SHARE

Friday, January 01, 2010

தலைவர் சந்திரசேகரன் மரணம் தலைவியாக திருமதி நியமனம்

மலையக மக்கள் முன்னணியின் தலைவியாக திருமதி சந்திரசேகரன் நியமனம்
by வீரகேசரி இணையம்
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் சமூக அபிவிருத்தி மற்றும் அநீதியொழிப்பு அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனின் மறைவைத்தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியின் தலைவியாக திருமதி சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் உயர்மட்ட அரசியல் குழு இன்று கொழும்பில் கூடி ஏகமனதாக இந்தத்தீர்மானத்தினை எடுத்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் பூதவுடல் அன்னாரின் ராஜகிரிய இல்லத்தில் தற்போது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதோடு அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 4 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் தலவாக்கலையில் இடம் பெறவுள்ளன.

இந்த நிலையில் மலையக மக்கள் முன்னணியின் மண்வெட்டி சின்னத்தில் கடந்தப் பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தனித்துப்போட்டியிட்டு பாரளுமன்ற உறுப்பினராக பெரியசாமி சந்திரசேகரன் தெரிவு செய்யப்பட்டமைக்குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் சந்திரசேகரனின் திடீர் மறைவைத்தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இரண்டாவதாக எஸ்.அருள்சாமியும் மூன்றாவதாக எம்.சிவலிங்கமும் உள்ளனர்.

இந்த இருவரும் தற்போது வேறு அமைப்புக்களில் அங்கத்துவம் பெறுவதால் எஸ்.அருள்சாமியை பாராளுமன்ற உறுப்பினராக நியமிகக்க கூடிய சந்தர்ப்பம் இல்லையெனத்தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அமைச்சர் சந்திரசேகரனின் பாராளுமன்ற பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் உயர்பீடம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகத்தெரிவிக்கப்படுகின்றது

No comments:

Post a Comment

Israel kills 28 Palestinians in Gaza on New Year’s Day

  Israel kills 28 Palestinians in Gaza on New Year’s Day At least 28 Palestinians, including children and women, are killed throughout Gaza ...