Sunday, 3 January 2010

ஜனாதிபதித்தேர்தல் 2010 நமது நிலைப்பாடு.

ஜனாதிபதித்தேர்தல் 2010 நமது நிலைப்பாடு.
தமிழ்த்தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு ஒன்றுபட்ட இலங்கைக்குள் 'அதிகாரப்பரவலாக்கல் கோட்பாட்டின்' அடிப்படையில் அடையப்படக்கூடியதா? அல்லது 'சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில்' பிரிவினைக் கோரிக்கையை அங்கீகரிப்பதின் மூலம் அடையப்படக்கூடியதா? என்பதில் தமிழ்பேசும் மக்களின் கருத்தறிய,
* வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களிடையேயும், புலம் பெயர்வாழ் தமிழ்பேசும் மக்களிடையேயும் சுதந்திரமானதும் நீதியானதுமான வாக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டும்.

* இவ் வாக்கெடுப்பில் பெரும்பான்மை மக்களின் தீர்ப்பை அமூலாக்க வேண்டும்.

* ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் இதை அங்கீகரித்து, நடைமுறைப்படுத்த உத்தரவாதம் வழங்க வேண்டும்!

* அப்படி ஒரு வேட்பாளர் முன்வந்தால் அவருக்கு தமிழ்பேசும் மக்கள் வாக்களிக்க வேண்டும்.

* உத்தரவாதத்தை மீறினால் ஜனாதிபதியை திருப்பி அழைக்கும் உரிமை மக்களுக்கு உத்தரவாதம் செய்யப்படல் வேண்டும்.

இல்லையேல் தமிழ்மக்கள் ஜனாதிபதித்தேர்தலை பகிஸ்கரிக்கவேண்டும்.
புதிய ஈழப்புரட்சியாளர்கள்
.

1 comment:

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...