SHARE

Sunday, June 09, 2024

மூன்றாம் மோடி கலப்பாட்சியில் 72 அமைச்சர்கள்! கூட்டணி கட்சிகளுக்கு 11 அமைச்சர் பதவி!!


  • புதிய அமைச்சரவையில், பிரதமர் உட்பட 24 மாநிலங்களைச் சேர்ந்த 72 பேர் 
  • தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உட்பட கூட்டணி கட்சிகளுக்கு 11 அமைச்சர் பதவி
  • தமிழ் நாட்டில் எல்.முருகனுக்கு அமைச்சுப் பதவி, அண்ணாமலை அமைப்பாளராக நீடிப்பு

பிரதமர் நரேந்திர மோடிதலைமையிலான புதிய அரசு நேற்று பதவியேற்றுக் கொண்டது. புதிய அமைச்சரவையில், பிரதமர் மோடி உட்பட 24 மாநிலங்களைச் சேர்ந்த 72 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 11 பேர் இடம்பெற்றுள்ளனர்.

ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியை (டிடிபி) சேர்ந்த டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி மற்றும் ராம் மோகன் நாயுடு ஆகிய 2 பேர் இடம்பெற்றுள்ளனர். இக்கட்சிக்கு மொத்தம் 16 எம்.பி.க்கள் உள்ளனர்.

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியை (ஜேடியு) சேர்ந்த ராம்நாத் தாக்குர் மற்றும் லலன்சிங் ஆகிய 2 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இக்கட்சிக்கு மொத்தம் 12 எம்.பி.க்கள் உள்ளனர்.

இதுபோல, சிவசேனா (ஷிண்டே) கட்சிக்கு 7 எம்.பி.க்கள் உள்ளனர். ஆனால் இக்கட்சியைச் சேர்ந்த பிரதாப் ராவ் ஜாதவ் மட்டும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.

லோக் ஜனசக்தி கட்சிக்கு (ராம் விலாஸ்) 5 எம்.பி.க்கள் உள்ள நிலையில் சிராக் பஸ்வானுக்கு மட்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எச்.டி.குமாரசாமி, ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர். இவ்விரு கட்சிகளுக்கும் தலா 2 எம்.பி.க்கள் உள்ள நிலையில் ஒருவருக்கு மட்டும்அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஒரே ஒரு எம்.பி.யை கொண்ட இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் ஜிதன் ராம் மாஞ்சி, அப்னாதளம் கட்சியின் அனுப்ரியா படேல் உட்பட மொத்தம் 11 பேர் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். பாஜக சின்னத்தில் போட்டியிட்ட விகாஷீல் இன்சான் கட்சியின் ராஜ் பூஷன் சவுத்ரியும் அமைச்சராகியுள்ளார்.

ENB

இதுதவிர மாநிலங்களவை உறுப்பினராக உள்ள இந்திய குடியரசு கட்சியின் ராம்தாஸ் அதவாலேவும் மீண்டும்அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

2 இடங்களில் வென்ற ஜனசேனா, தலா 1 இடத்தில் வெற்றி பெற்ற அசாம் கண பரிஷத், ஐக்கிய மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்), சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, ஜார்க்கண்ட் அனைத்து மாணவர்கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுக்கு இடம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது⍐.

10 Jun, 2024 05:25 AM இந்து தமிழ்

No comments:

Post a Comment

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம். ஏப்ரல் 5, 2025 ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிமேதகு பிரதமர் ஸ்ரீ நரேந்த...