SHARE

Sunday, September 27, 2009

துர்ப்பாக்கிய 8 வயது அகதிக்கைதிச் சிறுமி மீது வவுனியாவில் துப்பாக்கிச் சூடு!

வவுனியாவில் அகதிக்கைதிகள் அரசபடையினர் மோதல்வவுனியா அகதி முகாம் பகுதியில் படையினர் - அகதிகள் நேற்று மோதல்!
Yall Uthayan 2009-09-27 06:41:37
வவுனியா முகாம்களில் தங்கியுள்ள அகதிகளுக்கும் படையினருக்கும் இடையில் நேற்று மாலை 5.30 மணியளவில் மோதல்கள் நடைபெற்றன.
அதன் காரணமாக பொதுமக்கள் மூவர் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அகதி மக்கள் ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு விறகு எடுக்கச் சென்றபோதே அவர்களுக்கும் படையினருக்கும் இடையில் மோதல்கள் உண்டாகின என்று சொல்லப்படுகின்றது. இந்த மோதல்களில் எட்டு வயதுச் சிறுமி ஒருத்தியும் மற்றும் இருவரும் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்து செட்டிக்குளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
வவுனியா இராமநாதன் முகாமிலிருந்து சிலர் அடுத்துள்ள ஆனந்தகுமாரசாமி முகாமுக்குச் செல்ல முற்பட்ட போது அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சில தகவல்கள் தெரிவித்தன. ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்குச் செல்ல முயன்றவர்களை பாதுகாப்புப் படையினர் தடுத்த போது, முகாமிலிருந்தவர்கள் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை எறிந்ததாகவும், அதையடுத்து தற்பாதுகாப்புக்காகப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இராணுவப் பேச்சாளர் உதயநாணயக்கார தெரிவித்தார்.

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு 08.01.2026 கலாநிதி நா.பிரதீபராஜா

  08.01.2026 வியாழக்கிழமை மாலை 5.30 மணி BIG BREAKING வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே பொத்துவிலில் இருந்து 236 கி.மீ. தென்கிழக்...