Friday 2 October 2009

அகதிகள் முகாம் மிருகக்காட்சி சாலை அல்ல: துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி


அகதிகள் முகாம் மிருகக்காட்சி சாலை அல்ல: துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி
First Published : 03 Oct 2009 01:26:07 AM IST
இலங்கை அகதிகள் முகாம் (கோப்புப் படம்)சென்னை, அக். 2: இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்கள் மிருகக்காட்சி சாலை அல்ல. எனவேதான் அவற்றை பார்வையிட யாரையும் அனுமதிக்கவில்லை என இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
இது குறித்து அவர் சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து இலங்கையை இப்போதுதான் மீட்டுள்ளோம். எங்கள் நாட்டு அதிபர் மஹிந்த ராஜபட்ச மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவர். பயங்கரவாதிகளிடமிருந்து எங்கள் மக்களை பாதுகாத்த அவருக்கு, மக்களை எங்கு, எவ்வாறு குடியமர்த்த வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்.
இலங்கையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என பலரும் கேட்கிறார்கள். முகாம்களில் நாங்கள் மிருகக்காட்சி சாலை எதையும் நடத்தவில்லை. எனவேதான் வெளியாட்களை அனுமதிக்கவில்லை.
மீனவர்களை தாக்கவில்லை: இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் துன்புறுத்தப்படுவதாக தமிழக ஊடகங்களில் உண்மைக்கு மாறான செய்திகள் வருகின்றன. இது குறித்து இலங்கை கடற்படையை நாங்கள் தொடர்பு கொண்டு கேட்டோம். இது, எவ்வித அடிப்படையும் அற்ற, முழுவதும் உண்மைக்கு புறம்பான செய்தி என கடற்படை மறுத்துள்ளது.
இந்திய, இலங்கை கடற்படைகளுக்கு இடையே உள்ள நல்லுறவு, ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில், திட்டமிட்டு இதுபோன்ற ஊடக பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
இலங்கை மீனவர்களே அதிகம் கைது: இலங்கை ஒரு சுயசார்பான, சுதந்திரமான நாடு. அந்நாட்டின் கடல் எல்லையை பாதுகாக்க வேண்டியது கடற்படையின் கடமை.
எனவே இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக யார் நுழைந்தாலும் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை கடற்படை எடுத்து வருகிறது. அந்த வகையில்தான் இலங்கை கடல் எல்லையில் நுழையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். அதுபோல் இந்திய எல்லைக்குள் நுழையும் இலங்கை மீனவர்களும் கைது செய்யப்படுகின்றனர். கடந்த ஓராண்டில் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக 560 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் 100 இந்திய மீனவர்கள்தான் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டனர்.
கச்சத் தீவு எங்களுக்கே: கச்சItalicத் தீவுப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை இந்திய மீனவர்களுக்கு உள்ளதா, இல்லையா என விவாதிக்க எதுவும் இல்லை. கச்சத் தீவு என்பது இலங்கையின் ஒருங்கிணைந்த பகுதிகளில் ஒன்று. எனவே கச்சத் தீவு குறித்து இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்றார் கிருஷ்ணமூர்த்தி.
நன்றி: தினமணி (தமிழகம்)
வவுனியா ஆஸ்பத்திரியின் பதில் வைத்திய நிபுணர் உமாகாந் புலனாய்வுப் பிரிவினரால் கைதுயாழ் உதயன் 2009-10-02 05:57:44 வவுனியா பொது வைத்தியசாலையில் பதில் வைத்திய நிபுணராகக் கடமையாற்றிய டாக்டர் உமாகாந்த் நேற்றுமுன்தினம் இரவு வவுனியா இறம்பைக்குளத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றார் என வவுனியா வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கைது செய்யப்பட்டதை அரச வைத்தியர் சங்க வவுனியா கிளையின் பேச்சாளர் ஒருவர் உறுதி செய்தார்.அத்துடன், பதில் வைத்திய நிபுணராகக் கடமையாற்றிய இவரை அவரது பதவி நிலைக்கு ஏற்ற வகையில் நடத்த வேண்டும் என்றும், மேல் படிப்புக்காக விரைவில் வெளிநாடு செல்வதற்காக இருக்கும் அவரது தொழில் முன்னேற்றத்திற்குப் பாதகம் ஏற்படாத வகையில் விசாரணைகளை விரைவில் மேற்கொண்டு அவர் மீது குற்றமின்றேல் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அரச வைத்தியர் சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது என்றும் அந்தப் பேச்சாளர் தெரிவித்தார். வைத்திய நிபுணர் உமாகாந்த் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக தமது தாய்ச் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...