SHARE

Wednesday, January 27, 2010

2010 ஜனாதிபதித் தேர்தல் மதிப்பீடு-ENB

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!.
2010 ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேக்காவுக்கு பிரச்சாரம் செய்தோர் இப்போது விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பது போல் ஒட்டுக்குழுக்கள் மேல் பழி போட்டு தேர்தல் மோசடியை தமது படு தோல்விக்கு காரணமாகக் காட்டுகின்றனர்..
1) பயங்கரவாதத்தையும் வன்முறையையும் தோற்கடித்து விட்டு தாங்கள் நடத்திய ஜனநாயக தேர்தல் இது, இப்படித்தான் பீத்திக் கொண்டீர்கள். இனிமேல் வன்முறை பற்றி எங்களிடம் ஊளையிட வேண்டாம்.
2) ஒட்டுக்குழுத் தலைவன், வெள்ளை வான் கொலை காரன் டக்ளஸ் ''மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி'' என்று சொல்லி விட்டுத்தான் இத்தனையும் செய்தான்.
மாநிலத்தில் டக்ளசின் ''சுயாட்சியில்'' இருந்து தங்களைக் காப்பாற்றும் கவச வாகனங்களை மத்தியில் ஒற்றையாட்சிக்குள் தீர்வு காணப் புறப்பட்ட தாங்கள் பெற்று தங்களைக் காப்பாற்றியிருக்க வேண்டும்.அப்படி ஒரு ''கூட்டாட்சியை'' ஒற்றையாட்சிக்குள் தாங்களும் அமைத்துக் கொண்டிருக்க வேண்டும்.அதிகாரப் பகிர்வு அதைத் தங்களுக்கு உத்தர வாதம் செய்யவில்லையெனில் அழிந்து தொலைய வேண்டியது தங்களுக்கு விதிக்கப்பட்ட விதி.
3) கேவலம் சம்பந்தன்-சுரேஸ்-பத்மினி கும்பல் வடக்கு கிழக்கு இணைப்பைக் கூட சரத்திடம் வலியுறுத்தவில்லை.இந்தக் கும்பல் மட்டும் என்ன இலட்சியக் குழுவா??
4)1987 இல் இந்திய இராணுவத்தின் அதிகாரப் பின் பலத்தில்-
சுரேஸ் பிரேமச்சந்திரன் யாழ் கச்சேரியில் நடத்திய தேர்தலை விட என்ன மோசமாக இங்கே நடந்துவிட்டது? அங்கு வாக்களித்ததே அதிகாரிகள் தானே!!இந்தியச் சிப்பாய் கூட வாக்களித்தானே!!
5) புலிகளின் அதிகாரப் பின் புலத்தில்
அ) ஏகபோக அங்கீகாரத்துக்காக நடந்த "வீட்டுக்குப் போகும் தேர்தல்"
ஆ) ராஜபக்சவிடம் லஞ்சம் வாங்கி "அதிகார பேரத்துக்காக ரணிலை தோற்கடித்த ஜனாதிபதித் தேர்தல்"
இவை மட்டும் என்ன, 'கன்னி கழியாமல் கற்பு அழியாமல்' நடந்த புனிதத் தேர்தல்களா??
6) மேலும் ஜனநாயகப் பாதைக்குச் சென்றோரே இது தான் தங்கள் கேடுகெட்ட ஜனநாயகம்.
தேர்தல் மோசடி வென்றவனுக்கு தோல்வியைத் தவிர்ப்பதற்கு எந்தளவு உதவுகிறதோ அதே அளவுக்கு தோற்றவனுக்கு வெற்றியைத் தழுவுவதற்கும் உதவுகின்றது.சில வேளைகளில் இன்றைக்கு அதிகாரத்தில் உள்ளவன் அதிக நன்மை அடைந்திருந்தால் அவன் நேற்றைக்கு அதிகாரத்தில் இருந்தவனிடம் அதை இழந்தவனாக இருந்திருப்பான். அதற்கு பழி தீர்த்திருப்பான்அவ்வளவே!!
7) தேர்தல் ஆணையாளப் புலியின் பற்களைப் பிடுங்கி விட்டார்களாம், இது தானாம் அவர் கடைசி உறுமல்!!
பாதிரிகளினதும், நீதவான்களினதும்,தூதுவர்களினதும் துல்லிய ஆய்வுக்கு இந்த தேர்தல் புள்ளிவிபரங்கள் சமர்ப்பணம்.
8) நமது கரிசனையை எட்டியவை வருமாறு.
அ) இலங்கையின் 1978 அரசியல் யாப்பு ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின் கீழ் அவர் தன்னைத் தேர்வு செய்யும் தேர்தலைக் கூட தனக்கேற்ற விதத்தில் நடத்தலாம்.அப்படி நடந்த ஒரு தேர்தல் தான் 2010 ஜனாதிபதித் தேர்தல்.
ஆ) வாக்களித்தவர்களின் எண்ணிக்கை ராஜபக்ச காட்டும் புள்ளிவிபரமே! குறிப்பாக சிங்களப் பிரதேசங்களில்.இது 70 வீதத்தையும் எட்டிச் செல்கிறது, காவலில் உள்ள பல்லிழந்த ஆணையாளர் கையொப்பமிட்டாகவேண்டும்,
இ) அவரது புள்ளி விபரத் தலையீட்டில் தப்பிய தமிழ் பேசும் மக்களில் - குறிப்பாக தமிழ் மக்களில் பெரும்பான்மையோர் -தேர்தலில் வாக்களிக்கவில்லை சராசரியாக 70 வீ,தம் மக்கள் வாக்களிக்கவில்லை.
இப் பெரும்பான்மையோரான தமிழ் மக்கள்
1) தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்
2) இரு வேட்பாளர்களையும் நிராகரித்துள்ளனர்
3) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்துள்ளனர்.
ஈ) வாக்களித்த 30 வீதம் பேரில் பெரும்பான்மையோர் சரத்துக்கு வாக்களித்துள்ளனர்.
உ) விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியைப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புரட்சியை சீர்திருத்த இந்திய சார்பு வழியில், சரத்துடன் கூட்டுச் சேர்ந்து அழித்தொழிக்க திட்டமிட்ட சம்பந்தன்- சுரேஷ்-பத்மினி கும்பலின் சதியை தமிழ் பேசும் மக்கள் முறியடித்துள்ளனர்.
ஊ) விடுதலைக்கான உத்வேகத்தை பின் தொடர்ந்து ஊசலாட்டம் பயணிக்கின்றது.எனினும்,
நிலத்திலும் புலத்திலும் தமிழர் முழக்கம் ஒன்றே!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!.

==============================================
புதிய ஈழப் புரட்சியாளர்கள் ===============================================

No comments:

Post a Comment

Budget 2025: Commitment to IMF Programme, Challenges Ahead, says Moody’s Ratings

ENB Budget series: IMF இற்கு அடிமைச் சேவகம். _____________________                   The budget underscores the challenge that Sri Lanka’s f...