SHARE

Sunday, April 10, 2016

 “பஞ்சம் பிழைக்க வந்த சீமை”

 நூல் வெளியீடு



“பஞ்சம் பிழைக்க வந்த சீமை” நூல் வெளியீடு

மலையக மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் மு.சிவலிங்கம் எழுதிய “பஞ்சம் பிழைக்க வந்த சீமை” என்ற நூல் வெளியீட்டு விழா இன்று வட்டவளை அகரவத்தை மீனாட்சி தோட்ட எல்லை முனியான்டி கோயில் முன்றலில் நடைபெற்றது.

மீனாட்சி தோட்டத் தொழிலாளியான திருமதி.இராஜேஸ்வரி மகேஸ்வரன் தலைமையில் மலையக அரசியல் விழிப்புணர்வு கழகம் மற்றும் மலையக கலை,பண்பாட்டு மன்றம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் ஏ.லோறண்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வில் வரவேற்புரையை புவனேஸ்வரனும், நூல் அறிமுகவுரையை ஜீவன் ராஜேந்திரனும் நிகழ்த்தினர்.நூலின் ஆய்வுரையை  சூரியகாந்தி  பத்திரிகையின் ஆசிரியர் சிவலிங்கம்  சிவகுமாரன் மற்றும்
பேராசிரியர் சே.யோகராசா ஆகியோரும்  கருத்துரையை ஓய்வுபெற்ற தொழிலாளி வீ.பரமசிவமும், ஏற்புரையை நூலாசிரியரும் நிகழ்த்தினர்

No comments:

Post a Comment

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம். ஏப்ரல் 5, 2025 ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிமேதகு பிரதமர் ஸ்ரீ நரேந்த...