SHARE

Saturday, June 28, 2014

இனவாத அமைப்புக்களுக்குத் தடை, பெளத்த பல படையணிக்கு `` விடுதலை``!


தமிழ், முஸ்லிம் இனவாத அமைப்புக்களுக்கே தடை! - அரசாங்கம் 

 இலங்கையில்  இனவாத அமைப்புகள் என்ற பெயரில் செயற்பட்டுவரும் தமிழ், முஸ்லிம் அமைப்புகளைத் தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

சிறுபான்மையினருக்கெதிரான இனவாத தாக்குதல்களை மேற்கொண்டு வரும் பெளத்த பல படையணியை ( பொதுபல சேனாவை) த் தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது.

மேலும் பெளத்த பல படையணியை,  அரசாங்கமே பின்னின்று இயக்கி வருவதும் அம்பலமாகி வருகின்றது.

இந்த நிலையில் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில்
இலங்கையில் இனவாத, தீவிரவாத செயற்பாடுகளை முன்னெடுப்பதாகத்
தெரிவித்து ஒன்பது முஸ்லிம் அமைப்புகள், நான்கு தமிழ் அமைப்புகள் மற்றும்  கந்துடைப்பிற்கு ஒரு சிங்கள அமைப்பைத் தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும் இதில் பெளத்த பல படையணி அடங்கவில்லை.

இது தொடர்பான அறிவித்தல் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் வெளியாக வுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு 13-12-2025 கலாநிதி நா.பிரதீபராஜா

 13.12.2025 சனிக்கிழமை மாலை 4.30 மணி விழிப்புணர்வூட்டும் முன்னறிவிப்பு  இன்று முதல் எதிர்வரும் 16ஆம் தேதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்...