SHARE

Thursday, October 01, 2009

ஹிலாரி கிளிண்டனின் பாலியல் வல்லுறவு ''பரப்புரை''
















போர்ச் சூழலில் பாலியல் வன்முறைகளைத் தடுக்க விசேட பிரதிநிதி : ஐ.நா.சபையில் தீர்மானம் வீரகேசரி இணையம் 10/1/2009 10:47:20 AM - இலங்கை உட்பட்ட நாடுகளில் யுத்தத்தின் போது பாலியல் வன்முறைகள் ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும், இவை இடம்பெறுவதைத் தடுக்கும் முகமாக பாலியல் வல்லுறவுகள் தொடர்பிலான விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க, ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டனின் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆபிரிக்காவின் ருவான்டாவில் மாத்திரம் 1990 ஆண்டு காலப்பகுதியில், ஐந்து லட்சம் பெண்கள் பாலியல் வல்லுறவுகளுக்குப் பலியாகியுள்ளனர்.
சியாரோ லினோனில் 64 ஆயிரம் பெண்கள் இவ்வாறான துன்புறுத்தலுக்கு உள்ளானார்கள்.
இந்நிலையில் பெணகள் தொடர்பான இந்தப் பிரச்சினை ஆபிரிக்காவுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், இலங்கை மற்றும் பர்மாவிலும் யுத்தத்தின் போது ஓரு ஆயுதமாகப் பாலியல் வல்லுறவு பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

ஆனந்தபுர வழக்கு

ஆனந்தபுர வழக்கு 16 ஆம் ஆண்டு நினைவு ( மறு பிரசுரம்; முதல் வெளியீடு Monday, 4 April 2016, இரண்டாம் வெளியீடு 04-04-2025) முதல் ஈழ  யுத்தம்[197...