சுவிற்சர்லாந்தில் மாநாடு -மிகவும் இரகசியமாக- தொடர்கிறதுவீரகேசரி இணையம் 11/21/2009 2:07:12 PM - சுவிற்சர்லாந்தில் நடைபெற்றுவரும் இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களுக்கு இடையிலான மாநாடு மிகவும் இரகசியமாக நடைபெற்று வருவதாகவும் ஊடகவியலாளர்களோ வெளிநபர்களோ அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பிறவுன்பீல்ட் மாநிலத்தில் பிரசித்திபெற்ற நதிகளில் ஒன்றான றைன் நதிக்கரையில் அமைந்துள்ள விடுதியொன்றில் இச்சந்திப்பு மூன்றாவது நாளாகவும் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருப்பதாக சுவிஸ் நாட்டிலுள்ள எமது இணையத்தளத்தின் வாசகர் ஒருவர் தெரிவித்தார்







Read more