட அமர்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நியூயோர்க்கில் ஆரம்பமானது.இதனையடுத்து உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் ஆயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குக் கூட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இதிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.இதையடுத்து 23 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரையும் பின்னர் 27 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரையும் பொது விவாதம் நடக்கவுள்ளது.ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ நேற்று புறப்பட்டு உத்தியோகப்பற்றற்ற விஜயமாக ஜேர்மன் சென்றதாக வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜேர்மனியில் இருந்தே 20 ஆம் திகதியளவில் ஜனாதிபதி நியூயோர்க் செல்லவிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.ஜனாதிபதி ராஜபக்ஷ தலைமையிலான இந்தக் குழுவில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்டோரும் அடங்குகின்றனர்.

மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடு பற்றி ஆராய்ந்து தனக்கு ஆலோசனை கூறவென ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் விசேட நிபுணர் குழுவை நியமித்ததன் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐ.நா.வுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment