SHARE

Wednesday, June 26, 2024

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி! இலங்கை மாலுமி கொலை? இந்தியப் படகு கைது.

 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைது




லங்கை கடற்படையினர், இன்று (ஜூன் 25, 2024) அதிகாலை யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதிக்கு அப்பால் கடலில் மேற்கொண்ட இந்த விசேட நடவடிக்கையின் போது இலங்கைக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகொன்றுடன் (01) பத்து (10) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குறித்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்படுவதற்கு எதிராக இந்திய மீன்பிடிப் படகை ஆபத்தான மற்றும் கலகத்தனமான முறையில் கையாண்டதன் காரணமாக,கடற்படையின் சிறப்பு படகுகள் படையணியின் மாலுமி ஒருவர் கடுமையாக காயமடைந்து யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.

உள்நாட்டு மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், நாட்டின் கடற்பரப்பை அத்துமீறி வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு கடற்படை மிகவும் கடினமான மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, இன்று (2024 ஜூன் 25,) அதிகாலை, இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பல இந்திய மீன்பிடிப் படகுகளைக் கண்டறிந்த வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் குறித்த மீன்பிடிப் படகுகளை விரட்டும் சிறப்பு நடவடிக்கையொன்று விரைவுத் தாக்குதல் படகுகள் மூலம் மேற்கொண்டுள்ளனர். அங்கு காங்கேசந்துறைக்கு அப்பால் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகொன்றுடன் (01) பத்து (10) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் கைது செய்யப்படுவதற்கு எதிராக இந்திய மீன்பிடிப் படகை ஆபத்தான மற்றும் கலகத்தனமான முறையில் கையாண்டதன் காரணமாக,கடற்படையின் சிறப்பு படகுகள் படையணியின் மாலுமி ஒருவர் கடுமையாக காயமடைந்து யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.

(தமது) நாட்டின் கடற்பரப்பிற்கு அப்பால் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீன்பிடி படகுகளை விரட்டுவதற்கு கடற்படை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக, இந்திய மீனவர்கள் தங்களுடைய மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தி கடற்படை கப்பல்களுக்கும் கடற்படையினருக்கும் ஆபத்தான முறையில் வன்முறையாக நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர். இத்தகைய வன்முறை எதிர்ப்பை எதிர்கொண்டு, இரவு சூழ்ந்துள்ள நிலையிலும் இந்திய மீன்பிடி படகுகளை இந்த நாட்டின் கடல் எல்லைக்கு அப்பால் விரட்டுவதற்காக கடற்படை மிகவும் கடினமான மற்றும் ஆபத்தான சவாலான சூழ்நிலைகளை எதிர்கொண்டு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதேபோல், இன்று (25 ஜூன் 2024) காலை இந்திய மீன்பிடி படகுகளை விரட்டும் இந்த சிறப்பு நடவடிக்கையில், கடற்படையின் சிறப்புப் படகுகள் படையைச் சேர்ந்த ஒருவர், இந்திய மீன்பிடி படகை சிறைபிடிக்க விரைவுத் தாக்குதல் படகில் இருந்து இந்திய மீன்பிடி படகில் ஏறிக் கொண்டிருந்த போது இந்திய மீன்பிடிப் படகை அபாயகரமாகவும் வன்முறையாகவும் கையாள்வதால் ஏற்பட்ட விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். அங்கு, கடற்படை விரைவுத் தாக்குதல் படகின் மேலோட்டமும்-மேற்பகுதிகளும்- சேதமடைந்தது.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடிப் படகு (01) மற்றும் படகில் இருந்த பத்து (10) இந்திய மீனவர்களும் காங்கசந்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

மேலும், 2024 ஆம் ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இருபத்தெட்டு (28) இந்திய மீன்பிடி படகுகளும் இருநூற்று பதினான்கு (214) இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்⍐.

Source: Sri Lanka Navy

No comments:

Post a Comment

Moody's may raise credit rating, SL achieves significant step forward in EDR- IMF

  Moody's may raise Sri Lanka's credit rating Moody's may raise Sri Lanka's 'Ca' long-term foreign currency rating, ...