SHARE

Monday, August 30, 2010

ஈழப் போராட்டத்தில் தொடரும் 'புளொட்' பதிவுகள்: முருங்கனில் கொள்ளை புளொட் உறுப்பினர் கைது!

முருங்கனில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் இன்ஸ்பெக்டர், பொலிஸ் உத்தியோகத் தர், புளொட் அமைப்பின் உறுப்பினர் ஆகி யோர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. யாழ் உதயன் மன்னார்,ஓக.30 முருங்கனில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் இன்ஸ்பெக்டர், பொலிஸ் உத்தியோகத் தர், புளொட் அமைப்பின் உறுப்பினர் ஆகி யோர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.மன்னார் முருங்கன் பொலிஸ் பிரி வுக்கு உட்பட்ட சூரிய கட்டைக் காட்டில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரின் வீட்டிலி ருந்து ஏறத்தாழ 23 இலட்சத்து 78 ஆயிரம் பெறுமதியான பணம், தங்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசியொன்றைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் மற்றும் புளொட் அமைப்பின் உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டதை அடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் பணித் துள்ளது. மன்னார் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய சந்தேக நபர்களான பொலிஸ் இன்ஸ்பெக்டரும் பொலிஸ் உத்தியோ கத்தரும் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே புளொட் உறுப்பினர் ஒருவரின் ஒத்துழைப்புடன் மேற்படி வர்த்தகரின் வீட்டினுள் புகுந்து அவரை அச்சுறுத்தி கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 23 இலட்சத்து 78 ஆயிரம் பெறுமதியான பணம், தங்க நகைகள் மற்றும் கைத் தொலைபேசியொன்றையும் அபகரித்துச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இக் கொள்ளையில் கூட்டுச் சேர்ந் திருந்த புளொட் உறுப்பினர் தலைமறை வாகியிருந்ததாகவும், மேற்படி வர்த்தகரின் கைத்தொலைபேசி எண்ணின் ஊடாக தொழில்நுட்ப முறைமையைப் பயன் படுத்தி முதலில் சந்தேக நபர்களுள் ஒரு வரான பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாகவும், அவரை விசார ணைக்கு உட்படுத்தியதன் மூலம் அப கரிக்கப்பட்ட கைத்தொலைபேசியைக் கைப்பற்ற முடிந்ததோடு, பொலிஸ் இன்ஸ்பெக்டரையும் புளொட் உறுப்பினரையும் கைது செய்ய முடிந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
===========================
குறிப்பு: அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம், திருட்டு உட்பட!
===========================

No comments:

Post a Comment

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...