SHARE

Tuesday, September 24, 2024

ஜனாதிபதியின் பதவிப் பிரமாண உரை( தமிழ்)

 அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம்.

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.


பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்⍐.

மூலம்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு-தமிழ்

Parliament to be dissolved tonight

 Parliament to be dissolved tonight



* An interim cabinet of four ministers to be appointed today

* Dr. Harini Amarasuriya to be appointed as Prime Minister

* Parliamentary Election to be held in December

* If NPP wins, new PM will be the one who gets highest votes and gathers most support in Parliament

* President to keep key portfolios such as Finance, Justice, Tourism, Investment Promotion

By JAMILA HUSAIN and AJITH SIRIWARDENA   Tamil Mirror Tue, 24 Sep 2024

Parliament will be dissolved tonight and a Parliamentary Election will be held by December, the Daily Mirror exclusively learns.

Following the resignation of Dinesh Gunawardena as the Prime Minister yesterday, a senior source from the National People’s Power (NPP) said that President Anura Kumara Dissanayake will today appoint an interim cabinet of four ministers, including himself, where 15 portfolios will be divided within them.

According to a list exclusively obtained by the Daily Mirror, President Dissanayake will keep the Tourism, Defence, Finance, Justice, Industry and Investment Promotion portfolios while the Prime Minister will become the Minister of Foreign Affairs, Education, and Mass Media among others.


NPP MP Dr. Harini Amarasuriya will be sworn in as the Prime Minister while senior MP Vijitha Herath and newly sworn-in MP Lakshman Nipuna Arachchi will be appointed as ministers with several portfolios each.

Nipuna Arachchi took his oaths as an MP yesterday, filling the vacancy created by Anura Kumara Dissanayake in the Colombo electorate.

Sources from the NPP camp said that a Parliamentary election will be held after two months, that is in December, and after the President dissolves Parliament he will set the date as to when nominations will be called. After this date, the Elections Commission will give a period of 10 to 17 days to call for nominations.

After President Dissanayake dissolves Parliament, he will also announce the date of when the new Parliament will convene after the Parliamentary Election, which is likely to be in January.

President Dissanayake who was sworn in as the 9th Executive President yesterday morning following his victory in the Presidential Election met the tri-forces commanders for a meeting soon after and then his senior party members.

He then travelled to the Sri Dalada Maligawa in Kandy to seek blessings and then travelled to Tambuttegama to see his aged mother.

The Daily Mirror learns that after he dissolves Parliament tonight the NPP will plan to begin their campaign for the Parliamentary Election.

If the NPP wins the Parliamentary Election in December, the Daily Mirror learns that the MP who has won the highest number of votes from his or her electorate and who wins the highest support among the government parliamentarians will be appointed as the new Prime Minister⍐.


Friday, September 20, 2024

முள்ளிவாய்க்கால் வீரகாவியம்

 செவ்வணக்கம் மாண்ட நம் மக்களே, மாவீரத் தோழர்களே!

இடைவழிச் சமரசங்களைத் தோற்கடிப்போம்!
ஈழம்காண இறுதிவரை ஊற்றெடுப்போம்!!

அன்பார்ந்த தமிழீழ மக்களே,மாணவர்களே, இளைஞர்களே,

முப்பது ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தில், நடந்த வீரப் போர்களில், அவை வேண்டிய தியாக வேள்வியில், எதிரிகளைப் படிப்படியாகத் தோற்கடித்து நாம் ஓர் அரசை உருவாக்கியிருந்தோம்.

மே 18 2009, பிரபாகரன் கட்டியெழுப்பிய அந்த சுதந்திர தமிழீழ அரசு, எதிரிகளிடம் சரணடையாமல், சண்டையிட்டு சரிந்து சாவைத் தழுவிக் கொண்ட சரித்திர நாளாகும்.

இதனால் தமிழீழ தேசமும்- போராடும் உலகமும் அதிர்ச்சிக்குள்ளான நாளாகும்.

‘’புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’ என முழங்கி அடிமைப்பட்டுக் கிடந்த ஈழத் தமிழினத்தை தூக்கி நிறுத்த முப்பது ஆண்டுகள், முந்நின்று வரலாறு காணாத சுய தியாகத்துடன், ஆயுதமேந்திப் போராடி, விடுதலைப் புலிகள் படைத்த வீர காவியத்தின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்ட நாளாகும்.


ஆனையிறவுப் பெரும்படைத்தளத்தை நொருக்கி, சிங்களத்தைப் பிரபாகரன் தன் காலடியில் வீழ்த்தி, தமிழீழக் கொடி நாட்டி நின்றபோது,'' யாழ்ப்பாணம் நோக்கி முன்னேறுவதை கைவிடுங்கள், 'அக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில்' ''பேசிப் பிரச்சனையைத் தீருங்கள்'' என அமைதி நாடகமாடி, ஆசைகாட்டி, இந்திய விஸ்தரிப்புவாத அரசின் சதித் திட்டத்தின் பின்னணியில், அமெரிக்காவும், ஐரோப்பியன் ஜுனியனும் ஏவிவிட்ட நோர்வே; அரங்கேற்றிய சதி அமூலான இறுதி நாளாகும்.

இதன் விளைவாக முள்ளிவாய்க்காலுக்குள் முடக்குண்டது தமிழீழம். முள்ளிவாய்க்கால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த போது, இனப்படுகொலை அரங்கேறிக் கொண்டிருந்தபோது, எதிரி மூர்க்கத்தனமாக தமிழீழ தேசத்தை ஆக்கிரமிக்க, விச வாயு கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தபோது, நாளுக்கு நானூறு தமிழன் பிணமாகி புதைக்க வழியின்றி புழுத்துக்கிடந்தபொழுது, பக்ச பாசிஸ்டுக்கள் யுத்தக் குற்றங்களை இழைத்துக் கொண்டிருந்தபோது,எம்மை ஆயுதங்களை ஒப்படைத்து இலங்கை அரசிடம் சரணடையுமாறு, ஒபாமாவின் அமெரிக்காவும், ஈரோப்பியன் யூனியனும், நடு நிலையாளன் நோர்வேயும், ஐ,நா,சபையும், புனித பாப்பரசரும் பகிரங்கமாக அறிக்கை விட்டு, பச்சை நிர்வாணமாக பக்ச பாசிஸ்டுக்களின் பக்கம் நின்ற நாளாகும்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமது ஆதிக்க நலன்களுக்கு எதிராக இருந்த பிரபாகரனின் தமிழீழ அரசை கவிழ்க்க; ஜப்பானும், சீனாவும், ரசியாவும் அள்ளி அள்ளி வழங்கிய ஆயுத உதவி, முள்ளிவாய்க்காலில் இரத்தக் காட்டேரியாய் ஒடி உறைந்த நாளாகும்.

வெட்கம் கெட்டவிதமாக இஸ்ரேலும் ஈரானும் ஒரு சேர அளித்த இராணுவ உதவி தென்னாசியாவின் விடுதலைத் தீயை அணைத்த நாளாகும்.

ஆளும்வர்க்க ஏஜென்டுகளான ஐரோப்பிய ராஜதந்திரிகள், பத்திரிகையாளர்கள் தாம் வீசிய பாசக் கயிற்றை சுருக்கிக்கொண்ட நாளாகும்.

பொங்கியெழுந்த ஈழத்தமிழர்க்கு இன்னல் விளைய புலிகளின் தமிழகப் பினாமித் தரகர்கள் (வை கோ, நெடுமாறன், ராமதாஸ்,திருமாவளவன் கும்பல்), மன் மோகன் சோனியா கும்பலுடன் சதித்திட்டம் தீட்டி சங்காரம் நிகழ்த்திய நாளாகும்.

தமிழக மக்களின் குமுறலை அடக்க திரைமறைவு நாடகங்கள் அரங்கேறிய நாளாகும்.முத்துக்குமாரனை அவசர அவசரமாகப் புதைக்க வித்திட்ட நாளாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக உலக மறுபங்கீட்டிற்கான அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு துகிலுரிந்து நடனமாடும், மன்மோகன் - சோனியாவின் பாஞ்சாலி தேசம் விசவாயு வீசி நமது விடுதலை விருட்சத்தை வேரறுத்து, இந்திய விஸ்தரிப்புவாத நலன்களை உத்தரவாதம் செய்து கொண்டநாளாகும்.

இத்தனை பக்கபலத்தோடும், கே. பத்மநாதன் உருத்திரகுமாரன் கும்பலின் காட்டிக்கொடுப்போடும், களமுனையில் நின்ற கருணாவுக்காதரவான தளபதிகளின் தகவல்களைத் திரட்டியும், அன்ரன் பாலசிங்கத்தைக் கொண்டு போராட்டத்தலைமையின் சிறுமுதலாளித்துவ ஊசலாட்டங்களின் விளைவான அரசியல் பலவீனங்களைப் பயன்படுத்தியும், ஒரு இனப்படுகொலையை நடத்தி விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கிளர்ச்சியை வெற்றி கொண்டுவிட்டதாக சிங்கள இனவெறிப் பாசிச சிறீலங்கா அரசு பிரகடனம் செய்திட்ட நாளாகும்.

இந்நாளில் தான், இந்த எரிமலையின் விளிம்பில் தான் தமிழீழ விடுதலையின் எதிரிகளை, ஈழமக்கள் நடைமுறையில், ஒரு சேர கண்ணெரியக் கண்டார்கள்.

நமது ஆஸ்தான புலவன் புதுவை இரத்தினதுரையின் எழுதலுக்கு அறைகூவும் அழுகையில் இருந்து, ஐரோப்பா எங்கும் தமிழரின் எழுகை வரை, அவர்கள் எழுப்பிய ‘’யுத்த நிறுத்தக் குரல்’’ , தமிழீழ அரசு ஸ்ரீலங்கா அரசின் காலடியில் வீழும் வரை யார் காதிலும் விழவில்லை.

இக்காரணங்களால் இவ்வீர காவியத்தின் முதற்பகுதி எழுதி முடிக்கப்பட்ட மே18 2009, தமிழீழத்தின் அரசியல் வரலாற்றில் சிறப்புமிக்க தினமாகும்.

இத்தினம் தமிழீழ அரசியல் வரலாற்றில் புதிய பாதையைத் திறந்துவிட்ட புரட்சித் தினமாகும்.

மே 18 2010 இவ் வீரகாவியத்தின் ஓராண்டு நினைவைக் குறிக்கின்றது.

இவ்வீரத் திருநாளில் தமிழீழ மக்கள் எடுத்துக் கொள்ளவேண்டிய சபதம் மே 18 2009 இல் வீழ்த்தப்பட்ட விடுதலைப்புலிகளின் தமிழீழ அரசை மீண்டும் போராடி வென்றெடுத்து ஒரு புதிய தமிழீழ மக்கள் ஜனநாயக் குடியரசை நிறுவுவதாகும்.

மாறாக மக்களைக் கவர ‘’முள்ளிவாய்க்கால் நினைவாக’’,என முகத்திரையிட்டு, அதை அரங்கேற்றியவர்களிடம் "இனப்படுகொலை’’ என்று முறையிட்டு,

மே 18 ஐ “யுத்தக் குற்ற நாள்” என அறிவித்து, ஈழத்தில் யுத்தக் குற்றங்களை நிகழ்த்தியவர்களிடம், கொசோவோவிலும், பாலஸ்தீனத்திலும், ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், இந்திய,பாகிஸ்தான் பழங்குடிப் பிரதேசங்களிலும் யுத்தக்குற்றங்களை இன்றும் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருப்பவர்களிடம், அதற்கு நீதி வேண்டி மண்டியிடுவது,

இத்தியாதி முழக்கங்களை முகப்பில் வைத்துக் கொண்டு, சாவீடு கொண்டாடுவது, சர்வதேசத்துக்கு முறையிடுவது, மெழுகு வர்த்தி ஏந்தி பொழுது போக்கும் ''போராட்டம்'' நடத்துவது,அமைதிப் பிராத்தனை செய்வது, மற்றும் தமிழீழ அரசை நிர்மூலமாக்கிய இனவெறிப் பாசிச சிறீலங்கா அரசு,இந்திய விஸ்தரிப்புவாத அரசு, அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசுகளோடு கூட்டமைத்து, தமிழீழ விடுதலைக்கெதிராக கேடு கெட்ட சமரசங்கள் செய்ய, ''நாடுகடந்த அரசாங்கம்'' என்ற போர்வையில் நாடகமாடுவது, இவை அனைத்தும் தமிழீழ விடுதலைப் போர், தவிர்க்க இயலாமல் சந்தித்த வரலாற்று நெருக்கடியின் விளைவான, தற்காலிக பின்னடைவையும், தேக்கத்தையும் நிரந்தர தோல்வியாக்கி சிங்களத்தின் அடிமை நுகத்தடியின் கீழ்,தமிழீழ தேசம் நசுங்கி மடியவே வழி கோ லும்.

இல்லை என்போரின் ''விழ விழ எழுவோம்'' என்ற வீர வசனங்கள், கவைக்குதவாதவை, ''தரத் தர விழுந்ததற்கு'' காரணம் தேவை. அதிர்ச்சிக்குள்ளான தேசத்தின் இக் கேள்விக்கு பதில் தேவை. நாம் கசாப்புக்கடை நடத்தவில்லை, கடமையும் பொறுப்பும் மிக்க விடுதலைப் போரை நடத்துகின்றோம்.நிலத்திலும் புலத்திலுமாக நாற்பது இலட்சம் மக்களின் எதிர்காலம் நம் கைகளில் இருக்கிறது.. முப்பது ஆண்டுகள் களமாடியிருக்கின்றோம். இரண்டு இலட்சம் மக்களைப் பலிகொடுத்திருக்கின்றோம்.15 இலட்சம் மக்கள் நாடு கடந்து அகதிகளாய் உள்ளனர். நாட்டுக்குள் சமூக இருப்பு சின்னாபின்னப்படுத்தப்பட்டு விட்டது. குடும்பங்கள் தலைவேறு, கால்வேறு, கைவேறு என பிய்த்து எறியப்பட்டுவிட்டன. விவசாயிகளிடம் நிலம் இல்லை, கால் நடைகள் இல்லை, பணம் இல்லை. எங்கு பார்த்தாலும் ஊனம், கொத்துக் குண்டில் வெடித்துச் சிதறிய தந்தையின் தலையை மரக்கொப்பில் பார்த்த மைந்தன், இறந்த தாயின் மார்பில் பசியாறிய மழலை,காப்பாற்றி விட்டேன் என்ற நம்பிக்கையில் தோளில் தொங்கிய குழந்தையை பிணமாகக் கண்ட தாய், இக்கோர நிகழ்வுகளால், அதன் நினைவுகளால் பிரமை பிடித்துக் கிடக்கிறது நம் மண், அதன் மக்கள். எத்தனை பேர் என்று கணக்குத்தெரியாமல், ஒரு உத்தேசம் 10 ஆயிரம் போராளிகள்(!), பக்சபாசிஸ்டுக்களின் பிடிக்குள் சிக்கிவிட்டார்கள்.அண்ணன் வளர்த்த அற்புதக் குழந்தைகள், தங்கத் தமிழீழத்தின் வீர மறவர்கள், சுதந்திரத்தீ மூட்டிய சுந்தர வதனங்கள், சிறைப்பட்டுக் கிடக்கின்றார்கள். சிறையுள் கொலை நடக்கின்றது,சித்தரவதை நடக்கின்றது, பாலியல்பலாத்காரம் நடக்கின்றது.சிறுவர் சிறுமியர்களுக்கு பாதுகாப்பில்லை. செஞ்சோலை கட்டி வளர்த்த செல்வங்கள், இன்று உல்லாசத்துறைக்கு உபசரிப்புப் பண்டங்கள் ஆகிப்போனார்கள்.38 ஆயிரம் மாவீரர்களை விதைத்தோம். கோவில் கட்டி துதித்தோம்.புதைகுழியில் இருந்து பிடுங்கி எடுத்து எச்சில் இலை போல குப்பைத்தொட்டியில் வீசப்பட்டுக் கிடக்கின்றார்கள் நாங்கள் கும்பிட்ட தெய்வங்கள்.ஒரு மாவீரன் தூங்க மண்ணில்லை எங்களிடம்.தரணி போற்ற தமிழனுக்கு ஒரு நாடு காணப் புறப்பட்டவனின் தாய்வீடு தரைமட்டமாகி கிடக்கின்றது.இதற்கெல்லாம் தார்மீகப் பொறுப்பேற்று பதில்காண எந்த ஒரு மதிஉரைஞரும் முயலவில்லை, இதுவரை முன்வரவில்லை.சொல்லப் போனால் இந்தக் கேள்வியை உணர்ந்து மதிக்கவேயில்லை, மெள னமாக மறுத்து விட்டார்கள்.மறைத்து விட்டார்கள்!

2002 தேர்தலில் ''மக்களால்" தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்புக் கும்பல் TNA, புலித்தோல் போர்த்த பசு, இந்திய ஆதரவு,ஐக்கிய இலங்கை, அதிகாரப் பரவலாக்கம், பொலிஸ் அதிகாரம் எனப் பொறுக்கித்தனமாகப் பிதற்றுகிறது.யுத்தக் குற்றவாளிகளோடு கொஞ்சிக் குலாவுகின்றது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததற்கு நன்றி தெரிவிக்கின்றது.''மாவீரர்கள் கொலைகாரர்கள்'' என்று சொல்லும் பாரம்பரிய கொள்ளைக் கைத்தொழில், சிறு கொலைத் தொழில் அமைச்சர் டக்ளஸுடனும், 'குட்டிக்கும் புட்டிக்கும்' விலைபோன கருணாவுடனும்,இந்தியக்கைக் கூலிகள் வரதராஜப் பெருமாள், சந்திரகாசன் உடனும் "தேசியக் கூட்டமைத்து'' (!) இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு சேவகம் செய்ய அணிதிரள்கின்றது.

புலிக்கொடி பறந்த போது அவர்களுக்கு கைகட்டி வாய்பொத்தி சேவகம் செய்த உடமை மற்றும் அதிகாரவர்க்க கும்பல், அறிவாளிகளின் திரள், புலிகளின் அதிகாரம் வீழ்ந்ததைக் கண்டு தனது அணியை சடுதியாக மாற்றிக் கொண்டுவிட்டது. ஈழத்தில் இக்கும்பலின் ஒரு பிரிவு நேரடியாகவே பக்ச பாசிஸ்டுக்களுடன் அணி சேர்ந்துவிட்டது.கிளிநொச்சியில் யுத்த வெற்றி விழா கொண்டாட படையாகத் திரள்கின்றது.இவ்வாறே,புலம்பெயர் நாடுகளில் ஒரு புல்லுருவிக் கும்பல், ஏகாதிபத்தியவாதிகளோடு கூட்டமைத்து, தமிழீழ விடுதலைக்கெதிராக கேடு கெட்ட சமரசங்கள் செய்ய, ''நாடுகடந்த அரசாங்கம்'' என்ற போர்வையில் நாடகமாடுகிறது, பாராளமன்றங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் பிரகடனங்கள் செய்கின்றது. (கள்ள வாக்குகள் போட்டு) மோசடித் தேர்தல்கள் நடத்துகின்றது.

எதிரிகளின் பாசறையில் இருந்து எமக்காக் குரல் கொடுப்பதாகப் பசப்புகின்றது.

கொசோவோத் தமிழீழம் காணப்போவதாகக் கொக்கரித்த இவர்கள் எவரிடம் இருந்தும், இந்நிலைக்கு நாம் எவ்வாறு ஆளானோம் என்கிற கேள்விக்குப் பதில் இல்லை. சொல்லப் போனால் அப்படி ஒரு கேள்வியே இல்லை.ஏனைனில் இதற்கான பதில் இவர்களின் நலன்களுக்கு எதிரானதாகும்.மே 18 பிரளயம் நடந்து இப்போதுதான் ஒரு வருடமாகின்றது.அதற்குள் நிலத்திலும்,புலத்திலும் ஈசல் போல் தேர்தல்கள்; அத்தனைக்குப் பின்னாலும் இவர்கள், ஆளும் கும்பல்களுக்கு ஆலவட்டம் பிடித்தபடி..அடிமைகள் நாம் என்று நாமம் இட்டபடி!!

எனினும் இந்தக் கேள்வி தன்னை மீண்டும் மீண்டும் பிடிவாதமாக முன்நிறுத்தியவண்ணமே இருக்கும்.இதற்குப் பதில் அளிக்காத எந்த மயிர் உரைகளும், நைந்த நிறுவனங்களும் மன்னிக்கத்தகாதவை.ஒரு சல்லிக்கும் உதவாதவை.

மே 18 ஒரு திருப்பு முனை.

மே 18 இற்குப் பிந்திய சர்வதேசிய உள்நாட்டு அரசியல் நிலைமையும்,நமது உடனடி நடைமுறைப் பணிகளும்.

உள்நாட்டு அரசியல் நிலைமை:

1983 இல் ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் உள்நாட்டு யுத்தமாக மாறியது முதல், இலங்கை அரசு தனது பாசிச இன ஒடுக்குமுறை யுத்தத்தை பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்றே கூறிவந்தது. 2009 இல் யுத்தத்தின் இறுதிமாதங்களில் தனது இனப்படுகொலையையும், யுத்தக் குற்றங்களையும் ‘ பயங்கரவாதிகளிடமிருந்து மக்களை விடுவிக்கும் மனிதாபிமானப் பணி என வர்ணித்தது. இந்த யுத்தத்தில் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டார்கள். அவர்களின் அதிகாரம் முழுதாக இலங்கை அரசின் முன் விழுந்தது. மே 18 2009 இல் முழு நாட்டின் மீதும் இலங்கை அரசின் அதிகாரம் மீண்டும் நிலை நாட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமைதி வழியில் அரசியல் தீர்வுகாண்பது, ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படையில் தீர்வு காண்பது, என்ற மாயை ஏகாதிபத்தியவாதிகளாலும், இந்திய விஸ்தரிப்புவாத அரசாலும், இவர்களது உள்நாட்டு மற்றும் புலம் பெயர் அடிவருடிகளாலும் பரப்பப்பட்டு வருகின்றது.

ஆனால் உண்மை நிலை என்ன? இலங்கையில் தமிழர்களின் தேசிய இனப்பிரச்ச னையானது அதிகாரக் கைமாற்றத்துக்குப் பிந்திய முதல் முப்பது ஆண்டுகளில் பாராளுமன்ற வழியிலும்,அடுத்த முப்பது ஆண்டுகளில் ஆயுதப்போராட்ட வழியிலும் தன் குரலை எழுப்பிவந்தது. மே 18 2009 இல் ஈழத்தமிழர்கள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டாலும் தங்கள் குரலை இன்னும் நிறுத்தவில்லை. மே 18 இற்குப் பின்னால் நடந்த இரண்டு பெரும் நாடு தழுவிய தேர்தல்களை மக்கள் புறக்கணித்தார்கள், எனினும் இத் தேசியக் கொந்தளிப்புக்குப் பின்னால் இருக்கும் சமுதாய அவசியத்தை இன்றும் இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

மாறவில்லை நிலைமை ஆதாரம் ஒன்று

அதிசயிக்கத் தக்கவகையில் யுத்த வெற்றியின் முதற்பிரகடனமே இலங்கையில் சிறுபான்மையினர் என ஒருவர் இல்லை என்பதாகும்.இதைத் தொடர்ந்து வந்த எச்சரிக்கை ‘ஈழம்’, ‘தமிழ்’,என்கிற பெயர்களில் அரசியல் இயக்கம் நடத்துவது தடை செய்யப்படும் என்பதாகும்.இலங்கை எங்கும் சிங்கக் கொடி பறக்கும் என்பதாகும்.சுருக்கிச் சொன்னால் இலங்கை சிங்களம் என்பதாகும்.

1970 இல் ஜே ஆர் சொன்னார் இலங்கையில் இனப்பிரச்சனை என்று ஒன்றில்லை.

மாறவில்லை நிலைமை ஆதாரம் இரண்டு:

விடுதலைப் புலிகளின் அரசியல் அதிகாரம் வீழ்ந்த கையோடு தமிழீழமெங்கும் நில அபகரிப்பு தொடங்கிவிட்டது.

1950 களில் டட்லி சேனநாயக்கா இதற்குத் திட்டமிட்டார்.

மாறவில்லை நிலைமை ஆதாரம் மூன்று:

தனிச்சிங்கள மொழிக்கொள்கையை ராஜபக்ச அரசு திணிக்கிறது.

1958 இல் தனிச் சிங்களச் சட்டம் திணிக்கப்பட்டது.

மாறவில்லை நிலைமை ஆதாரம் நான்கு:

தமிழீழம் இராணுவமயப்படுத்தப்படுகின்றது. மே 18 இற்குப்பின்னால் இதை ஒரு பாதுகாப்புத் திட்டமாக இலங்கை அரசு வெளியிடுகின்றது.

1970 களில் பாதுகாப்புவலயம் என்ற பேரில் ஜே,ஆர் இதை ஆரம்பித்தார்.

மாறவில்லை நிலைமை ஆதாரம் ஐந்து:

கிளிநொச்சியில் காக்காய் போட்ட எச்சத்தில் முளைத்த ஒரு அரசமரத்தின் கீழ் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.இது தமீழமெங்கும் பரவுகிறது.

1972 அரசியல் யாப்பு பெளத்த மதத்தை அரசு மதமாக்கியது.

மாறவில்லை நிலைமை ஆதாரம் ஆறு:

இனங்களுக்கிடையில் கசப்புணர்வை திட்டமிட்டுத் தூண்டிவிடுவது:

நாடு ஏகாதிபத்தியவாதிகளினதும், இந்திய விஸ்தரிப்புவாதிகளினதும் பொருளாதாரச்சுரண்டலுக்கு முழுதாகத் திறந்து விடப்பட்டிருப்பதன் விளைவான அரைக்காலனிய பொருளாதாரம், முழு நாட்டு மக்களது பொருளாதாரத் தேவைகளை ஈடு செய்ய இயலாததாக உள்ளது.இதனால் ஒரு சிறு உள்ளூர் தரகுமுதலாளிய, நில உடமை வர்க்கங்களே ஆதாயம் அடைகின்றன.இந்த ஆதாயம் ஏகாதிபத்தியவாதிகளுக்கு இவர்கள் செய்யும் சேவகத்துக்காக அளிக்கப்படும் வெகுமானம் ஆகும்.

இதனால்தான் எப்போதெல்லாம் உள்நாட்டு மக்களின் எழுச்சிகளாலும், கிளர்ச்சிகளாலும்,சில சமயங்களில் புரட்சிகளாலும் இவர்களது ஆட்சிகள் ஆட்டங்காணுகின்றனவோ அப்போதெல்லாம் இவர்கள் ஏகாதிபத்தியவாதிகளால் காப்பாற்றப்படுகின்றார்கள்.

எனவே ஒருபுறம் தமது எஜமானர்களுக்கு சேவகம் செய்யவும், மறுபுறம் தமது இருப்பைக் காத்துக்கொள்ளவும், மக்களை இன, மத, இன்னும் என்னென்ன இழிவான வழிகளில் எல்லாம் பிளவுபடுத்துவதற்கான கூறுகள்-இவை அழிந்து போகும் கூறுகள் என்பதைச் சொல்லத்தேவை இல்லை- உள்ளதோ அவற்றையெல்லாம் பயன்படுத்தி மக்களை தம்முள் மோதவிடுகின்றனர்.

இது தான் இலங்கை அரசு, தமிழ் சிங்கள இனங்களுக்கிடையில் கசப்புணர்வை திட்டமிட்டுத் தூண்டிவிடுவதற்கான அரசியல் பொருளாதார வேர் ஆகும்.

ஏகாதிபத்தியவாதிகளை விரட்டிஅடித்து,ஏகாதிபத்தியச் சுரண்டலை இல்லாதொழித்து,சுதந்திர தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி,சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசாக இலங்கை திகழ்வது கோட்பாட்டு ரீதியில் முற்றிலும் சாத்தியமே, ஆனால் நடை முறையில் ஏகாதிபத்தியவாதிகள் அதை அநுமதிப்பது இல்லை.

இதனால் அவர்களது உள்ளூர் காவல்நாய்கள், தமிழர்களிடம் இருப்பதை பறித்து சிங்களவர்களுக்கு கொடுப்பது போல நாடகமாடி சிங்களவர்களின் நாயகர்கள் ஆகின்றனர்.

மலையக மக்களின் குடியுரிமைப் பறிப்பு, தனிச்சிங்களச் சட்டம், தரப்படுத்தல் திட்டம் அத்தனைக்குப் பின்னாலும் இருந்தது இது தான்.இவை அனைத்தும் தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்களின் தாக்குதல்கள் அல்ல, தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்கெதிரான ஏகாதிபத்தியவாதிகளின் தாக்குதல் ஆகும்.உள்நாட்டு ஆளும் கும்பல்கள் அவர்களது விசுவாச ஊழியர்கள் மட்டுமே.

இந்தத் தொப்பிழ்க் கொடி உறவை, உள் நாட்டு எதிரிகளை மதிப்பீடு செய்வதற்கு தமது உயிராதாரமான கோட்பாடாக புரட்சிகர இயக்கங்கள் கொள்ள வேண்டும்.

மே 18 யுத்த வெற்றியின் நினைவாக இராணுவ வீர்ர்களுக்கு நினைவு மண்டபங்கள் எழுப்புவது, அதே வேளையில் மாவீர்ர் துயிலும் இல்லங்களை இடித்துத் தரை மட்டமாக்குவது.

1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையில் இறந்தவர்களுக்கு கட்டிய நினைவு நடுகல்லை இரு தடவை இடித்துத் தரைமட்டமாக்கினர். அது இன்றும் தொடர்கிறது.

இனப்படுகொலை யுத்தத்தின் பேரழிவை மீள்நிர்மாணம் செய்யும் அனைத்து பெருங்கட்டுமானத்துறைகளையும் அந்நியர்களுக்கு தாரை வார்த்து விட்டு, தமிழ்ச் சிறு வியாபாரிகளின் சந்தையைக் கைப்பற்ற சிங்கள சிறு வியாபாரிகளைத் தூண்டுவது.நடைபாதை வியாபாரத்தை உருவாக்கி அங்கே சிங்களச் சிறு வியாபாரிகளைக் காட்சிப் பொருளாக வைத்து தமிழ் மக்களுக்கு சினமூட்டுவது.

பல்கலைக்கழக சிற்றுண்டிச் சாலையை நடத்தி எவனும் இலட்சாதிபதியாக முடியாது, அதிகபட்சம் அது ஒரு பெட்டிக்கடைதான்.இதை ‘கந்தசாமியிடம்’ இருந்து பறித்து ‘அப்புகாமிக்கு’ கொடுத்திருக்கிறது சிங்களம்.இனப் பகைமையைத் தூண்டுவதைத் தவிர இதற்கு வேறெந்தகாரணமும் இல்லை.மாறவில்லை அவர்கள்!

மாறவில்லை நிலைமை ஆதாரம் ஏழு:

அரசியல் பிரதிநிதித்துவம் என்று பேசி, கோடரிக்காம்புகளை கொலுவில் வைப்பது: கருணா, டக்ளஸ் கும்பலைத் தமிழர் பிரதிநிதிகாளாகக் காட்டுவது.

1970 களில் இவர்கள் தேவநாயகம், ராஜதுரை என இருந்தனர்.

மாறவில்லை நிலைமை ஆதாரம் எட்டு:

பொருளாதாரத் துறையில் அரைகாலனியப் பொருளாதாரம்.

எழுபதுகளின் பிற்பகுதியில் உலகமயமாக்கல் பொருளாதாரத்திட்டத்திற்கு இலங்கையைத் திறந்துவிடார் ஜே.ஆர்.இலங்கைச் சட்டங்களுக்கு கட்டுப்படாத சுதந்திரம் கொண்ட அந்நிய வர்த்தக வலயங்கள் உருவாகின.மலிவுக் கூலிகளாக இலங்கை உழை க்கும் மக்கள் சிங்கப்பூருக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் விற்கப்பட்டனர்.

இலங்கையை ‘சிங்கப்பூர் ஆக்குவோம்’, ‘தார்மீக சமுதாயம்’ அமைப்போம் எனப் பிரகடனம் செய்யப்பட்டது.

இதனால் சலனங் கொள்ளவில்லை பிரபாகரன் என்கிற சிலை. இதனால் சினங் கொண்டது ஜே.ஆர் அரசு.பயங்கரவாதிகள் விசர் நாய்கள் அவர்களை விசர்நாய்களைச் சுடுவதுபோல் சுட வேண்டும் என அறிவித்தது..இவ்வாறு ஜே.ஆர் விசர் நாயாகி வெறிபிடித்து குரைத்ததற்கு காரணம் அவரது உலகமயமாக்கல் திட் டத்துக்கு பிரபாகரன் பேரிடியாய் வீழ்ந்ததாகும்.

இவற்றை எதிர்கொள்ள அதிகாரம் மையப்படுத்தப்பட்ட பாசிச 1978 அரசியல் யாப்பு கொண்டுவரப்பட்டது.

மே18 இற்குப் பின்னால் தாம் இழந்த சந்தையைக் கைப்பற்றும், ‘மீளப்பெறுவோம் ஸ்ரீலங்காவை' -Regaining Sri lanka_ எனும் உலகமயமாக்கல் திட்டம் அமூலுக்கு வருகின்றது.உள்நாட்டு அபிவிருத்திக்கு உறுதியான அரசு தேவை என்ற முழக்கத்தில் இலங்கை அரசு;மஹிந்த-கோத்தபாய-பசில்-நாமல் என நாவேந்தர்களின் பாசிச அரசாக சுருங்கிவிட்டது.நாடு தழுவிய அனைத்து துறைகளிலும் 95 சதவிகிதத்தை தமது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விட்டனர்.இதன் விளைவுதான் இலங்கை முழுவதும் இராணுவமயப்படுவது.

ஜே ஆர் சிறீமாவை வீட்டுக்காவலில் வைத்தார். மகிந்த சரத்பொன்சேகா வை இராணுவச்சிறையில் அடைத்தார்.

மாறவில்லை நிலைமை ஆதாரம் ஒன்பது:

சமூக கலாச்சாரத்துறையில் சீரழிவுகளை உருவாக்குகிறது.நட்புறவுப் பாலம் என்ற பெயரில் அந்நிய சீரழிவுகளைப் பரப்புகின்றது. காலம் காலமாக பாதுகாக்கப்பட்டு வந்த தமிழர்களின் வரலாற்று, கலாச்சார சின்னங்களை அழிக்கின்றது.சிறுவர் சிறுமியை உல்லாசப் பயணத்துறைக்கு, உறுப்பறுக்கும் உன்மத்தர்களுக்கு தாரைவார்க்கிறது.

1983 இல் கணபதிக் கடவுள் சிலையின் கழுத்தில், ‘’கண தெய்யோ நாண்ட கீயா”, கணபதிக் கடவுள் குளிக்கச் சென்றுவிட்டார் என எழுதி கடலில் வீசியது சிங்களம்!

மாறவில்லை நிலைமை ஆதாரம் பத்து:

எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த ஆறு தசாப்தங்களாக கொண்டுவரப்பட்ட பாசிச இன ஒடுக்குமுறைச் சட்டங்களில் முதன்மையான, 1972 அரசியல் யாப்பு,1978 அரசியல் யாப்பு,ஆறாவது திருத்தச் சட்டம், சிங்களம் அரசு மொழி என்ற கொள்கை, மாகாண சபைச்சட்டம், பயங்கரவாத தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம், தொழிலாள விவசாய இயங்கங்களை நசுக்க சர்வதேச நாணய நிதியத்தின் (IMF_ International Monetary Fund) உத்தரவில் உருவாக்கப்பட்ட கறுப்புச் சட்டங்கள் எதையும் தூக்கிவீசி இலங்கை அரசை ஜனநாயகப்படுத்த சிங்களம் தயாராகவில்லை.மாறாக மேலும் பாசிச இன ஒடுக்குமுறைச் சட்டங்களை உருவாக்கி அமுலாக்க திட்டமிடுகின்றது.

இவை அனைத்தும் உணர்த்துவது ஒன்றுதான். சிங்களம், இன ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்ட தூய சிங்களப் பாசிச அரசை ஜனநாயகப்படுத்த இன்றும் தயாராகவில்லை, மாறாக முழு அரசுத்துறையையும் இராணுவமயப்படுத்தி வருகின்றது.

சிங்களத் தரகுமுதலாளித்துவ, சிங்களப் பேரினவாத, பெளத்தமதவாத, அரைக்காலனிய,அரை நிலப் பிரபுத்துவ,இனவெறிப் பாசிச இலங்கை அரசு,மே 18 இன் பின்னால் இராணுவப் பாசிச அரசாகப் பரிணமிக்கின்றது. ஒரு சொல்லில் இதுவே சிங்களம் என்பதாகும்.

அமைதி வழித்தீர்வும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வும்.

இந்நிலையில்தான் ஐக்கிய இலங்கைக்குள் அமைதிவழியில் அதிகாரப்பகிர்வுத் தீர்வு அடைவது குறித்துப் பேசப்படுகின்றது. இதை நம்பவைக்க முயலுகின்ற அத்தனை கும்பல்களும் ஏமாற்றுப் பேர்வழிகளே.ஏய்த்துப் பிழைக்கும் கும்பலே!

உண்மையில் அது சாத்தியமாகக் கூடியதானால், சாத்தியமாக வேண்டுமானால் சிங்களம் உடனடியாகச் செய்யவேண்டியது, ஈழத்தமிழர்களின் பிரிந்து செல்லும் உரிமையை- சுய நிர்ணய உரிமையை- அங்கீகரிப்பதாகும்.அரசியல் தீர்வின் ஆதரவாளர்களின் கடமை இதற்காகப் போராடுவதாகும்.அல்லாத எந்த இடைவழிச் சமரசங்களும் துரோகத்தனமானவை.தோற்கடிக்கப்படவேண்டியவை.

சர்வதேசிய அரசியல் நிலைமை

1) ஏகாதிபத்தியத்தின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி காரணமாகவும், மூன்றாவது உலகப் பொதுப் பொருளாதார நெருக்கடியின் விளைவாகவும், இதனால் உருவான முரண்பாடுகளும் யுத்தங்களும், 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்-மிகத் தெளிவாக- நான்கு புதிய ஆளும் வர்க்க சக்திகளை, ஒற்றைத்துருவ உலக ஒழுங்கமைப்பின் தலைவனாக இருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சவாலாக உருவாக்கியுள்ளன.

அவையாவன: ஐரொப்பிய யூனியன், ரசியா, ஈரான், சீனா (European Union, Russia, Iran.,China, -ERIC) ஆகும்.வருங்காலத்தில் தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியம் ஒன்று இவ்வணியில் இணையக்கூடும்.ஐரோப்பியன் யூனியன் இதர மூன்று நாடுகளுடனும் ஐக்கியப்படுவதற்கான அம்சங்களைக்காட்டிலும் அமெரிக்காவுடன் ஐக்கியப்படுவதற்கான அம்சங்களை அதிகம் கொண்டிருப்பது உண்மை.

2) இதனால் இது எந்தவகையிலும் ஒற்றைத்துருவ உலக ஒழுங்கமைப்பில் அடிப்படையான-தலைகீழான-மாறுதலை இன்னமும் கொணர்ந்துவிட வில்லையெனினும், ஒரு புதிய அணிசேர்க்கைக்கான ஆதாரக்கூறுகளைக் கொண்டிருக்கின்றன.அதை நோக்கி உலகம் நகரத்தொடங்கிவிட்டது.அணிசேர்க்கை துல்லியமாக எவ்வாறு அமையும் என்பதை இப்போது அநுமானிப்பது கடினமானதாகும்.

3) ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னால்- குறிப்பாக ஈராக் ஆக்கிரமிப்பு யுத்தத்துக்கு பின்னால்- உதயமான இத்தகைய ஒரு புதிய உலக சூழல் வரலாற்று வழியில் ஒரு திருப்பமாகும்.முந்தைய சூழலில் இருந்து வேறான ஒரு புதிய சூழலாகும்.

4) இச்சூழலை நகர்த்திச் செல்லும் ஆதிக்க சக்திகள் அடிப்படையில் செய்வது உலக மறு பங்கீடாகும்.இதனால் சுதந்திர தேசிய இயக்கங்களை நசுக்குவதை இவை தமது பொதுக்குறிக்கோளாகக் கொண்டுள்ளன.

5) இதற்கு யுத்தத்தையும், பாசிசத்தையுமே தமது ஆயுதமாக ஏந்தியுள்ளன.

6) இச் சூழல் அரைக்காலனிய ஆளும் கும்பல்களின் பேர "சுதந்திரத்தை'' அகலப்படுத்தியுள்ளது.

7) உள் நாடுகளில் ஜனநாயக, தேசிய சுதந்திர இயக்கங்களை நசுக்கும் பாசிச அரசுமுறையைப் பாதுகாத்துப் பலப்படுத்துகிறது. போசித்து வளர்க்கிறது.போற்றித் துதிக்கின்றது.

8) இப்பின்னணியில் தான் இலங்கையின் அரசியல், அதன் பல் முகங்களிலும் நகர்கிறது.இனிவருங் காலங்களில் இலங்கையின் அரசியல் திசைவழி இவ்வாறுதான் அமையப் போகின்றது.

எனவே மே 18 இற்குப் பிந்திய உள்நாட்டுச் சூழ்நிலையின் சாராம்சமான, தமிழ்த் தேசிய அழிப்புப் போக்கானது, சர்வதேச சூழ்நிலையை அநுசரித்து, ஆதரித்துச் செல்கிறது, என்பது குறிப்பான முக்கியத்துவம் உடையதாகும்.

நடைமுறைப்பணிகள்

இக்குறிப்பான சூழ்நிலைமையே நமது இயக்கத்தின் குறிப்பான தேசிய ஜனநாயகக் கடமைகளைத் தீர்மானிக்கின்றன.

இவற்றின் அடிப்படை அம்சங்களாவன.

1) ‘’ யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல், அரசியல் என்பது இரத்தம் சிந்தாத யுத்தம்’’. 1983 இல் மூண்ட உள்நாட்டு யுத்தம் அது ஏற்றுகொண்ட கடமைகளை நிறைவேற்ற தன் சக்திக்குட்பட்ட வரையில் போராடி முடிவுபெற்றிருக்கின்றது.புதிய யுத்தத்துக்கு புதிய சக்தி தேவை.இப்புதிய சக்தியை மக்களுக்கு அளிக்கும் இரத்தம் சிந்தாத யுத்தத்தில் நாம் குதித்துள்ளோம்.

2) மே 18 2009 இற்குப்பின்னால் எந்தவகையிலும் சிங்களம் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. அதனால் சுதந்திரத் தமிழீழத் தனியரசே ஈழத்தமிழர் பிரச்சனைக்கு இன்றும் தீர்வாகும்.

3) இதற்கு மாறாக சமாதானத் தீர்வு ஒன்றை, அமைதி வழியில் அதிகாரப்பரவலாக்கம் மூலம் ஐக்கிய இலங்கைக்குள் அடையலாம், நாடுகடந்து அரசாங்கம் அமைத்து அடையலாம் என்றெல்லாம் கூறி மக்களைத் திசைதிருப்பும் சக்திகளை, சுய நிர்ணயஉரிமையை அங்கீகரி என்ற முழக்கத்தை முன்வைத்து அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவது,நமது முதன்மையான அரசியற் கடமையாகும்.சுய நிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்லும் உரிமை தவிர வெறெதுவும் இல்லை.

4) ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வுப் பிரச்சனையில் தீர்ப்பளிக்க வேண்டியவர்கள்,இலங்கையில் வாழும் தமிழ் மக்களே. ஒட்டுமொத்தமான இலங்கை மக்களோ, புலம்பெயர் தமிழர்களோ அல்ல.

5) சுதந்திரத் தமிழீழத் தனியரசே தீர்வு! இல்லையேல் சுய நிர்ணய உரிமையை அங்கீகரி என முழங்கும் அதேவேளையில், உழைக்கும் சிங்கள விவசாய வெகுஜன மக்கள் திரள் மீது சிங்களம் தொடுக்கும் தாக்குதல்களை எதிர்த்து நாம் முன்னின்று குரல்கொடுக்க வேண்டும்.

6) மலையக முஸ்லிம் மக்களை, ஈழ தேசிய இயக்கத்துடன் ஐக்கியப்படுத்த பாடுபடவேண்டும்.

7) புலம்பெயர் நாடுகளில் உள்நாட்டு புரட்சிகர சக்திகள், ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் ஜனநாயக இயக்கங்கள், உலகு தழுவிய தேசிய விடுதலை இயக்கங்களின் உண்மையான ஆதரவாளர்களாக, இயங்கும் குழுக்கள் இவர்களைச் சார்ந்து இயங்க மக்களைக் கோர வேண்டும்.

8) தமிழகத்தில் மாநிலத் தரகுத் திராவிட இளைஞர் கழகங்களின் பின்னால் அல்லாமல் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகங்களில் இணைந்து செயற்பட இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

9) மே 18 இல் தமிழீழ அரசைக் கவிழ்க்க யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட் டது, இனப்படுகொலை நடத்தப்பட்டது. இதன் சாராம்சம் ஒரு தேசத்தின் சுதந்திர தேசிய கிளர்ச்சி ஒடுக்கப்பட்டதாகும். இதை மனித உரிமை மீறப்பட் டதாகக் குறுக்கும் NGO ஏகாதிபத்திய ஏஜெண்டுகளை அம்பலப்படுத்த வேண்டும். இவர்களின் உள்ளூர் முகவர்களாக இருக்கும் கத்தோலிக்கப் பாதிரி நிறுவனங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர பிரச்சாரம் செய்ய வேண்டும்.

10) முக்கியமாகவும்,முதன்மையாகவும் திரிபுவாதிகளின், தேசிய இயக்கம் தொடர்பான பரப்புரைகளை தத்துவார்த்த ரீதியில் முறியடிக்கவேண்டும்.

மே18 ஐ ஒட்டிய சர்வதேச, உள்நாட்டுச் சூழ்நிலைகள் பற்றிய ஆய்விலிருந்து நமது நடைமுறைப் பணிகளின் திசைவழியை தீர்மானிக்கும் கோட்பாடுகள் இவையே ஆகும்.

ஆகவே தோழர்களே,

இரத்தம் சிந்தும் அரசியல் முடிந்திருக்கிறது.இரத்தம் சிந்தாத யுத்தம் தொடங்கியிருக்கிறது. தமிழீழ மக்கள் ஒரு முறியடிப்புச் சமரில் உடனடியாகக் குதித்துள்ளனர். இது சுதந்திர தமிழீழத் தனியரசமைக்கும் போராட்டத்தை, இடைவழிச்சமரசங்களால் தோற்கடிக்க முயலும் சக்திகளுக்கு எதிரான சமராகும், இதில் சுதந்திரத் தமிழீழத் தனியரசே தீர்வு! இல்லையேல் சுய நிர்ணய உரிமையை அங்கீகரி என முழங்கி நாம் களத்தில் குதித்துள்ளோம்.

இறுதி வெற்றி ஈழமக்களுக்கே! இச்சமரில் 'வீரகாவியம் மே 18' போர் வாளாய் விளங்கும். புதிய ஈழப்புரட்சியாளர்கள் அதன் முன்னணிப்படையாய் இருப்பர். இதுவே எம் மண்ணுக்கும், மாண்டநம் மக்களுக்கும் மாவீர மறவர்களுக்கும் நாம் செலுத்தும் மரியாதை ஆகும்.

செவ்வணக்கம் தோழர்களே தாங்கள் சென்ற இடம் நாம் வருவோம், ஈழம் மீண்டும் எழுந்ததென்ற செய்தி தருவோம்!

• தமிழீழ தேசத்தை நிராயுதபாணியாக்கிய சர்வதேச சமூகமே,

தொடரும் இன அழிப்புக்கு பொறுப்பெடு! பதில் சொல்! விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!

• அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்துசமுத்திரப் பிராந்திய காவல் நாயாய் இருந்து, நமது சுதந்திர எழுச்சியைக் கடித்துக் குதறிய இந்திய விஸ்தரிப்புவாத அரசே, ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையிடாதே!

• பயங்கரவாதத்தை ஒழித்துவிட்ட பக்ஸ பாசிசமே

ஈழத்தமிழர் பிரச்சனைக்கு அமைதி வழியில் தீர்வுகாண தமிழீழ தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி!

• புலம்பெயர் நாடுகளில் புலிப் பினாமிகளாகவும், ஏகாதிபத்திய ஏஜெண்டுகளாகவும், தமிழீழ அரசாங்க புரளி அரசியல் நடத்திப் பிழைக்கும் ஏமாற்றுப்பேர்வழிகளே; உங்கள் முகத்திரை கிழிந்துவிட்டது,

ஒடி ஒதுங்குங்கள்! துரோகிகளே தூர விலகுங்கள்!

நமது அடிப்படை முழக்கங்கள்

* ஏகாதிபத்தியம் ஒழிக!

* இந்திய விஸ்தரிப்புவாத அரசு ஒழிக!

* சீனா,ரசியா,ஜப்பான்,ஈரான்,இஸ்ரேல் ஆகிய நாடுகளின் ஆதிக்க ஆசையை முறியடிப்போம்!

* தமிழர்களின் அரசு தமிழீழ மக்கள் ஜனநாயக் குடியரசு, மலர்க!

* உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்படும் தேசங்களே ஒன்று சேருங்கள்!

* மார்க்சிய லெனினிய மா ஓ சே துங் சிந்தனை வழி நடப்போம்!

உடனடிக்கடமைகளுக்கான் முழக்கங்கள்

யுத்தக் குற்றவாளிகளே, இனப்படுகொலையாளர்களே, அமைதிமுகம் காட்டும் அயோக்கியர்களே,மனித உரிமை வாதிகளே.

• யுத்தக் கைதிகளாகக் கைப்பற்றியிருக்கும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளின் பெயர் விபரப்பட்டியலை, அவர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கும் இடங்களை பகிரங்கப்படுத்துங்கள்.

• பெண்போராளிகள் மீது வதைமுகாம்களில் நடத்தும் இம்சைகளை உடனே நிறுத்துங்கள்,

• யுத்தக் கைதிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி உடனடியாக விடுதலை செய்யுங்கள்.

• விடுதலைப்புலிகளிடம் யுத்தக்கைதிகளான சிங்கள இராணுவத்தினரை பக்குவமாகப் பரிமாறிய செஞ்சிலுவைச் சங்கமே, அது போல விடுதலைப் புலிக்கைதிகளை சிங்களத்திடமிருந்து வாங்கி தமிழீழ மக்களிடம் ஒப்படை.

• ஆயுதம் ஏந்தாமல் நமது மண்ணின் விடுதலைக்கு அரசியல் பிரச்சார, இலக்கியப் பிரச்சார பணிபுரிந்த மண்ணின் மைந்தர்களை உடனேவிடுதலை செய்.

• நீ வேரறுத்து எறிந்த மக்களை தங்கள் வாழ் நிலத்தில் உடன் குடியமர்த்து.

• யுத்தக்குற்றங்களுக்கு நஷ்ட ஈடுவழங்கி அவர்கள் வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்து.

• முதியோருக்கு மதிப்பளி! இளையோரை ஈனத்தனமாக விற்றுப்பிழைக்காதே!

• ஊனமுற்றவர்களுக்கு உரிய மருத்துவ உதவி இலவசமாக வழங்கு!

• போராளிகளின் குடும்பங்கள் மீதான பழிவாங்குதலை நிறுத்து!

• யுத்தக் கொடுமைக்குள்ளான மாணவர்களுக்கு விசேட சலுகை அளித்து கல்வி அளி!

தமிழர்களின் அரசு தமிழீழ மக்கள் ஜனநாயக் குடியரசு !

புதிய ஈழப் புரட்சியாளர்கள் _ தமிழீழம்

ENB

மே-2010

போலித் தேர்தலையும் பொது வேட்பாளரையும் புறக்கணிப்போம்! ஈழப்படுகொலைப் பொதுவாக்கெடுப்புக்குப் போராடுவோம்!!

போலித் தேர்தலையும், பொது வேட்பாளரையும் புறக்கணிப்போம்!

ஈழப்படுகொலைப் பொதுவாக்கெடுப்புக்குப் போராடுவோம்!!

சிறீ லங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசு-ஜனாதிபதித் தேர்தல் 2024.

இலங்கை ஏறத்தாழ 2 கோடி  (21,018,859 as of Feb. 8, 2019) குடிமக்களையும், ஒன்றரைக் கோடி (16,263,885 Registered Voters (as of Nov. 30, 2020) வாக்காளர்களையும் கொண்ட ஒரு சிறிய இந்து சமுத்திர தீவும் நாடும் ஆகும்.சட்டபூர்வமாக இந்நாடு `சிறீ லங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசு` என அழைக்கப்படுகின்றது.இந்த நாட்டின் ஆட்சிமுறை இரு படித்தானது. அரசதிகாரம் அனைத்தும் ஜனாதிபதி என்கிற ஒரு தனி நபரிடம் குவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றம் -நாடாளமன்றம்- அவருக்கு கட்டுப்பட்டதாக உள்ளது, அதாவது அரசாங்கமும் அவரது கட்டுப்பாட்டிலேயே உள்ளது.சுருங்கச் சொன்னால் அரசும், அரசாங்கமும் ஜனாதிபதி என்கிற ஒரு தனி நபரின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டிருக்கின்ற ஒரு பாசிச சர்வாதிகார ஆட்சிமுறையை அந்நாடு கொண்டிருக்கின்றது.

மேலும் அந்நாடு இரு தேசங்களைக் கொண்டதாகும்.ஆனால் ஒடுக்கப்படும் ஈழ தேசத்தின் சுய நிர்ணய உரிமை சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது.

1978 அரசியல் அமைப்பும், அதன் ஆறாவது திருத்தமும் இந்தப் பாசிச ஆட்சி முறையை சட்டபூர்வமாக்கியுள்ளது.

பொதுவாக அரசியல் அமைப்பு அனைத்து மக்களையும் ஒடுக்குகின்றதென்றால்,  குறிப்பாக ஆறாவது திருத்தம் ஒடுக்கப்படும் ஈழ தேசத்தை ஒடுக்குகின்றது.

ஜனநாயகம் பற்றிய எல்லாப் பேச்சும் இந்த அடிப்படைக் கட்டமைப்புக்கு உட்பட்டுத்தான் பேசப்படுகின்றது.

இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த (ஜனாதிபதி மற்றும் பொதுத்) தேர்தல் என்பது இந்த பாசிச ஆட்சி முறையை இயக்குவதற்கான நபர்களை -கட்சிகளை- தெரிவு செய்வதற்காகத்தான் நடத்தப்படுகின்றது! அதற்குத்தான் மக்கள் தமது `புனிதமான` வாக்குரிமையை பயன்படுத்துகின்றார்கள்.கடந்த 77 ஆண்டுகளில் (கிராமிய,மாவட்ட,மாகாண தேர்தல்கள் தவிர) இது 26வது தேர்தல் ஆகும்! 25வது தேர்தலில் நாடு வங்குரோத்தானது.26 வது தேர்தல் மீண்டும் நாட்டைக் கட்டியெழுப்ப நடக்கிறது!

சராசரியாக இலங்கையின் வாக்களிப்பு 75 வீதம் ஆகும்.ஆக வாக்காளார்களுக்கு பஞ்சம் இல்லாத நாடு! அதனால் தானோ என்னவோ வாக்குறுதிகளுக்கும் பஞ்சம் இல்லை. (அத்தகைய தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இக்கட்டுரையின் இடை இடையே கொட்டை எழுத்தில் சொருகப்பட்டுள்ளன).

இவை தேர்தல் காலத்தில் வாக்கு வேட்டைக்காக சொல்லப்படுபவையே அல்லாமல், நிறைவேற்றுகிற எண்ணமோ சாத்தியமோ கொண்டவை அல்ல என்கிற உறுதியான நம்பிக்கை வாக்காளப் பெருமக்களுக்கும், பிடரியில் துப்பாக்கி வைக்காத குறையாக அவர்களை அமைதியாக வாக்களிக்கக் கோருகின்ற ஊடக சிறு மக்களுக்கும் உண்டு.

இவை பெரும்பாலும் உண்மைதான். விஞ்ஞாபனங்களுக்கும் சமூக விஞ்ஞானத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பதும் உண்மைதான்.

ஆனால் இதிலிருந்து, இங்கு களமாடும் வீரர்களுக்கு கொள்கை கோட்பாடே இல்லை, அவர்கள் வெறும் கோமாளிகள் என்று முடிவுகட்டிவிடக் கூடாது.

சொன்னது பாதியும் சொல்லாதது மீதியுமாய் அவர்களுக்கு கொள்கை கோட்பாடுகள் உண்டு. அவை ஆங்காங்கே விஞ்ஞாபனங்களில் வெளியீடு செய்யப்படுவதும் உண்டு. 

அவை அவர்கள்-கட்சி-பிரச்சனை என்று எவற்றை சொல்ல விரும்புகின்றார்களோ, அல்லது பிரச்சனைகளை எந்தளவுக்கு குறுக்கி திரித்து காட்ட முயலுகின்றார்களோ அவையும், அவைக்கான அவர்களது தீர்வும் சம்பந்தமானவை.நாடாளமன்ற ஜனநாயக சம்பிரதாயம் இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றது. உலகம் முழுமையிலும் இவ்வாறு தான்.

மேலும் ஒரு ஜனாதிபதியைத் தெரிவு செய்ய 38 வேட்பாளர்கள் கட்டுப் பணம் செலுத்தியது, சுமார் 30 பேர் காணாமல் போனது, வாக்காளர் சீட்டு நெடுஞ்சாலை போல நீண்டது, காக்க காவ கட்டணம் உயர்ந்தது, மொத்தம் தேர்தல் செலவு 3 மடங்கானது, சூட்கேசுகள் பரிமாறப்பட்டது, வீட்டுக்கு வீடு நோட்டுக்கள் பறந்தது, அம்பியூலன்ஸ் மது-பண மூட்டை காவுவது, போதை வஸ்து மாபியாக்கள் தேர்தல் செலவைப் பொறுப்பேற்பது, இதற்கு மத்தியில் `கண்காணிக்க` அந்நிய அதிகாரிகள் குழு வருவது, ஆயிரக்கணக்கில் `முறைகேடுகள்` பதிவு செய்யப்படுவது, வன்முறை கொலை அச்சுறுத்தல் தொடுக்கப்படுவது, வெளிநாட்டு பயண எச்சரிக்கை விடுக்கப்படுவது, ஊரடங்குச்சட்டம் இராணுவம் தயார் நிலையில் இருப்பது, இப்படியாகத்தானே இறுதியில் ``ஒப்பீட்டில் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்ததாக`` அறிக்கை வருவது, வென்ற உறுப்பினர் தான் 50 வாக்குகள் போட்டதாக நாடாளமன்றத்திலேயே பிரகடனம் செய்வது, இவை அனைத்தும் கூட நாடாளமன்ற ஜனநாயக சம்பிரதாயத்தின் அங்கமாக  ஒழுங்கமைக்கப் பட்டிருக்கின்றது. 

எல்லாப் புகழும் ஜனநாயகத்துக்கே!

ஆனால் மக்களுடைய-நாட்டினுடைய பிரச்சனையும் தீர்வும் வேறொன்று.அது ஒரு தனி வேறான உலகம். இவர்களுக்கு தெரியாதது அல்லது அந்நியமானது.

ஆதலால் மக்களுடைய பிரச்சனையில் இருந்துதான் விஞ்ஞாபனத்தை ஆராய வேண்டுமே தவிர விஞ்ஞாபனத்தில் இருந்து பிரச்சனையை ஆராயக்கூடாது. அது அவர்களது பொறிக்குள் நம்மை வீழ்த்திவிடும்.இவ்வாறு மக்களை வீழ்த்துவதற்காக நாடாளமன்ற சந்தர்ப்பவாதிகள், சமரச சக்திகள் அவ் வழியை பெரிதும் விரும்பி பயன்படுத்துகின்றார்கள்.

உலகளாவிய நிலைமை:

அ) பொதுவான நிலைமை

1) உலகளாவிய, மீள இயலாத ஒரு மிகை உற்பத்தி பொருளாதார நெருக்கடி குறைந்த பட்சம் 2008 இலிருந்து தொடர்ந்து நிலைத்து நீடித்து வருகின்றது;

2)ஏகாதிபத்திய மேலை நாடுகள் உலகமயத்தில் இருந்து பகுதி பகுதியாக பின்வாங்கி நாடுகளுக்குள் முடங்கிய, நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நிலைமை ஒரு போக்காக வளர்ந்து விட்டது;

3) இதன் விளைவாக மூலப் பொருள்,தொழில் நுட்பம்,பண்ட உற்பத்தி,பண்ட விநியோகம் சம்பந்தப்பட்ட வர்த்தகப் போர்கள் மூளுகின்றன; 

4) தேசிய எல்லைகள் மீறப்பட்டு மீள வரையப்படுதல், தேசங்களுக்குள் தலையீடுகள் இரத்தம் சிந்தியும் சிந்தாமலும் நிகழ்தல், ஆட்சிக் கவிழ்ப்புகள், பொம்மை அரசுகள் என ஜனநாயகமற்ற ஆட்சி முறைமைகள் நிறுவப்படுதல், இதன் நேரடி விளைவாக தேசிய முரண்பாடுகள் கூர்மையடைந்து தேசியப் போர்கள் வெடித்தல்;

5) அவை பிராந்தியப் போர்களாக விரிவடைதல்; 

6) இலட்சோப இலட்சம் மக்கள் தம் சொந்த தேசங்களை விட்டு வெளியேறி அரசியல் பொருளாதார அகதிகளாக உலகப் பரப்பெங்கும் அலைந்து திரிந்து, அவமானப்படுதல், நவீன அடிமைகளாக சுரண்டப்படுதல், மாண்டு மடிதல்;

7) இவை உள்நாட்டில் பாசிசத்தைக் கட்டியமைப்பதற்கான சாதனமாக மாற்றப்படுதல் என்பன பொதுவாக, அன்றாடம் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

ஆ) குறிப்பான நிலைமை

இவற்றுக்கு மத்தியில் அண்மைக்காலமாக சில புதிய போக்குகள் தோன்றி உலக வரைபடத்தை மாற்றியமைத்து வருகின்றன. அவற்றில் மிக முக்கியமானவை;

1) இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய உலக ஒழுங்கமைப்பு அனைத்தும் தகர்தல்.

2) உலகெங்கும் பாசிசம் முதன்மை அதிகார நிலையை எட்டுதல்.

3) நாடாளமன்ற முறைமை நடைமுறையிலும்  காலாவதியாகி பாசிசத்துக்கான படிக்கல்லாக மாறுதல்,

4) மரபு ரீதியான பழைய கட்சிகள் புதிய உள்ளடக்கத்தைப் பெறுதல் அல்லது முழுதாக அழிந்தொழிந்து புதிய கட்சிகள் தோன்றுதல்,

5) தகரும் பழைய உலக ஒழுங்கமைப்பைப் பிரதியீடு செய்யும் புதிய உலக ஒழுங்கமைப்புக்கள் கருவாகுதல்,

6) உலகம் மறு உருவாக்கம் பெறுதல், மறு பங்கீடு செய்யப்படுதல், மறு பங்கீட்டுப் போர்கள் தீவிரமடைதல்

7) இறுதியாக, ஒட்டுமொத்த விளைவாக மூன்றாம் உலகப் போருக்கான தயாரிப்புகள் முனைப்புப் பெறுதல்

இந்நிலைமைகளின் குறிப்பான அரசியல் விளைவுகள்:

1) சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பிந்திய, ஒற்றைத் துருவ அமெரிக்க ஏகாதிபத்திய ஒழுங்கமைப்பு தகர்தல்,

2) ரசிய, சீன ஏகாதிபத்தியங்கள் எழுந்து வளர்ந்து இரட்டைத் துருவ (அல்லது பல் துருவ) உலக  ஒழுங்கமைப்பு உருவாதல்.

3) இதைச் சார்ந்து பிராந்திய ஆதிக்க நாடு-வல்லரசு- களின் கூட்டில் மாற்றம் ஏற்படுதல்,

4) இந்தக் கூட்டு பிராந்திய நாடுகளுக்கிடையேயான உறவைத் தீர்மானிக்கும் முக்கிய விதியாக மாறுதல்.

5) நாடுகளுக்கிடையேயான உறவில் `இராணுவ பாதுகாப்பு` அம்சம் முதன்மை பெறுதல்,

6) உலகம் போரும், கொதிப்பும்,கொந்தழிப்பும் மிக்க பூமியாக மாறுதல்,

இந்த இருபது நிலைமைகளைச் சார்ந்துதான் வர்க்க அணி சேர்க்கை-நாடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் இடையேயுமான உறவு- கட்டியமைக்கப்படுகின்றது.

இதற்கு எம் தாய்த் திரு நாடு இலங்கையும் விதி விலக்கல்ல!

இலங்கையில் இதன் விளைவுகள்:

1) இந்த அணிசேரா நாடு என்கிற புலுடா ஒருபோதும் எந்த நாட்டுக்கும் உண்மையல்ல. அப்படி ஒரு நாடும் இருந்ததில்லை இருக்கவும் முடியாது.

2) இலங்கையின் ஆளும் வணிகத் தரகு வர்க்கங்கள் எப்போதும் அமெரிக்க சார்புடையவை.

3) 2002-2006 வரை இந்த நிலைமை தான் நீடித்தது. ஆனால் 2006 இல் மீண்டும் போரை ஆரம்பித்தபோது, யுத்தத்துக்கு சீன ஆதரவை நாடியது முதல் இலங்கையில் சீனத் தலையீடு ஆரம்பமாகி அது முள்ளிவாய்க்காலுக்குப் பின்னாலும் தொடர்ந்து சீன ஏகாதிபத்தியம் இலங்கையில் வலுவாக காலூன்ற வழி வகுத்தது.

4) புதிய உலகச் சூழலில் இந்தியா அமெரிக்காவின் யுத்த தந்திரக் கூட்டாளியாக உள்ளது. தனது விரிவாதிக்க நலனின் பேரால் மட்டுமல்ல அமெரிக்காவின் காவல் நாய்ப் பாத்திரத்தின் காரணமாகவும் இலங்கையில் பிரகடனப்படுத்தப்படாத ஒரு இந்திய சீன `பிராந்திய பனிப் போர்`, நடந்து வருகின்றது.

5) சீன சாய்வு ராஜபக்சக்களின், பெரும்பான்மையான சிங்கள மக்கள் `தேர்தலில் தெரிவு செய்த` இரண்டு ஆட்சிகள் இந்தியாவால் கவிழ்க்கப்பட்டது.

இலங்கைப் பொருளாதாரம் வங்குரோத்தடைந்தது குறித்த அனைத்து மயிர் பிடுங்கி விவாதங்களும் யுத்தக் கடனை வசதியாக மறைத்துவிட்டன.கோவிட்டும் வங்குரோத்தும் இந்தியத் தலையீட்டுக்கு வசதியாக வழி திறந்து விட்டன.

6) `ரணிலும் 125 திருடர்களும்` இலங்கையில் `IMF அதானி ஆட்சியின்` அதிபதியும், சட்டபூர்வ அதிகாரிகளும் ஆகினர்.

7) இந்த ஆரவாரத்துக்கு ஆதரவாக ஈழ தேசியப் பிரச்சனை வியாக்கியானப்படுத்தப்பட்டன.

எனினும் இலங்கை ஒரு ஜனநாயக சோசலிச க் குடியரசு என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது அல்லவா,

அரசியல் சட்டப்படி புதிய அதிபதியும், புதிய அதிகாரிகளும் `மக்களால் தெரிவு` செய்யப்படவேண்டும். 

செப்டெம்பர் 21 2024 இல் ஜனாதிபதித் தேர்தலும் தொடர்ந்து பொதுத் தேர்தலும் வரவுள்ளன.

``வீட்டுக்குப் போக வீட்டுக்குப் போடுங்கள்!``, ``உலகுச் சொல்ல சங்குக்கு போடுங்கள்!!`` என இனத்துவம் பணிவுடன் இதைப் பின் தொடருகின்றது! 

தேர்தல் விஞ்ஞாபனங்கள்;

இனிமேல் தேர்தல் விஞ்ஞாபனங்கள் மீது நமது பார்வையைச் செலுத்தலாம்.

சர்வதேசிய உலக மறுபங்கீட்டுப் பிரச்சனை.
IMF நிதி மூலதன ஆதிக்கப் பிரச்சனை.
இந்திய விரிவாதிக்க தலையீட்டுப் பிரச்சனை.
ஈழ தேசியப் பிரச்சனை.
வாழ்வாதாரப் பிரச்சனை.

இவை தான் இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான பிரச்சனைகள். இவை தொடர்காலனியத்தில் தொப்புள் கொடி கொண்டவை.

ஒரு புதிய அதிபதியிடம், ஒரு புதிய அரசாங்கத்திடம், ஒரு புதிய ஆட்சியிடம் மக்கள் எதிர்பார்ப்பது இப்பிரச்சனைகளுக்கான தேசிய நலன் சார்ந்த ஜனநாயகத் தீர்வுகள் ஆகும்.

துரதிஸ்டவசமாக அத்தகைய தீர்வு இந்த மூன்று பிரகிருதிகளிடமும் இல்லை என்பது மட்டுமல்ல, எதிர்மறையான தீர்வையே இவர்கள் மூவரும் கொண்டுள்ளனர்.

நாடாளமன்றத் தேர்தலும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஒரு வேறுபாடு இவர்களில் ரணில் இத் தொடர்காலனிய அடிமைத்தனத்தை நிலை நிறுத்துவதில், பாசிச பயங்கரத்தைக் கட்டவிழ்ப்பதில் தீர்க்கமான பார்வையும் திடமும் திண்ணியமும் கொண்டவர்.

அதிகாரக் கைமாற்றத்தை அண்மித்த காலத்திலேயே (1950) இலங்கைப் பொருளாதாரம் உலக வங்கியால் வழி நடத்தப்பட ஆரம்பித்து விட்டது. எழுபதுகளில் ஜே.ஆர். திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கட்டவிழ்த்தார், ஆனால் அதே காலத்தில்,ஜே.ஆர் `அப்படியொன்று இல்லவே இல்லை` என்று அடம்பிடித்த ஈழ தேசியப் பிரச்சனை வன்முறை வடிவத்தை எடுத்து 1983 இல் உள்நாட்டு யுத்தமானது.யுத்தம் 2002 வரை தொடர்ந்தது.ஆக ஜே.ஆரின் திட்டம் நாடு முழுவதும் அமைதியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. 2002 பேச்சுவார்த்தைக் காலத்தில் ரணில் பிரதமராக இருந்தார். முதல் வேலையாக யுத்தம் ஓய்ந்த இலங்கையின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய உலக வங்கியிடம் திட்டம் கோரப்பட்டது.அந்தத் திட்டம் இலங்கை அரசாங்கத்தின் திட்டமாக Regaining Sri Lanka என்ற பெயரில் 225 பக்க ஆய்வறிக்கையாக வெளியிடப்பட்டது.

ஒரு வரியில் சொல்வதானால் இலங்கைப் பொருளாதாரத்தை 10% வளர்ச்சியை எட்ட வைக்க இத்திட்டம் வழி வகுக்குமென பிரகடனம் செய்யப்பட்டது.

இவ்வறிக்கையின் முன்னுரையில் மே மாதம் 5ஆம் திகதி 2003 இல் பிரதமர் ரணில் கையொப்பமிட்டிருந்தார்.

ஆனால் 2006 இல் மீண்டும் யுத்தம் ஆரம்பித்துவிட்டது. Regaining Sri Lanka நடைமுறைப்படுத்தப்படவில்லை.

2009 இல் யுத்தம் ஓய்ந்தது. ராஜபக்சக்களின் ஆட்சி,சீனச் சாய்வு, இந்தியத் தலையீடு, அறக்கலய, கோத்தா கலைப்பு, இவ்வாறு நாடு அல்லோல கல்லோலப் பட்ட போதும் Regaining Sri Lanka நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஆக ஒரு 50 ஆண்டுகள் இந்த திறந்த பொருளாதாரத்திட்டம் முழு வீச்சுடனும், முழுத் திறனுடனும் முழு நாட்டையும் ஒட்டச் சுரண்டும் வண்ணம் நடைமுறைப் படுத்த புற நிலைமை அனுமதிக்கவில்லை.

அதற்கான சந்தர்ப்பம் இப்போதுதான் மீண்டும் ரணிலுக்குக் கிடைத்திருக்கின்றது. அவர் பேசுவது முழுவதும் Regaining Sri Lanka இன் விஸ்தரிக்கப்பட்ட இன்றைய வடிவமே.

ரணில் இதனை தன் வாழ் நாட்பணியாக சிரமேற் கொண்டிருப்பதில் வியப்பில்லை.


அதிஸ்ரவசமாக ஜனாதிபதியான ரணிலுக்கு, ஏற்பட்டுள்ள துரதிஸ்டம் என்னவென்றால், அறக்கலய மாலை போட்டு ஆளவந்த ரணில், இரண்டு வருடம் IMF இன் Austerity திட்டத்தை அமுலாக்கிக் கொண்டு தொடர்வதற்கு ஆணை கேட்கின்றார்! 

ஏனையோர் பூசி மழுப்பி புதிதாக கேட்கின்றனர்!

நிறைவேறப் போவது என்னவோ IMF இன் Austerity திட்டம் தான்.

இந்தியக் குகைக்குள் இருக்கின்ற இனத்துவ நரிகள் இதைக் கண்டும் காணாதது மாதிரிக் காட்டி ஆதரவு வழங்குகின்றனர்.

தேர்தலுக்குப் பிந்திய மக்களின் வாழ்க்கையை இது தான் தீர்மானிக்கப் போகின்றது.

இனி வாருங்கள் சங்கின் சங்காரம் கேட்போம்!

விடுதலைப் புலிகள் அமைப்பு, தேசியப் புரட்சிகளின் சரித்திரத்தில் குறிப்பிடத்தக்க ஒரு அமைப்பாகும். அந்த முப்பது ஆண்டுகளும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவை.குறிப்பாக அதன் தலைவர் நமது கால ஈழத்தின் `சோழ மகா ராசன்` என்பதில் சந்தேகமேயில்லை.

எங்கும் எப்போதும் போலவே நம்மிடம் கையளிக்கப்படுகிற வரலாற்றைத் தான் நாம் கையெடுத்து முன்னெடுத்து செல்கின்றோம். அதன் குற்றம் குறைகளும், பெருமையும் சிறுமையும் சேர்ந்துதான் அவை கையளிக்கப்படுகின்றன.

இவை நாட்டுக்கு நாடு புரட்சிக்கு புரட்சி தனித்துவமானவை.

பிரபாகரன் அவர்கள் விடுதலைப் புரட்சியைக் கையேற்றதும், கையளித்ததுமான சுமார் 30 ஆண்டு காலம் `சிலுவை சுமந்த` கதையாகவே இருந்தது.நாடாளமன்ற சமரசவாதப் பாதையில் இருந்து ஆயுதப் போராட்டப் பாதைக்கு புரட்சியை திருப்பியது, இந்திய ஆக்கிரமிப்புப் படையை விரட்டியடித்தது, 2002 இல் நோர்வே பேச்சு வார்த்தைக்குச் சென்றது, முள்ளிவாய்க்காலில் மீண்டும் போராட முடிவெடுத்தது ஆகிய நான்கு முக்கிய திருப்பங்களிலும் `வரலாற்றில் தனி மனிதனின் பாத்திரம்`  என்கிற வகையில் அவரின் பாத்திரம் இவ்வாறு தான் அமைந்திருந்தது.

இது கீர்த்திமிக்க பாத்திரம் ஆகும்.

இவை எப்பேறு பெற்றவையாக இருப்பினும், தத்துவார்த்த ரீதியிலும், அரசியல் போர்த்தந்திர நோக்கிலும் விடுதலைப் புலிகளின் தமிழீழம், சமஸ்டிக் கட்சியின் `தனி நாட்டின்` சுற்று வட்டத்தை விட்டு வெளியே வரவில்லை.   

இது சித்தாந்தத் துறையில் சிறு உடமை வர்க்கத்துக்கு பெரு உடமை வர்க்கத்திலிருந்து தனித்த ஒரு தத்துவம் இல்லை என்பதில் அடங்கியிருக்கின்றது.

இதனால் புலிகளோடு அக்கம் பக்கமாக, வலது சாரி விதேசிகள் சமாதான சகவாழ்வு நடத்த இயலுமாக இருந்தது.இந்த ஏகாதிபத்திய தாசர்கள், இந்திய விரிவாதிக்க நீசர்கள் பல தளங்களில் இருந்து இயங்கி வந்தார்கள்.

பன்மைத்துவ பலவந்தத்துக்குப் பதிலளிக்கும் முகமாக, -TNA- கூட்டமைப்பை புலிகளே உருவாக்கி விட்டார்கள்!

 தமிழ்நாட்டில் நெடுமாறன், வை.கோபாலச்சாமி, கொளத்தூர்மணி, சீமான், கா.சி.ஆனந்தன் என ஒரு கும்பல், புலம் பெயர் நாடுகளில் நாடு கடந்த அரசாங்கம், நாட்டுக்கு நாடு பேரவைகள், என இக் கிருமிகள் பல்கிப் பெருகிப் பரந்து விரிந்து ஆனால் பதுங்கி இருந்தன முள்ளிவாய்க்கால் வரை. 

இவர்கள் மத்தியில் தான் தாயகத்தில் சிலர் புலிகளுக்குள்ளும் வெளியிலுமாக செயற்பட்டு வந்தனர்.பெரும்பாலும் புலி ஆதரவு பிரச்சாரகர்களாகவும், பத்தி எழுத்தாளர்களாகவும், புனைவு இலக்கியம் எழுதுபவர்களாகவும், புலிகள் தீண்டத்தகாத பயங்கரவாதிகளாக இருந்ததால் சட்டபூர்வ காரியங்களில் ஈடுபடுபவர்களாகவும், பாலசிங்கத்துக்கு பக்கத் துணையாளர்களாகவும் இருந்துவந்தனர்.

இவர்களுள் முக்கியமானவர் (கட்டைத் திருநா என செல்லமாக அழைக்கப்பட்ட) மு.திருநாவுக்கரசு.சிந்தனா பூர்வமாக ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க அடிமை.இவர் -ஏகாதிபத்திய-அன்ரன் பாலசிங்கத்துக்கு அடுத்த இரண்டாம் நிலை -இந்திய இனத்துவ-தத்துவ ஆசிரியராக இருந்தார். பல்கலைக் கழக உறவும் சேர்ந்து- இவரைச் சுற்றி ஒரு சீடர் குழாம் உருவாகிக் கொண்டது.இவர்களில் பலர் மே வரை  முள்ளிவாய்க்காலில் நின்று கொள்ளி வைத்து விட்டு பாதுகாப்பாக வெளியேறி வந்தவர்கள்! 

2002 பேச்சுவார்த்தையை கையாண்ட முறையில் புலிகள் அரசியல் தவறு இழைத்திருந்தாலும் அதிலிருந்து மீண்டு வந்து போரைத் தொடர அவர்கள் கடைசிக் கணம் வரையிலும் முயன்றார்கள். முழு முற்றுகையிலும் கூட உடைத்து வெளியே வர திட்டம் தீட்டினார்கள். அதற்கு தீ மூட்டியது இந்தியாவின் ஆனந்த புர விச வாயுத் தாக்குதல்.அதனால் தான் ஆயுதங்கள் மெளனித்தது. ( ``இல்லையென்றால் நிலைமை வேறு திசையில் சென்றிருக்குமென`` டி.பி.எஸ்.ஜெயராஜ் பதிவு செய்துள்ளார்.)

அப்போது  ``போராடும் முறை மாறலாம்,ஆனால் போராட்ட இலட்சியம்-தமிழீழம்-மாறாது`` என்று கூறப்பட்டது, கூடவே ஏதோ ஆயுதப் போராட்டம் என்றால் ஜனநாயகமற்றது போலவும், நாடாள மன்றம் ஒன்றே ஜனநாயகப் பாதை போலவும், இனிமேல் `` ஜனநாயகப் பாதையில் போராட்டம் தொடரும்`` என்றும் ஒரு சேர  அறை கூவல் விடுக்கப்பட்டது.

15 ஆண்டுகளுக்குப் பின்னால் நடந்திருப்பது என்ன?

இரண்டு அவமானச் சின்னங்கள் எஞ்சி இருக்கின்றது...நேத்திரன், சிறீதரன்!

இந்த ஜனநாயக அரசியல் போராட்டம், இவ்வாறு மெளனித்தது -உண்மையில் மரணித்தது எவ்வாறு? அதற்கு யார் பொறுப்பு? பொறுப்புக் கூறுவார் யார்?

இதற்குக் காரணம் மேலே விளக்கிய இந்த தேசத்துரோக அந்நியக் கைக்கூலி விதேசிகள் தான்.




முள்ளிவாய்க்காலுக்குப்பின்னால், தமிழ், தமிழ் இனம், தமிழ்த் தேசியம், தமிழ்க் கட்சிகள், வெல்க தமிழ் ( கவனியுங்கள் இங்கு தமிழ் தான் உள்ளது, தமிழீழம் இல்லை!) என்று ஏமாற்றி இந்த விதேசியக் கும்பல் தமிழீழப் போராட்டத்தைக் கையிலெடுத்தது. 

இவ்வாறு தமிழீழ அரசியல்,அமைப்பு,தலைமை,தலைவன் என்று எல்லாவற்றையும் சிதைத்து சீரழித்து சின்னாபின்னமாக்கி அழித்தொழித்து சுமந்திரனின் கையில் காவு கொடுத்தது இந்தக் கும்பல்தான்.

ஆக தமிழ்த் தலைமை என்று எஞ்சியது  ஒரு கருணா கும்பல்.

இனிமேல் எதுவும் இல்லை என்று ஆக்கிய பிறகு  இன்னும் பிரச்சனை- இருக்கின்றது என்று சொல்லி- என்று சொல்ல, `பொதுக் கட்டமைப்பு, பொது வேட்பாளர்` என்று வருகின்றது  திருநா கும்பல்.

முன் கதவால் கூட்டமைப்பு ஒழிய, பின் கதவால் கட்டமைப்பு நுழைகின்றது.

சம்பந்தனோடு அது பாடையேற, சந்திரனோடு இது மேடையேறுகின்றது.

திருநா கும்பல் கூறுவது ஆக 3 விடயம் தான்.

1) பொதுக்கட்டமைப்பு என்பது 7 தமிழ்க் கட்சிகளினதும், 83 சிவில் அமைப்புக்களினதும் சங்கமம்.

2) தமிழர்களுடைய பிரச்சனை இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ளதை உலகுக்கு சொல்வது.

3) பொது வேட்பாளர் இந்தச் சங்கமச் சங்கத்தினதும், பிரச்சனைக்கு உள்ளாகியிருக்கும் சனங்களதும் அடையாளச் சின்னம்.

கடந்த 15 ஆண்டுகளாக '7 தமிழ்க் கட்சிகளும், 83 சிவில் அமைப்புக்களும்` தமிழர் பிரச்சனைக்காக செயல்பட்டதற்கான தடயம் எதுவும் இலங்கையில் இல்லை. தமிழ்க் கூட்டமைப்பும், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமும்,கடற்தொழிலாளர் அமைப்பும்,பல்கலைக் கழக மாணவர் அமைப்புக்களும் என ஆக நான்கே நான்கு அணிகள் தான் செயற்பட்டுவந்தன.அதிலும் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் பொதுக்கட்டமைப்பில் இணையவில்லை,கடற்தொழிலாளர் பிரச்சனையை ``தவறுதலாக`` பொதுக்கட்டமைப்பு மறந்து விட்டது.ஆக இந்த எண்ணிக்கையும் இதைப் `பொது` என்பதும் தவறு,மேலும் சேனாதியின் `குளம் கரை விளையாட்டும்`, டெலோ புளட்டின் ரணில் சந்திப்பும் இதை ஒரு `கட்டமைப்பாக`க் காட்டவில்லை.

ஆரம்பத்திலேயே இது ஏன் இவ்வளவு அலங்கோலமாக காட்சியளிக்கின்றது என்றால் இந்த 3 விடயமும் ஏதோ ஒன்றை மூடி மறைக்க இவர்கள் உருவாக்கிய கட்டுக்கதை. 

மூடி மறைக்க முயலும் அந்த விடயம் என்ன? அது தான் முக்கியமானது.

``தமிழர் பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கின்றது`` என்று தொடர்ந்து அமைப்பாக சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் யாருக்கு இருக்கின்றதோ அவர்களுக்கு சேவகம் செய்வதே இந்த கட்டழகர்களின் நோக்கம்.

அது இந்தியா என்பது  தெரியாதவர் யார்? 

இனி தலை கீழாகப் பாருங்கள் அனைத்தும் ஒரு நேர் கோட்டில் வந்து நிற்கும்.

1) 1983 ஜூலை படுகொலையை சாட்டித்தான் இந்தியா இலங்கையில் தலையிட்டது.

2) தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு என்று சொல்லித்தான் இந்திய இலங்கை விரிவாதிக்க ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது.

3) தமிழர்களைக் காக்கவென்றுதான் இந்திய ஆக்கிரமிப்புப் படையை அனுப்பி வெறியாட்டம் ஆடியது.

4) எனினும், இன்னும் இலங்கையில் ஒரு நிலையான இந்திய சார்பு அரசு அமையவில்லை, சீனப் பிரச்சனையும் அகலவில்லை.மேலும் கூர்மை அடைகின்றது.

5) ஆக தமிழர் பிரச்சனை தீர்க்கப்படாமல் தொடர்வது, தலையீட்டைத் தொடர்வதற்கான முன் அவசியம் ஆகும்.

6) கட்டமைப்பின் கட்சிகள்-கருங்காலிகள்- அனைவரும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்று அந்நிய ஆக்கிரமிப்பு ராணுவத்துடன் கூடி கொலைவெறித் தாண்டவமாடிய இரத்தக் கறை படிந்தவர்கள். சுரேஸ் பிரேமச்சந்திரன் மண்டையன் குழுத்தலைவன்.

7) திருநா இந்திய அடிமை,பேராசிரியர், நிலாந்தன்,சோதி லிங்கம்(இது இல்லாத கட்சியும் இல்லை, இருந்த கட்சியும் இல்லை!) வகையறாக்கள் பதுங்கு குழி விதேசிகள்.

8) கூட்டமைப்பின் அந்திமத்துக்குப் பின்னால் இந்தியாவுக்கு ஊளையிட - ``தமிழர் பிரச்சனையை உரத்துச் சொல்ல``- இலங்கையில் ஒரு அரசியல் ஸ்தாபனம் இல்லை. 

9) சங்கூதுகின்றது பொதுக்கட்டமைப்பு.

10) எங்கள் பகைவர் இன்னும் மறையவில்லை!

நிலாந்தன் எழுதுகின்றார்:

`` பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தை முதலில் முன்வைத்த மு.திருநாவுக்கரசு தமிழகத்தில் தங்கியிருப்பதனால்,அவர் இந்தியாவின் ஆள் என்ற சந்தேகம்.அதனால்,பொது வேட்பாளரை இந்தியாவின் ப்ரொஜக்ட் என்று சந்தேகித்தார்கள். அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தை தொடர்ந்து வளர்த்துச் சென்றபடியால் அதுவும் இந்தியாவின் வேலையாக இருக்கலாம் என்ற சந்தேகம்.இம்முறை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே சுரேஷ் பிரேமச்சந்திரன் அந்த விடயத்தை கையில் எடுத்தார்.அதனால் அது இந்தியாவினுடைய  வேலையாகத்தான் இருக்கலாம் என்ற சந்தேகத்தை முன்வைத்தவர்கள் மேலும் உஷாரானார்கள்.அதன்பின் யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஒரு காணொளி ஊடகத்தின் அனுசரணையோடு இயங்கிய ஒரு குடிமக்கள் சமூகம்  பொது வேட்பாளர் தொடர்பாக கருத்தரங்குகளை நடத்தியது.அக்குடிமக்கள் சமூகத்தின் பிரதானியாக இருப்பவர் 13ஆவது திருத்தத்தை தொடர்ச்சியாக ஆதரித்து வருபவர். அவர் அதை வெளிப்படையாகத்தான் செய்கிறார். எனவே அந்தச்சிவில் சமூகம் இந்த விடயத்தைக் கையில் எடுத்த காரணத்தால் அது இந்தியாவினுடைய வேலையாகத்தான் இருக்க வேண்டும் என்ற சந்தேகம் மேலும் அதிகரித்தது.முடிவில் பொது வேட்பாளரை முன்னிறுத்துவதற்கு ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கிய பொழுது,அதில் உள்வாங்கப்பட்ட பெரும்பாலான கட்சிகள் இந்தியாவுக்குக் கடிதம் எழுதியவை.அதனால்  சந்தேகம் மேலும் கூடியது.

மேற்சொன்ன  சந்தேகங்கள் அவ்வளவும் போதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு. எதுக்கெடுத்தாலும் இந்தியாவின் சதி என்று குற்றஞ்சாட்டும் அக்கட்சியானது,பொது வேட்பாளர் என்ற விடயம் இந்தியாவின் அனுசரணையோடு மேடையேற்றப்படும் நாடகம் என்று கூறிவருகிறது``. 

nillanthan.com

ஒப்புதல் வாக்கு மூலத்துக்கு நன்றி.ஆனால் இது சந்தேகம் அல்ல உண்மை. ஒரு வேளை சந்தேகமாக இருந்தாலும் அவ்வாறு சந்தேகிக்க எமக்கு முழு உரிமையும் ஆதாரமும் உண்டு.``எதையும் சந்தேகி``!

மேலும் கூறுகின்றார்:

``ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இலங்கைக்கு வந்த எந்த ஒரு இந்திய பிரதானியும் இதுவரை பொது வேட்பாளருக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கவில்லை என்பதே தொகுக்கப்பட்ட அவதானிப்பு ஆகும்.'`

இந்தப் பிராணிகளில் மிக முக்கியமானவர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல்.

அவருடைய இலங்கை வருகை குறித்த வீரகேசரி பத்திரிகைக் குறிப்பு வருமாறு:

ஒருமித்து நின்று தமிழர் வாக்குகளை உபயோகமாக பயன்படுத்துவதே சிறந்தது.

தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் இந்திய தேசிய ஆலோசகர் எடுத்துரைப்பு.

நா. தனுஜா

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது,  தமிழ் பொது வேட்பாளர் விவகாரம் , தேர்தல் புறக்கணிப்பு , கோஷம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து, தான் எதையும் கூறப்போவதில்லை எனவும் ,  இருப்பினும் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில்  பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும் என்று தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. 

இச் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறிதரன், மற்றும் எம். ஏ.  சுமந்திரன் , டெலோவின் சார்பில் அதன் தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான  செல்வம் அடைக்கலநாதனுக்கும், புளொட் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி சந்திப்பில் சிறிதரன் , சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்த போதிலும் , வெளிநாட்டு பயணமொன்றிற்கு செல்ல வேண்டியிருந்தன் காரணமாக சந்திப்பின் தொடக்கத்திலேயே சிறிதரன் வெளியேறினார்.

சந்திப்பில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு,  மற்றும் ஜனாதிபதி தேர்தல் நிலவரம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன் போது கடந்த 75வருட கால அனுபவத்தில் தமிழ் மக்களால் ஒற்றை ஆட்சியின் கீழ் வாழமுடியாது  என்பதை நாம் புரிந்துகொண்டிருப்பதாகவும்,  அதே போன்று அரசியல் அமைப்புக்கான 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக தோல்வியடைந்திருப்பதன் காரணமாக அதனூடாக தமிழ் மக்களால் முன்னோக்கி செல்ல முடியாது எனவும் தமிழ் மக்கள் தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அஜித் டோவலுக்கு எடுத்துரைத்தார்.

ஆகவே 13 ஆவது திருத்தத்தையும், 2015 ஒற்றையாட்சி முறையையும் உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு முறையையும் தாம் நிராகரிப்பதாக தெரிவித்த கஜேந்திரன், வட , கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி முறையை வென்றெடுப்பதற்கு இந்தியா உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதேபோன்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க  வேண்டும் என்ற தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் கொள்கை குறித்தும், தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான தமிழ் பொது கட்டமைப்பு தீர்மானம் குறித்தும் இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இத்தகைய மாறுபட்ட நிலைப்பாடுகள் தொடர்பிலும் தமிழ் மக்களின் வாக்குவீதம் குறித்தும் கேட்டறிந்த அஜித் டோவல் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று , தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்தது என ஆலோசனை வழங்கினார். அத்தோடு தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் எத்தகைய தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என தான் கூறப் போவதில்லை  என குறிப்பிட்ட அவர், இருப்பினும் இத் தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகள் ஜனநாயகத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பதைக் குறித்து சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வீரகேசரி: 30-08-2024

முக்கியமான 5 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற ஒரு நாடளாவிய தேர்தலில் ஒருமித்து நின்று ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு ஆலோசனை வழங்குவது எப்படி ஜனநாயகமாகும்? 

இப்படி ஒரு தலைவரின் கீழ் ஒருமித்து நின்ற போது அதை சர்வாதிகாரம்-பாசிசம்- பன்மைத் தன்மை வேண்டும் என்றீர்களே அது எப்படி?

இந்த ஒருமித்து நிற்பதைத் தானே நிலாந்தன் `` 7கட்சிகளும் 83 சிவில் அமைப்புகளும் ஒரு புள்ளியில் சந்தித்தது நவீன தமிழர் வரலாற்றில் (!) மகத்தான சாதனை`` என்கின்றார் இல்லையா?

எல்லா(5) இயக்கங்களும் ``ஒருமித்து`` திம்புவில் கோரிக்கை (1985) வைத்தபோது இந்தியா என்ன செய்தது, சகோதரப் படுகொலைகளை ஏவிவிடவில்லையா?

இப்போது மட்டும் ``ஒருமிப்பு`` பேசுவது ஏன்?

இதை நிலாந்தன் அவதானிக்கவில்லையா? இது அறிவியலா?

இது `தமிழ்க் கட்டமைப்புக்கு` தெரியவில்லையா?

இன்று இத்தகைய விசக்கிருமிகள் விளைவதற்கான விளை நிலமாக இனத்துவம் மாறிவிட்டது. அதன் முற்போக்குப் பாத்திரம் முள்ளிவாய்க்காலோடு முடிந்துவிட்டது.

இதை முன்னறிந்து தான் முள்ளிவாய்க்கால் முதல் ஆண்டில் நாம் முன் வைத்த அரசியல் தீர்மானம்-முள்ளிவாய்க்கால் வீரகாவியம்- `` இடைவழிச் சமரசங்களை தோற்கடிப்போம்! இறுதிவரை ஈழம் காண ஊற்றெடுப்போம்!!`` என முழங்கியது.

இந்தப் பதினைந்து ஆண்டுகளில் இந்தச் சமரசம் சரணாகதியில் முடிந்தது நமது தீர்க்க தரிசனத்தை சரியென்று நிரூபித்துள்ளது.

இன்று நிலவும் தொடர் காலனிய இலங்கை அரசு தேசியப் பகைமையின் மீது, தேசிய ஒடுக்கு முறையின் மீது கட்டியமைக்கப்பட்டுவிட்டது. இந்த அரசுமுறைக்குள் தேசிய சமத்துவத்தை அடையமுடியாது. இது தொடர் காலனிய அதிகாரத்தின்,சுரண்டலின் கருவியாக உறிஞ்சு குழலாக உருவாக்கப்பட்டது.அத்தக்கைய ஒரு அரசு முறைக்கு தேசியப் பகைமை ஒரு அடிப்படை நிபந்தனை ஆகும்.இலங்கையைப் போலவே நெரடிக் காலனியாதிக்கத்தில் இருந்து விடுபட்டு தொடர் காலனிகளாக இருக்கும் அனைத்து நாடுகளிலும் தேசியப் பிரச்சனை உண்டு. 

இதன் வேர் உள் நாட்டு அதிகாரத்தில் இல்லை, காலனியாதிக்கத்திலும் அதன் தொடர்ச்சியிலும் இருக்கின்றது.

இதை நாடாளமன்றப் பாதையில் மாற்றமுடியாது. இதற்கு மக்கள் ஜனநாயக இயக்கம் தேவை, அதற்கு தலைமை தாங்க மார்க்சிய லெனினிய கட்சி தேவை.

முள்ளிவாய்க்காலில் இருந்து முன்னேறிச் செல்வதற்கு இது ஒன்றே வழி இதைத் தவிர வேறெந்த குறுக்கு வழியும், விரைவு ரெயிலும் கிடையாது.

போலித் தேர்தலையும் பொது வேட்பாளரையும் புறக்கணிப்போம்!

ஈழப்படுகொலைப் பொதுவாக்கெடுப்புக்குப் போராடுவோம்!!

புதிய ஈழப் புரட்சியாளர்கள்

21-09-2024

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இரத்துச் செய்வதை ஆராய விசேட குழு

  பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இரத்துச் செய்வதை ஆராய விசேட குழு மே முற்பகுதியில் பொதுமக்கள், சிவில் அமைப்புகளிடம் கருத்து April 14, 2025 தின...