SHARE

Monday, November 18, 2013

இளவு சொல்லியழ இடமற்ற உலகத் தமிழன்!


மேற்குலகில் இளையோர் வேலையின்மையின் ஏவுகணை ஏற்றம் ஏகாதிபத்தியத்தின் அந்திமக்காலத்தின் முன்னறிவிப்பாகும்!



Youth Unemployment- இளையோர் வேலையின்மை என்பது, இயல்பான சனத்தொகைப் பெருக்கம் உருவாக்கும் புதிய கூலி வேலைப் பட்டாளத்தை உள்வாங்க ஏகபோக, நிதிமூலதன, உலகமயமாக்க உற்பத்தி முறை சக்தியற்றிருக்கின்றது என்பதாகும்.மேற்குலகில் இளையோர் வேலையின்மையின் ஏவுகணை ஏற்றம் அந்திமக்கால ஏகாதிபத்தியத்தியத்தின்   முன்னறிவிப்பாகும்!



Wednesday, November 13, 2013

ஏகாதிபத்தியவாதிகளும் பக்சபாசிஸ்டுக்களும் ஈழதேசிய இனப்படுகொலையின் கூட்டாளிகளே!


முள்ளிவாய்க்கால் முற்றத் தகர்ப்பு நடவடிக்கையில் ஜெயா நிர்வாகம்! பூங்கா மற்றும் சுற்றுச் சுவர் தரைமட்டம்!!







முள்ளிமுற்றத் தகர்ப்பு நெடுமாறன் விளக்கம்



முள்ளிமுற்றத் தகர்ப்புக் காட்சிகள்



முள்ளி முற்றம் அறிமுகம்


முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுற்றுச் சுவர், பூங்கா  இடித்துத் தரைமட்டம்! 
இதர மையப் பகுதிகளுக்கு என்ன நடக்கும்??


முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின்  முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூங்கா, மற்றும்   சுற்று சுவர் அடங்கிய பகுதிகள் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.இன்று அதிகாலை 5.30 மணிக்கு மூன்று பாரிய கட்டிடத் தகர்ப்பு இயந்திரங்கள் கொண்டு 500 க்கும் மேற்பட்ட அரச காவலர்கள் புடைசூழ இந்த அட்டூழியத்தை நடத்தியிருக்கின்றது இந்திய மத்திய அரசின் தமிழக ஜெயா நிர்வாகம்.

தரைமட்டமாக்கப்பட்ட பகுதி அரசுக்குச் சொந்தமான -புறம்போக்கு-நிலம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.ஆனால் நெடுமாறன் அப்பகுதியில் முற்றம் அமைப்பதற்கு நீதிமன்ற அனுமதிப் பத்திரம் தாம் பெற்றதாகவும் இதனால் இது சட்டவிரோத செயல் என்றும் இதை எதிர்த்து தாம் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறியுள்ளார்.

எதுவித முன்னறிவிப்பும் இன்றி முள்ளிவாய்க்கால் முற்றத்தினை காவல்துறையினரின் பாதுகாப்புடன் இடித்துள்ளார்கள்.அதிகாரிகள் இடித்து தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட போது நான் தடுத்தேன். நீதிமன்ற அநுமதி ரத்துச் செய்யப்பட்ட கடிதங்கள் எனக்கு அநுப்பப்பட்டதாக அவர்கள் கூறினர். ஆனால் அதில் உண்மையில்லை. இது ஒரு சட்டவிரேதமான செயல். இந் நடவடிக்கையில் தமிழ காவல்துறை அதிகாரிகளே ஈடுபட்டுள்ளார்கள். ராஜபக்ச இராணுவம் இதைச் செய்யவில்லை என்றார்  நெடுமாறன். இதனை தடுக்க நினைவு முற்றத்துக்கு விரைந்து  சென்ற தமிழ்உணர்வாளர்கள், தொண்டர்கள், கட்சி அமைப்பினர்கள் என பெருமளவானர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

மேலும் நெடுமாறன் கூறுகையில் `ஈழத்தமிழர் பிரச்சனையில் மத்திய அரசும் மாநில நிர்வாகமும் ஒரே விதமாகச் செயற்படுவதாகவும், சட்ட சபையில் ஈழ ஆதரவுத்  தீர்மானங்கள் நிறைவேற்றிய ஜெயலலிதாவின் முகத்திரை கிழிந்து விட்டது` என்றார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த வை.கோபால் `இலட்சோபம் தமிழ் மக்களின் இதயங்களில் வாழும் பிரபாகரனின் படம் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இருக்கக் கூடாது என ஜெயலலிதாவால் எப்படிக் கோரமுடியும், அங்கே ராஜபக்ச தமிழர் அடையாளங்களை அளிக்கின்றார், இங்கே ஜெயலலிதாவா? என பலமான கேள்வியைக் கிளப்பி `  `சீறி` உள்ளார்!

சம்பவச் சூழலில் மக்கள் ஒன்று கூடுவதற்கு அரச காவலர்கள் தடைவித்துள்ளார்கள். அரச அதிகாரிகள் தாம் தகர்த்த  பகுதிகளை அடையாளப்படுத்தி பெயர்பலகை நாட்டிவிட்டுச்  சென்றனர். எனினும் அங்கு அத்துமீறி திரண்ட மக்கள்  பெயர்ப்பலகைகளை அகற்றியுள்ளனர்.  பெருமளவான மக்கள் குறித்த பகுதிக்கு சென்று இச்சம்பத்தினை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். 

இம்மக்களை ``அமைதிப்படுத்திவிட்டு`` அருகாமையில் உள்ள விடுதி ஒன்றில் குளித்து விட்டு உணவருந்தச் செல்லும் வேளையில் தாம் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருப்பதாக நெடுமாறன் ஊடங்களுக்கு தெரிவுத்துள்ளார்.பொடா சட்டத்தின் கீழ் புழல் சிறையில் ஒன்றரை ஆண்டுகள் என்னை வைத்திருந்தவர் தான் இந்த ஜெயலலிதா.எனவே எங்கிருந்தாலும் எமது சட்டபூர்வ போராட்டம் தொடரும் என்றார் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள்!

கருணாநிதியை ஒழிக்க, ஜெயாப் ``பிசாசுடன்`` கூட்டு வைத்த, காங்கிரசை ஒழிக்க பி.ஜே.பி `` பிசாசுடன்`` கூட்டுவைக்கும்  ` செந்தமிழன் சீமானின்` நாம் தமிழர் அமைப்பு தொண்டர்கள், நினைவு முற்ற தகர்ப்பு கண்டன நடவடிக்கையில் கைது செய்யப்பட்டிருப்பதாக சில இணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி: தகவல் ஊடகங்கள், தொகுப்பு ENB

Wednesday, November 06, 2013

பொலோனியம் அணுக்கதிரியக்க விசம் பாய்ச்சி அரபாத் படுகொலை செய்யப்பட்டார்.


சுவிஸ் மருத்துவ ஆய்வுக்குழுவினரின்  ஆராய்ச்சி அறிக்கையின் இறுதி முடிவு:

பொலோனியம் அணுக்கதிரியக்க விசம் பாய்ச்சி அரபாத் படுகொலை செய்யப்பட்டார்.


Tuesday, November 05, 2013

நவம்பர்7 தர்மபுரி சாதிக்கலவர நாள்! தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்க சூளுரைப்போம்!


கழக காமன்வெல்த் கண்டன ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டத்துக்கு இடமாற்றம்


குறிப்பு: சென்னை மெமோரியல் ஹோலில் ஒன்று கூடத் திட்டமிடப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை தோழர்கள் கவனத்தில் கொள்ளவும்.

ஈழப் படுகொலைப் பாசிச மோடியே திரும்பிப் போ!

  ஆனந்தபுரத்துக்கு திட்டம் வகுத்த ஈழப்படுகொலைப் பாசிச மோடியே  திரும்பிப் போ! சொல்லில் சோசலிசமும் செயலில் பாசிசமுமான, சமூக பாசிச அனுரா ஆட்சிய...