Monday, 23 November 2009

ஜூரிச் கூட்டத்தில் நடந்தது என்ன?

யார் நடத்தினார் ஜூரிச் மாநாட்டை? ஏன் நடத்தினார்?
கலந்து கொண்ட தமிழ், முஸ்லிம் கட்சி , மற்றும் "தன்னார்வ"க்குழு ஓடுகாலிகளே மக்களுக்குப் பதில் அளியுங்கள்!
*ஜனாதிபதி தேர்தல் குறித்து ஜூரிச் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை
-தமிழோசை
* எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடுவதே நிகழ்ச்சிநிரலில் முதலாவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
-யாழ் உதயன்
*Working paper for dialoge,இணக்கப்பாட்டு அறிக்கை,பத்திரிகை அறிக்கை இங்கே வெளியிடப்பட்டன.
_ இலங்கை முஸ்லிம் சிவில் சமூகம்.
* எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடுவதே நிகழ்ச்சிநிரலில் முதலாவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
-யாழ் உதயன்
*13 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான ஓர் தீர்வுத் திட்டம் அவசியமென இணங்கப்பட்டது.
-மனோ கணேசன்
=============
ஜூரிச் கூட்டத்தில் நடந்தது என்ன?
செய்தியரங்கம் BBC தமிழோசை
ஜனாதிபதி தேர்தல் குறித்து ஜூரிச் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது

இலங்கையில் இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரும் இருநாள் கூட்டம் ஸ்விஸ் நாட்டின் ஜூரிச் நகரில் முடிவடைந்துள்ளது.

1 இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வது என்றும்,
2 அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில், ஒரு செயற்பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்துள்ள மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் சட்டம் தொடர்பான பிரச்சினைகளும், மீள்குடியேறியுள்ள மக்களை சுயாதீனமாக மேற்பார்வை செய்கின்ற அமைப்பு ஒன்றை உருவாக்குவதின் அவசியமும் தீர்மானமாக இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் அமீன் அவர்கள் கூறுகிறார்.

சில விடயங்களில் கலந்து கொண்டவர்கள் முரண்பட்டாலும், அதைத் தவிர்த்துவிட்டு, ஒன்றுபட்டு செயற்படக் கூடிய விடயங்கள் தொடர்பாகத்தான் எல்லோரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்ததாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

இந்தக் கூட்டத்தில் இலங்கையில் விரைவில் நடைபெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதி தேர்தல் குறித்து எந்தப் பேச்சுவார்தையும் இடம்பெறவில்லை என்றும் அமீன் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.

13வது சட்டத்திருத்திற்கும் மேலாக அதிகாரப்பகிர்வு தேவை என்று வலியுறுத்தல் இதனிடையே இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்களுக்கு பரந்துபட்ட அளவில் அதிகாரப் பகிர்வு அளிக்க வழி செய்யும் வகையில் ஒன்றுபட்டு செயற்பட இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் இணங்கியுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பின் 13 ஆவது சட்ட திருத்தத்துக்கும் மேலாக அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் என்கிற கருத்திலும் ஒரு கருத்தொற்றுமை கூட்டத்தில் கலந்து கொண்டோரிடம் இருந்தது என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இவை தவிர நாட்டில் நிலவி வரும் மனித உரிமை மீறல்கள், மக்கள் காணாமல் போகும் சம்பவங்கள், தொடர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளவை

குறித்தும் ஜூரிச் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறுமகம் தொண்டமான் ஆகியோரின் கடுமையான எதிர்ப்பு காரணமாக ஜனாதிபதி தேர்தல் குறித்து இந்தக்

கூட்டத்தில் விவாதிக்க இயலவில்லை என்றும் மனோ கணேசன் பிபிசியின் சிங்கள் சேவைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

முக்கியமென குறித்த 2 விடயங்களில் காத்திரமான கலந்துரையாடல்தானும் இன்றி முடிவுற்ற சூரிச் கூட்டம்!
2009-11-23 06:20:12 யாழ் உதயன்
சுவிற்சர்லாந்தின் வர்த்தகத் தலைநகரான சூரிச்சின் ஒதுக்குப் புறமான ஓர் இடத்தில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கிடையே.. பொது இணக்கப்பாடொன்றைத் தோற்றுவிப் பதற்கான கூட்டம் நிகழ்ச்சிநிரலில் சேர்க்கப்பட்டிருந்த இரண்டு முக்கியவிடயங்கள் குறித்து காத்திரமான கலந்துரையாடல் தானும் இன்றி முடிவுற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்கிடையே பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான கூட்டம் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது குறித்தும் கலந்துரையாடுவதே நிகழ்ச்சிநிரலில் முதலாவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்ததாம். அதற்கென அரைநாள் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் அது குறித்து காத்திரமான கலந்துரையாடல் எதுவும் நடைபெறவில்லை என்று அதில் கலந்து கொண்டவர்களில் ஒருவர்
தெரிவித்தார் என்று தகவல்கள் கொழும்பில் கசிந்துள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பே இன்னும் வெளிவராத நிலையில் அது குறித்து இங்கு விவாதிப்பதால் பயனில்லை என்று ஒரு சாராரும் கூட்டத்தின் பிரதான நோக்கம் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இடையே பொது இணக்கப்பாடு என்று தெரிவித்து விட்டு, ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து ஆராய்வது அர்த்தமற்றது என்று ஆட்சேபம்
தெரிவித்து அடுத்த சாராரும் இதனைப் புறக்கணித்தனர்.

ஆராயப்பட குறிக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் விடயம் தேவையற்றது எனக்கூறி, அந்த விடயம் நிகழ்ச்சிநிரலில் இருந்து நீக்கப்பட்டது. கிழித்து எறியப்பட்டதாக மற்றொரு தகவல்

தெரிவித்தது. அரசியலுக்கு அப்பால், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் குறித்து ஆராய்ந்து நீதியான, ஒரு முடிவுக்கு வந்து அது குறித்து இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பது

என்பது கூட்டத்தில் இரண்டாவது முக்கிய நிகழ்ச்சியாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆயினும் அது குறித்த கலந்துரையாடல் தொடங்கிய சிறிது நேரத்தில், அகதி முகாம்களில் உள்ளவர்களின் சுதந்திரமான நடமாட்டத்துக்கு அடுத்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் அரசு

அனுமதி அளித்திருப்பதும், மற்றும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் அகதிகள் மீள்குடியமர்த்தப்படுவர் என்றும் பஸில் ராஜபக்ஷ வெளியிட்ட அறிவிப்புக் குறித்து அமைச்சர்

பெ.சந்திரசேகரன் கூட்டத்தில் தெரியப்படுத்தினார். அத்தோடு தமிழ்மக்களின் குடியேற்றம் குறித்த விடயமும் தொப்பென கைவிடப்பட்டதாக நேற்று இரவு இங்கு கிடைத்த தகவல்கள்

தெரிவித்தன.

இந்தக் கூட்டத்தை ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் பத்மநாபா அணியில் அங்கம் வகித்த எஸ்.வரதகுமார் என்பவரே ஏற்பாடு செய்திருந்தார். அவர் தமிழர் தகவல் மையம் என்ற அரச சார்பற்ற

நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். 1983 ஆம் ஆண்டில் நடைபெற்ற இனக் கலவரத்தைத் தொடர்ந்து வரதகுமார் இந்தியா சென்று காலத்துக்குக் காலம் அந்நாட்டு அரசுகளுடன் நெருங்கிய

உறவைப் பேணி வருகிறார். இதேவேளை, சூரிச் கூட்டத்தில் பங்கு பற்றிய ஒவ்வொருவருக்கும் பயண மற்றும் செலவுக்கென 3,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டது. கூட்டத்தில்

மொத்தம் 26 பேர் பங்கு பற்றினர். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான், முத்துசிவலிங்கம், பி.சந்திரசேகரன், பேரியல் அஸ்ரப், கிழக்கு

மாகாண சபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், சுகாதார அமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் ஆர் சம்பந்தன், மாவை சேனாதிராசா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ்

பிரேமச்சந்திரன், மனோகணேசன், த.சித்தார்த்தன், வீ.ஆனந்தசங்கரி, ரி.சிறிதரன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் அவற்றில் அடங்குவர்.

இதற்கிடையே
கலந்துரையாடலில் பங்கு பற்றிய அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தம்மால் நான்கு "ஸ்ரார்'' ஹோட்டலில் தங்க முடியாது என்று தெரிவித்து சூரிச் நகருக்குச் சென்று ஐந்து "ஸ்ரார்''

ஹோட்டலிலே தங்கினார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. அந்த மேலதிக செலவையும் கூட்டத்தை நடத்திய ஏற்பாட்டாளர்களே வழங்கினர்.
இந்தளவுக்கு பெருந்தொகைப்பணம் தமிழர் தகவல் மையத்துக்கு எங்கிருந்து கிடைத்தது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கிறது.

இந்தக் கூட்டம் இந்தியாவின் அனுசரணையுடனேயே நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இத்தகைய கூட்டம் ஒன்றை நடத்தவேண்டும் என்று அமெரிக்காவும்

பிரிட்டனும் முன்னின்று செயற்பட்டதாகவும் இந்தியா முழு விரும்பம் இன்றியே அதற்கு ஒத்துழைப்பு நல்கியதாகவும் மற்றொரு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
===========
13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான ஓர் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் ‐ சிறுபான்மை கட்சிகள்
23 November 09 01:46 am (BST)

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான ஓர் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் ‐ சிறுபான்மை கட்சிகள் :

13 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான ஓர் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென தமிழ் முஸ்லிம் சிறுபான்மை கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

விரிவான அதிகாரப் பரவலாக்கள் வழங்கப்பட வேண்டுமென தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் இணங்கியுள்ளனர்.

சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களினால் சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான ஓர் தீர்வுத் திட்டம் அவசியமென இணங்கப்பட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினை இன்னமும் முடிவவடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மற்றும் மேற்குலக நாடுகளது தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் முஸ்லிம் சிறுபான்மை மக்களது பிரச்சினைகளை முதன்மைப் படுத்தி இரு சமூகங்களும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இவ்வாறான ஓர் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை நிலைமைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள் தொடர்பிலும் இந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...