SHARE

Saturday, November 21, 2009

விசேட மாநாடு

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பங்களிப்பு குறித்து ஆராய்வதற்காக சுவிட்ஸர்லாந்தில் விசேட மாநாடொன்று ஆரம்பம்‐
20 November 09 04:41 am (BST) GTN
இலங்கையின் தற்போதைய நிலையில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பங்களிப்பு குறித்து ஆராய்வதற்காக சுவிட்ஸர்லாந்தில் விசேட மாநாடொன்று நேற்று ஆரம்பமாகியுள்ளது. சூரிச் நகரில் நேற்றிரவு இந்த மாநாடு ஆரம்பமாகியுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் சுவிட்ஸர்லாந்திற்கு சென்றுள்ளனர்.
லண்டனை தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர் தகவல் மையம் என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் ஏற்பாட்டிலேயே இந்த மாநாடு இடம்பெறுகின்றது.
இன்றும் நாளையும் நாளை மறுதினம் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.
இதில் பங்குபற்றுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எம்.பி.க்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், kalmunai மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன் ஆகியோரும் ஈ.பி.டி.பி.யின் சார்பில் அதன் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, மலையக மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவரும் எம்.பி.யுமான மனோ கணேசன், முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அதன் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம், தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி, புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணியின் செயலாளர் எஸ். சிறிதரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், அமைச்சர்களான ஏ.எல்.எம். அதாவுல்லா, ரிசாட் பதியுதின் ஆகியோர் உட்பட பலரும் அங்கு சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் ஈ.பி.டி.பி. அமைப்பின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன், தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி ஆகியோர் ஒரே விமானத்தில் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ளனர். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் நேற்றுக் காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சூரிச் நோக்கி சென்றுள்ளனர்.


சூரிச்சில் இருந்து 40 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிலேயே இந்த மாநாடு இடம்பெறுகின்றது. யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், இலங்கையில் தீர்வுத் திட்டம் ஒன்றினை முன்வைக்கும் விடயத்தில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பங்களிப்பு குறித்து ஆராயும் நோக்கிலேயே இந்த மாநாடு இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த மாநாட்டில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பங்கேற்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

No comments:

Post a Comment

Le Pen barred from politics

French far-right leader Le Pen barred from politics in embezzlement verdict March 31, 2025  By Annabelle Timsit The sentence means Le Pen, t...