Thursday, 10 September 2009

வன்னி மக்களை மீளக்குடியமர்த்தக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

வன்னி மக்களை மீளக்குடியமர்த்தக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்
* வன்னி மக்களை மீளக்குடியமர்த்து!
* ஊடகவியலாளர் திஸநாயகத்தை விடுவி!
*தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வு வழங்கு!

வன்னி மக்களை மீளக்குடியமர்த்தக் கோரி கொழும்பில் நேற்று முதலாவது ஆர்ப்பாட்டம் பெரும் எண்ணிக்கையானோர் பங்குபற்றினர்
2009-09-10 06:56:09 யாழ் உதயன்
இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக் களை உடனடியாக மீளக் குடியமர்த்துமாறு கோரியும், ஊடகவியலாளர் திஸநாயகத்தை விடுவிக்கக் கோரியும், தோட்டத் தொழி லாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வு கோரியும் ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது.இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக் களை உடனடியாக மீளக் குடியமர்த்துமாறு கோரியும், ஊடகவியலாளர் திஸநாயகத்தை விடுவிக்கக் கோரியும், தோட்டத் தொழி லாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வு வழங்குமாறு வலியுறுத்தியும் கொழும் பில் நேற்று புதன்கிழமை நண்பகல் ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது.இடதுசாரி முன்னணி, ஐக்கிய சோசலிச கட்சி, தொழிற்சங்கங்கள், ஊடக அமைப் புகள் மனித உரிமை அமைப்புகள் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் அருட்தந் தையர்கள் ஆகி÷யார் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இடம்பெயர்ந்த மக்களின் அவல நிலைமைகளை வெளிப்படுத்தினர்.அரசு உரிய முறையில் நிவாரணங்களை வழங்கவில்லை எனவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும், சர்வதேச தொண்டு நிறுவனப் பணியாளர்களையும் அங்கு செல்ல அரசு அனுமதிப்பது இல்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர் கோஷங்களை எழுப்பினர்.குறிப்பாக முகாமிலிருந்து காணமற்போனதாகக் கூறப்படும் 10 ஆயிரம் பேரின் நிலைமை என்ன? என்பது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடோர் கேள்வி எழுப்பினர். பாதுகாப்புத் தரப்பினரே இதற்குக் காரணம் எனவும் குற்றம் சாட்டி கோஷமிட்டனர்.10,000 பேரின் நிலைமை என்ன?முகாமில் உள்ள மக்களின் அவல நிலைமைகளை வெளிப்படுத்தும் சு÷லாக அட்டைகள், பாதாதைகள் போன்றவற்றையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.இடம்பெயர்ந்த மக்களின் அவல நிலைமைகைளை வெளிப்படுத்தும் வகையில் கொழும்பில் முதன் முதலாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.அதேவேளை விலைவாசி உயர்வு மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வு வழங்க மறுக்கின்றமை குறித்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தினால் கோட்டை ரயில் நிலையப் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. பொலிஸாரும் இராணுவத்தினரும் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் இடது சாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து உரை நிகழ்த்தினார்.

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...