SHARE

Tuesday, October 03, 2023

HRCSL's dire warning against the proposed 'Online Safety Bill'

 


TM 02 Oct 2023 | BY Lahiru Doloswala

HRCSL's dire warning against the proposed 'Online Safety Bill'

In a letter penned by Chairman of the the Human Rights Commission of Sri Lanka (HRCSL) former Supreme Court Judge Lakshman Tikiri Bandara Dehideniya, the Government has been urged to exercise caution in its approach to the proposed Online Safety Bill (OSB). The letter, addressed to Minister of Public Security Tiran Alles, emphasises the importance of safeguarding fundamental rights while addressing the challenges posed by online spaces. 

The HRCSL’s recommendations touch on critical aspects of the bill, including the misapplication of existing laws, concerns over political independence, and the need for clear criteria in classifying online accounts. One of the most striking points in the letter is the acknowledgement of the significance of making online spaces safer for Sri Lankans. While the objective is laudable, the HRCSL underscores the challenges faced by law enforcement authorities in interpreting and applying current criminal laws to online activities. 

The misapplication of section 3 of the International Covenant on Civil and Political Rights (ICCPR) Act, No. 56 of 2007, is cited as a prime example, raising doubts about its effectiveness in addressing online incitement to violence and the potential for stifling free speech. Despite previous notifications to authorities regarding this issue, the misapplication of the ICCPR Act continues, as evidenced by a recent High Court case.  These concerns have led the HRCSL to propose a reconsideration of the timing of the OSB. 

The HRCSL argues that strengthening the institutional capacity of law enforcement authorities should precede the introduction of new legislation, highlighting the risk of jeopardising freedom of speech and expression without such reforms. The HRCSL has also presented a series of general observations and recommendations aimed at ensuring that the OSB aligns with the fundamental rights chapter of the constitution. These include refraining from criminalising statements deemed merely "distressing," ensuring the political independence of the proposed Online Safety Commission (OSC), and revising procedures to afford individuals an opportunity to be heard.

Additionally, the letter notes the need for clear criteria in classifying 'inauthentic online accounts' while preserving online user freedoms and cautions against vesting police powers in private actors assisting investigations. HRCSL plans to engage with relevant stakeholders to further refine its observations and recommendations on the proposed OSB.  In doing so, the HRCSL aims to strike a balance between online safety and the protection of fundamental rights in Sri Lanka's evolving digital landscape.

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்து

TM 03 October 2023

வர்த்தமானியில் அண்மையில் வெளியிடப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்யுமாறு வலியுறுத்தியுள்ள, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அதற்காக ஏழு பரிந்துரைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அந்த ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்துடன் இணங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் குறித்த சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்கு, பொது அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் பரிசீலனைக்காக முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.

குறித்த கடிதத்தில், அப்பாவி மக்கள் குற்றவாளிகளாக்கப்படும் சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும், அவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் சாதாரண நீதிமன்றங்களின் ஊடாக நட்டஈட்டை பெறுவதற்கான வழிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொலிஸாரின் விசாரணைகளுக்கு உதவும் நோக்கில், நியமிக்கப்படும் நிபுணர்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுதல் தவிர்க்கப்படல் வேண்டும் உள்ளிட்ட 7 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆசிய இணையக் கூட்டணி கவலை.


இதேவேளை, உலகின் மிகப் பெரிய சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆசிய இணையக் கூட்டணி, இலங்கையின் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளது.

ஆசிய இணையக் கூட்டணி என்பது முன்னணி இணையம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பாகும்.

இதில் Google, Meta, Amazon, Apple, Booking.com, Expedia Group, LinkedIn, Spotify,Yahoo ஆகிய நிறுவனங்கள் உறுப்பினர்களாக அடங்குகின்றனர்.

இந்தச் சட்டமூலமானது கருத்து வேறுபாடுகளையும், இலங்கையர்களின் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமைகளையும் நசுக்குவதற்கு ஒரு கொடூரமான கட்டமைப்பை வழங்குவதாக ஆசிய இணையக் கூட்டமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜெஃப் பெயின் (Jeff Paine) அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் எந்தவொரு பங்குதாரர்களின் ஆலோசனையையும் மேற்கொள்ளாமல் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை முன்னெடுத்து செல்கின்றமை குறித்து கவலையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது உறுப்பினர்களின் சேவைகளை பயன்படுத்தும் பயனர்களின் பாதுகாப்பை தாம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், அதற்கான முயற்சிகள் சட்டத்தின் மூலம் முடக்கிவிடக் கூடாது எனவும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

இலங்கை அரசாங்கம் நியாயமானதாகவும், சர்வதேச தரங்களுக்கு இணங்கவும் தொழில்துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஆதரிக்கும் விதிமுறைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஆசிய இணைய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Moody's may raise credit rating, SL achieves significant step forward in EDR- IMF

  Moody's may raise Sri Lanka's credit rating Moody's may raise Sri Lanka's 'Ca' long-term foreign currency rating, ...