SHARE

Thursday, December 25, 2025

IMF அழிவுப் பாதையில் புதையும் அனுரா ஆட்சி

Cartoon Sunday Times Sunday, December 21, 2025

நிதி ஒழுக்கம், வர்த்தகக் கொள்கை குறித்து இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் உறுதியளிக்கிறது.

வியாழன், 25 டிசம்பர் 2025 FT LK

$206 மில்லியன் RFIக்கான விருப்பக் கடிதத்தில் அரசாங்கம்: 

  • புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதிக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள வர்த்தகக் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தவோ மாட்டோம் என்று உறுதியளிக்கிறது.
  • பட்ஜெட்டுக்கு பண நிதியளிப்பதை CBSL தவிர்க்கிறது

சர்வதேச நாணய நிதியம் (IMF) $206 மில்லியன் மதிப்பிலான விரைவான நிதி கருவியை (RFI) அங்கீகரித்ததன் மூலம், நாட்டின் பொருளாதார மீட்சியின் நிலைத்தன்மை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவை எதிர்கொள்ளும் அதே வேளையில், நிதி ஒழுக்கத்தைப் பேணுவதாகவும், திறந்த வர்த்தகம் மற்றும் பணம் செலுத்தும் முறையைப் பராமரிப்பதாகவும் இலங்கை IMF-க்கு முறையாக உறுதியளித்துள்ளது.


ENB-TENN
உலக வங்கி பேரழிவிலிருந்து ஆரம்ப சேதத்தை சுமார் $4.1 பில்லியன் என மதிப்பிட்டுள்ளது, அதே நேரத்தில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மொத்த பொருளாதார தாக்கத்தை $16 பில்லியன் என மதிப்பிட்டுள்ளது. இலங்கையின் செலுத்துகை இருப்பு (BOP) பற்றாக்குறை சுமார் $700 மில்லியன் அதிகரிக்கும் என்று IMF தனித்தனியாக கணித்துள்ளது.

டிசம்பர் 10 ஆம் தேதி RFI-க்காக சமர்ப்பிக்கப்பட்ட ஒரு நோக்கக் கடிதத்தில் (LOI) ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அனுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க ஆகியோர் இணைந்து கையொப்பமிட்டனர், பேரழிவின் அளவு, அதன் உடனடி நிதி பதில் மற்றும் அதன் IMF-ஆதரவு சீர்திருத்தத் திட்டத்திற்கு அடிப்படையான கொள்கை உறுதிமொழிகள் ஆகியவற்றை அரசாங்கம் விவரித்துள்ளது. 

அதிர்ச்சியின் அளவு இருந்தபோதிலும், நிதி விவேகத்தின் முக்கியத்துவத்தை அதிகாரிகள் வலியுறுத்தினர். "எங்கள் நிதி மற்றும் கடன் நிலைத்தன்மையைப் பாதுகாக்க விவேகத்துடன் இருப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம்," என்று LOI கூறியது. 

"அதன்படி, 2026 ஆம் ஆண்டில் ஒரு துணை பட்ஜெட்டை பரிசீலிப்பதற்கு முன்பு, பட்ஜெட்டிற்குள் செலவு மறுசீரமைப்பு மற்றும் மறு ஒதுக்கீடு மற்றும் தற்செயல் ஒதுக்கீடுகளைப் பயன்படுத்துவதன் மூலம் மீட்பு மற்றும் மறுகட்டமைப்பு தேவைகளை முதன்மையாக பூர்த்தி செய்வோம்."

அனைத்து அவசரகால செலவுகளும், தேவைப்பட்டால், 2026 துணை பட்ஜெட்டும், பொது நிதி மேலாண்மைச் சட்டத்துடன் முழுமையாக இணங்கவும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தரநிலைகளுடன் ஒத்துப்போகவும் பயன்படுத்தப்படும் என்று LOI மேலும் IMFக்கு உறுதியளித்தது.

பணவியல் கொள்கையில், IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) இன் கீழ் உள்ள உறுதிமொழிகளை அதிகாரிகள் மீண்டும் உறுதிப்படுத்தினர். "EFF-ஆதரவு சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் எங்கள் உறுதிப்பாட்டிற்கு இணங்க, CBSL பற்றாக்குறையின் பண நிதியளிப்பைத் தொடர்ந்து தவிர்க்கும்," என்று LOI கூறியது, மேலும்: "பாதுகாப்பு மதிப்பீட்டிற்கான புதுப்பிப்பை விரைவில் நாங்கள் வரவேற்கிறோம்."

அரசாங்கமும் திறந்த வெளிப்புற கட்டண முறையைப் பராமரிக்க உறுதியளித்தது. "தற்போதைய சர்வதேச பரிவர்த்தனைகள், வர்த்தக கட்டுப்பாடுகள் அல்லது பல நாணய நடைமுறைகளுக்கான பணம் செலுத்துதல் மற்றும் பரிமாற்றங்கள் செய்வதில் நாங்கள் புதிய அல்லது ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளை விதிக்க மாட்டோம் அல்லது நிதியத்தின் ஒப்பந்தக் கட்டுரைகளின் பிரிவு VIII உடன் பொருந்தாத இருதரப்பு கட்டண ஒப்பந்தங்களில் ஈடுபட மாட்டோம்" என்று LOI கூறியது.

இந்தப் பின்னணியில், இலங்கை RFI இன் கீழ் IMF இலிருந்து சுமார் $205 மில்லியன் அவசர நிதியுதவியை முறையாகக் கோரியது. EFF இன் கீழ் ஐந்தாவது மதிப்பாய்வு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய அரசாங்கம், "EFF-ஆதரவு பெற்ற சீர்திருத்தத் திட்டத்திற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், மேலும் ஐந்தாவது மதிப்பாய்வை விரைவில் முடிக்க IMF ஊழியர்களுடன் தொடர்ந்து ஈடுபடுகிறோம்" என்று கூறியது, நிதி மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பது, விலை மற்றும் நிதித் துறை ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல், வெளிப்புற இடையகங்களை மீண்டும் கட்டியெழுப்புதல், நிர்வாகத்தை வலுப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி சார்ந்த கட்டமைப்பு சீர்திருத்தங்களை முன்னெடுப்பது உள்ளிட்ட திட்ட நோக்கங்கள் மாறாமல் உள்ளன.

Wednesday, December 24, 2025

வேள்வி அமைப்பின் மலையக நிவாரணம்

 டிட்வா மலையக அனர்த்தம்- அம்பாறை மாவட்டத்தில் உதவி நிவாரணம்.

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்காக அம்பாறை மாவட்டத்திலிருந்து நிவாரண உதவி: 

இந் நிவாரணப் பணியானது அம்பாறை மாவட்ட மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் உத்தியோகஸ்தர்கள், நண்பர்கள்,தொண்டர்கள், வேள்விப் பெண்கள் அமைப்பினர், முன்பள்ளி ஆசிரியர்கள், இளைஞர் அமைப்புகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரது அயாராத பங்களிப்பின் பயனாகும். 

இப்பணியில் வேள்வி பெண்கள் அமைப்பினர், கிராமமட்ட மகளிர் குழுவினரிடம் சேகரித்த `சிறு துளிகள்` பெரும் முக்கியத்தும் உடையவை. மேலும் மிக மிக குறைந்த வருமானம் பெறும் முன்பள்ளி ஆசிரியர்களின் நிதி உதவி அளப்பரியதாகும். இத்துடன் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் வாழும் அனுதாபிகளின் உதவி பேருதவியாகும். 

டிட்வா சூறாவளி நாடு தழுவிய அனர்த்தம் என்ற போதிலும் இது மலையகத்தைப் பாதித்தவிதம் முற்றிலும் வேறானது.மலையகத்தின் கதை பூமி பிழந்த கதையாகும். மலையகமே சாய்ந்து சரிந்த கதையாகும்.மீள் கட்டுமானம் என்பது நீண்ட நெடிய பாரிய பணியாகும்.

ஆதலால் வேள்வியின் மலையகப் பணியானது இந் நிவாரணப் பணியோடு நிறுத்தப்படப் போவதில்லை. எமது மலையகப் பயணம் அம்மக்களோடு தொடர்ந்து பயணிக்கும்.

இந் நிவாரணப் பணியில் தோளோடு தோள் கொடுத்து நின்ற அனைத்து அன்பர்கள், ஆதரவாளர்கள், தொண்டர்கள், தோழர்கள், வளமானோர், வணிகர்கள் அனைவருக்கும் நமது மனமார்ந்த அன்பையும் நன்றியும் தெரிவித்து நிற்கின்றோம். மேலும் இவ்வேளையில் நமது தொடர்ந்த பயணத்துக்கு தங்கள் உதவியையையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம். 

வேள்வி பெண்கள் அபிவிருத்தி அமைப்பு

Velvi Women Development Organization 

நிதி கையளிப்பு

நிதிக் கணக்கெடுப்பு

ஆடைகள் தரம் பிரிப்பு


பொதியிடல்


லேபிலிடத் தயாராக


இளம் பெண் ஆடைகள்

லேபிலிடப்பட்ட பொதிகள்

நிவாரணப் பயணம்:

மலையகத்தை நோக்கிய எமது நிவாரணப் பயணம் 23-12-2025 அதிகாலை 4.00 மணியளவில் ஆரம்பித்தது. அன்று காலை நாம் கல்முனையில் இருந்து புறப்பட்டோம். முற்பகல் 11.00 மணியளவில் கண்டிக் காரியாலயத்தைச் சென்றடைந்தோம்.

நமக்காக ஒதுக்கப்பட்ட இடைத்தங்கல் முகாம் மண்சரிவு அபாயம் காரணமாக பல பகுதிகளில் சிறிய சிறிய அலகுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. இதனால் எல்லாப் பகுதிக்கும் செல்வது சாத்தியமற்றதாய் இருந்தது. 

கண்டி செல்லும் வழியில்

அதனால் நாம் முடிந்த சில பகுதிக்கு செல்வதோடு, மிகுதிப் பகுதிகளுக்கு விநியோகிக்கும் பொறுப்பை கண்டி நிர்வாகத்தினருக்கு கையளித்தோம்.

கண்டி அலுவலகம்


சாத்தியமான பகுதிகளில் மக்களை நேரடியாகச் சந்தித்து உதவிகளை வழங்கினோம்.



பேரிடரின் அனர்த்தம் நேரில் பார்ப்பதற்கு நெஞ்சைப் பிளப்பதாக இருந்தது.

அண்மைய பகுதிகள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகள், நிலம் கீழே போவதைப் பார்க்க முடிந்தது.

செல்லவேண்டிய இடத்துக்கு வாகனத்தில் செல்ல இயலவில்லை. பொதிகளை நாமே தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது.

நாம் ஏற்கெனவே களைத்துப் போய்விட்டோம்.

ஒரு பகுதிக்கு ஓட்டோ மூலம் எடுத்துச் செல்ல வாய்ப்புக் கிட்டியது.


மிகுதியை ஒருவாறு சுமந்து சென்று எமது இலக்கை அடைந்தோம்.

அது ஒரு சிறிய பாடசாலை, ஆரம்பப் பிரிவுப் பாடசாலை, கண்டி நகரில் இருந்து ஆக 28 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள காட்டுத் தோட்டப் பிரதேசம். தெல்தோட்டை என்பது அதன் அழகான பெயர். இங்குதான் இருக்கின்றது இந்த அப்பகலகா தோட்டம். இப் பாடசாலையின், சுமார் 2500 சதுர அடிப் பகுதிக்குள் 48 குடும்பங்கள்! பெற்றோர் பெண்கள், இளம் பெண்பிள்ளைகள், சிறுவர்கள்,குழந்தைகள் அடங்கலாக 234 பேர். பெண்களின் தனித்துவமான பாதுகாப்பு, பராமரிப்பு, விசேடமாக மாத சுகவீன காலத்தில் பெண்களுக்கு தேவையான ஓய்வு, அதற்கு வேண்டிய சுகாதார பொருட்கள், இதற்கான ஒழுங்கமைப்பு எதுவும் இருக்கவில்லை.

உடமையை இழந்தவர்கள், உறவுகளை இழந்தவர்கள், மன அழுத்தத்தில் வார்த்தையின்றி பிரமை பிடித்தவராக சுவர் ஓரத்தில் ஒதுங்கியிருப்பதை அவதானிக்க முடிந்தது. 

இளவயதினர் எதிர்காலம் தங்களுக்கு கிடையாது என்கிறார்கள், காரணம் அவர்கள் பிறந்து வளர்ந்த இடம், அபாய பூமியாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. புதிய இடத்தில் தங்களுடைய வாழ்வாதாரம் எப்படி அமைக்கப்படும் என அச்சப்படுகிறார்கள்.


இவர்களுடைய வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு வேண்டிய  தரவு சேகரிக்கும் பணியே அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. இருந்த போதிலும் தற்காலிகமாக முகாம்களை அமைத்து உணவு மற்றும் சுகாதார சேவைகளை இயன்றவரை வழங்குகின்றது.

மறுபுறம் டித்வா புயலால் தொழில் பாதிப்படைந்த மக்கள், நாடு தழுவிய வகையில், நாட்டின் சனத்தொகையில் சரி பாதிப்பங்கினர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களும் அடிப்படை வாழ்க்கைத் தேவைகளுக்கு சிரமப்படுகிறார்கள் என்பதில் மாற்று கருத்திற்கு இடமில்லை. ஆனால் இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்தவர்களுடன் இவர்களை ஒப்பீட்டளவில் சமமாக கருத முடியாது. அரசிடமும், சமூக சேவை அமைப்பினரிடமும் நிவாரண தேவைக்காக இரண்டாம் நிலையில் உள்ள தொழில் பாதிக்கப்பட்டவர்கள், வறுமையில் தள்ளப்பட்டவர்கள் இடைத்தங்கல் முகாமில் இருப்பவர்களை புறம்தள்ளி நிவாரணத்திற்கு தங்களை முதன்மைப்படுத்துவது, பற்றாக்குறையான இத் தருணத்தில் பாரிய இழப்பை சந்தித்த முகாங்களில் தஞ்சமடைந்தவர்களுக்கும் சேவை செய்வோருக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது. இது வருத்தமான விடயமாக மாறியுள்ளது.

பாரிய இழப்பை சுமந்து இடைத்தங்கல் முகாங்களில் உள்ள மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கும்,இளம் பெண் பிள்ளைகளுக்கும் உளவளதுணை அவசியமான தேவையாகவுள்ளது. 

அத்துடன் இடைத்தங்கல் முகாம்களில் இருப்பவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு வேண்டிய அடிப்படை தேவைகள் பல பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

சிறார்களின் கல்வி தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படல் வேண்டும். இடைத்தங்கல் முகாமாக பெரும்பாலும் பாடசாலை பயன்படுத்தப்படுவதால் அந்தப் பாடசாலையின் மாணவர்கள் மற்றும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் மாணவர்கள் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 

அங்கு பேசிய மக்களின் - பெண்களின் கருத்திற்கமைவாக  இப்பிரதேசம் ( தெல்தோட்டை-அப்பகலகா தோட்டம்), 2016 ஆம் ஆண்டிலேயே சமூக சேவை நிறுவனங்களின் நிலவள ஆய்வு அறிக்கையூடாக அன்றைய அரசுக்கு, சிவப்பு எச்சரிக்கை பகுதியாகவும் எந்த நேரத்திலும் அனர்த்தம் நிகழலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டதை அறிய முடிந்தது. 

இது அதிர்ச்சி அளிக்கும் உண்மையாகும்.

அன்றைய மக்கள் தலைவர்களுக்கு, ஆட்சியாளர்களுக்கு, மக்களைப் பற்றிய கரிசனை,  தன் கடமையை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒரு சிறிய அளவிலாவது இருந்திருந்தால் இன்றைய அவலநிலை கணிசமான அளவு தவிர்க்கப்பட்டிருக்கும்.

இதற்கு யார் பொறுப்பு?


எமது நேரடி அனுபவத்தில், கண் கண்ட சாட்சியத்தில் நாம் கருதுவது:
  • இது உடனடி எதிர்காலத்தில் தீர்வு காணக்கூடிய பிரச்சனை இல்லை என்பது மட்டும் உறுதி.
  • இந்தப் பகுதிகளில் இனிமேல் மக்கள் மீளக் குடியமர்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.
  • வேள்வியின் தொடர்ந்த பணியின் அவசியத்தை இந்தப் பயணம் நன்கு உணர்த்தியது.


நிவாரணப் பொதிகளை இறக்கி விட்டு, எதிர்காலப் பணியின் சுமையோடு அன்று பிற்பகலே கனத்த மனத்தோடு கல்முனை நோக்கிப் புறப்பட்டோம். மீண்டும் மறு நாள் அதிகாலை வந்தடைந்தோம்.

எமது பயணத்தில் ஒத்துழைத்த அனைவருக்கும் குறிப்பாக நமது வாகன சாரதிக்கும் எமது மனமார்ந்த நன்றி24-12-2025    

                          நன்றி                              

மூலம்: சமூக ஊடகம்


வேள்வி மலையக நிவாரண உதவிப் படத் தொகுப்பு

Tuesday, December 23, 2025

Sri Lanka Floods-Related videos

 

Sri Lanka Floods-Related videos




7:57:49
Sri Lanka Floods LIVE: Over 10 Dead in Sri Lanka as Storm 'Fengal' Heads Towards India
YouTube
Firstpost
41.9K views
28 Nov 2024
1:55
Sri Lanka floods: At least 134,000 people affected by raging waters
YouTube
Al Jazeera English
23.9K views
15 Oct 2024
0:36
Heavy rains in Sri Lanka
YouTube
Reuters
9.1K views
28 Nov 2024
2:20
Scores killed in Sri Lankan floods and landslides
YouTube
Al Jazeera English
25.9K views
27 May 2017
1:02
Sri Lankan flooding, landslides kill at least 12
YouTube
The Star
1.4K views
28 Nov 2024
2:38
Sri Lanka floods: Dozens are killed and injured in heavy downpours
YouTube
Al Jazeera English
14.4K views
12 Nov 2021
1:37
Sri Lanka floods: At least 12 dead, 5 missing as heavy monsoon rains batter island nation
YouTube
Global News
12.8K views
3 Jun 2024
0:24
Sri Lanka Floods And Mudslides
YouTube
Omar Agamy
111.6K views
3 Jun 2024
1:00
इस Disaster को Sri Lanka की One Of the Worst Maritime Disaster क्यों बोला जाता है 🤔#shorts #ytshorts
YouTube
UltiFacts
3M views
26 Mar 2022
1:18
Sri Lanka floods explained: Why is the nation under water?
YouTube
WION
20.2K views
27 May 2017
0:53
Sri Lanka flood: Death toll reaches 100
YouTube
WION
17.6K views
27 May 2017
2:37
Sri Lanka: Air force steps in to help rescue flood victims as toll rises
YouTube
Al Jazeera English
19.2K views
29 May 2017
0:59
Raw Video: Sri Lanka Hit by Deadly Flooding
YouTube
Associated Press
25.6K views
6 Feb 2011
11:54:58
Sri Lanka Flood Live | Sri Lanka Flood Today | Sri Lanka 2024 Aftermath | N18G
YouTube
CNN-News18
48.8K views
28 Nov 2024
1:52
Sri Lanka: Four Children Die As Heavy Rains Trigger Flooding | WION Climate Tracker | World News
YouTube
WION
29.4K views
28 Nov 2024
3:03
Sri Lanka Floods : Sri Lanka Hit By Serve Flooding | At least 8 missing and 1 dead | News9
YouTube
NEWS9 Live
8.6K views
27 Nov 2024
4:58
Sri Lanka Flood News Today 2024 | Several Dead As Storm Causes Floods, Landslides | N18G
YouTube
CNN-News18
60.1K views
29 Nov 2024
1:53
Sri Lanka floods: Residents afraid as more rain forecast - BBC News
YouTube
BBC News
47.9K views
29 May 2017
2:41
කැළඹුණු කාලගුණයේ අලුත්ම තත්ත්වය | Disturbed weather #srilanka #weather
YouTube
Newsfirst Sri Lanka
13.5K views
25 Nov 2024
4:45
ලංකාවටම ඉදිරි පැය කිහිපය තීරණාත්මකයි - මෙය සුළි කුණාටුවක් වේවිද | Hurricane Warning For Sri Lanka
YouTube
SL Idea
74.4K views
27 Nov 2024
Heavy rainfall in Sri Lanka and South India | Weather Report | International News | Waterlogging
YouTube
WION
16.5K views
10 Nov 2021
Sri Lanka Flood Live | Sri Lanka Heavy Rain Today | இலங்கையில் கொட்டித் தீர்த்த கன மழை | N18G
YouTube
News18 Tamil Nadu
35.4K views
29 Nov 2024
3:20
Sri Lanka News: Flash Floods & Landslides Disrupt Life In Sri Lanka Amid Cyclone Fengal | N18G
YouTube
CNBC-TV18
5.9K views
29 Nov 2024
Sri Lanka crisis: PM declares state of emergency as President flees
YouTube
Al Jazeera English
175.4K views
13 Jul 2022
1:47
Cyclone Mora: Deadly weather hits Bangladesh and Sri Lanka
YouTube
TRT World
90K views
30 May 2017
2:05
At least 193 killed by monsoon flooding, landslides in Sri Lanka
YouTube
CGTN
12.8K views
31 May 2017
3:39
169 dead due to floods and landslide in Sri Lanka | श्रीलंका में बाढ़, भूस्खलन से 169 की मौत
YouTube
Zee News
1.1K views
30 May 2017
3:31
Heavy rainfall in Sri Lanka, depression to reach North Tamil Nadu coast | World News | WION
YouTube
WION
17.3K views
10 Nov 2021
0:09
Defender damage sri Lanka
YouTube
Defender shows
5.1M views
4 Oct 2019
6:37
Flooding across various parts of Sri Lanka (English)
YouTube
Ada Derana
19.8K views
28 May 2017
2:14:16
Live: Floodwater inundates Sri Lanka, leaves 8 missing and 1 dead | N18G
YouTube
moneycontrol
8.2K views
27 Nov 2024
0:21
Many die and are displaced in Sri Lanka floods
YouTube
euronews
821 views
24 Dec 2012

2025 – Where Do We Go from Here?

  Looking Towards 2026 – Where Do We Go from Here? August 12, 2025 By Jerry Haar and  Altuğ Ülkümen The business environment in 2026 will be...