SHARE

Wednesday, October 16, 2019

தமிழர் விரோத 5 சமரசக் கட்சிகள் கைச்சாத்திட்ட 13 கோரிக்கைகள்.

OCT 15, 2019
ற்காலத்தில் Fashion ஆகிவிட்ட, அந்நிய ஊடுருவிகளால் தலைமையேற்று நடத்தப்படும் ``சிவில் சமூகப் போராட்டங்களின் `` பாணியில், ஈழத்தமிழர்களை `தேர்தல் புறக்கணிப்பு-பொது வாக்கெடுப்பு` வழியில் இருந்து, திசை திருப்ப  ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் திட்டம் அவசியமாக உள்ளது.

இந்தச் சூழலில் , வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களால், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, பாராளமன்ற கட்சிகளின் தனிப்பட்ட நிலைபாடுகளுக்கு அப்பால், தமிழ் மக்கள் சார்பாக பொதுவான கோரிக்கைகளை முன்வைக்கும் முகமாக அரசியல் கட்சிகளின் கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டதாக ஊடகச் செய்திகள் மூலம் அறியமுடிகின்றது..

இவ்வாறு உருவான 13 அம்சக் கோரிக்கைகளில் `` பொது உடன்பாடு``எட்டியதாக தமிழ் அரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட் மற்றும் ஈபிஆர்எல்எப் ஆகிய 5  கட்சிகளின் தலைவர்கள் நேற்று கையொப்பமிட்டனர்.இக் கூட்டத்தில் பங்கேற்ற ஆறாவது கட்சியான அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் -(வடக்கு கிழக்கு தனியான தேசம் என்பதால் அப்பகுதியில் இக்கட்சி வேறு பெயரில் இயங்குகின்றது!),`` பொது உடன்பாடு`` எட்டாததால் கை, ஒப்பமிடவில்லை.

இவ்வாறாகத்தானே ஜனாதிபதித் தேர்தலை ஒட்டி உருவான அந்த ``ஐந்து தமிழ்க்கட்சிகளின் பொது உடன்பாட்டு ஆவணம்`` வருமாறு:
இலங்கைத் தீவின் தேசியக் கேள்வியாக கடந்த பல பத்தாண்டுகளாக நீடித்து வந்திருப்பதும், மூன்று தசாப்தங்களுக்கு  மேலாக நீடித்து நிகழ்ந்த யுத்தத்துக்கு வழிவகுத்ததுமான, 
தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு என்பது, தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை அங்கீகரித்து, வடக்கு – கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பிரதேசம் தமிழ் தேசத்தின் வரலாற்று ரீதியான வாழ்விடம் என்பதனையும், மரபுவழித் தாயகம் என்பதனையும் அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும் அங்கீகரித்து, தமிழ் மக்களுக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதனை அங்கீகரித்து, சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் ஏற்படுத்தப்படவேண்டும் எனும் எமது நிலைபாட்டுக்கு அமைவாக; 
நடந்து முடிந்த போரின் தாக்கத்தாலும் நீடித்து கொண்டிருக்கும் விளைவுகளாலும் தமிழ் மக்கள் தொடர்ந்து எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வை சாத்தியமான வழிகளில் காணமுடியும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளாகிய நாம் இதற்குக் கீழ் காணப்படும் கோரிக்கைகளை அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகளிடமும் அவற்றின் அதிபர் வேட்பாளர்களிடமும் முன்வைக்கின்றோம்.

கோரிக்கைகள்

1) புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பில் ஒற்றையாட்சி முறைமையை நிராகரித்து தமிழ் தேசத்தினை அங்கீகரித்து அதற்குத் தனித்துவமான இறமை உண்டு என்பதனையும் தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதனையும் அங்கீகரித்து சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும்.

2) இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றுக்கு முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற சர்வதேசப் பொறிமுறையிலான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் / சர்வதேச தீர்ப்பாயம் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

3) பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படல் வேண்டும்.

4) தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்.

5) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேசப் பொறிமுறையின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும்.

6) வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நிலை கொண்டிருக்கும் அரச படைகள் போருக்கு முன் தமிழ் மக்களின் பாவனையிலிருந்த தனியார் மற்றும் அரச காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு அக்காணிகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்படுவதுடன், மீள்குடியமர்வு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படல் வேண்டும்.

7) வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அரச ஆதரவுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிங்களமயமாக்கல், பௌத்தமயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

8) வடக்குக்கு மகாவலி நதியை திசை திருப்புவது என்ற போர்வையில் வடக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கு மாத்திரமே திட்டமிட்டுச் செயற்படும் சபையாக மகாவலி அதிகார சபை இயங்குவதால் மகாவலி அதிகார சபையின் நியாயாதிக்கம் வடக்கில் இல்லாது ஒழிக்கப்படல்வேண்டும். அத்துடன், கிழக்கில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படல்வேண்டும்.

9) அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மொரகஹகந்த நீர்பாசனத் திட்டத்தின் கீழ் வன்னிப் பிரதேசத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

10) தொல்லியல் திணைக்களம், வனவளத் திணைக்களம், வன உயிரினங்கள் திணைக்களம் உள்பட பல அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நில, வழிபாட்டுத்தல ஆக்கிரமிப்புகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். மேற்குறிப்பிடப்பட்ட திணைக்களங்கள் ஊடாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசிதழ் பிரகடனங்களிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

11) போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தியையும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினையும் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு வெளிநாடுகளில் வாழ் இலங்கையர்களிடமிருந்து நேரடி முதலீடுகளை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இங்கு காணிகளையும் நிதிகளையும் கையாள்வதில் இப்போது அவர்கள் எதிர்கொள்ளும் சட்டப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

12) வடக்கு – கிழக்குக்கான அரச மற்றும் தனியார் துறைகளின் வேலைவாய்ப்புக்களில் அந்தந்த மாகாணத்தைச் சார்ந்த மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படல்வேண்டும்.

13) வடக்கு – கிழக்கினை போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தி அதன் அபிவிருத்திக்கான நிதியினைக் கையாள்வதற்கு வடக்கு – கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில் பொதுக்கட்டமைப்பு ஒன்றினை உருவாக்குதல் வேண்டும்.

மேற்சொன்ன கோரிக்கைகளில் உடனடியாக தீர்க்கப்படவேண்டிய விடயங்களுக்கு அதிபர் தேர்தல் முடிவடைந்து புதிய அதிபர் பதவியேற்று 3 மாதகாலப் பகுதிக்குள் தீர்வு காணப்படல் வேண்டும்.





Sunday, October 13, 2019

சமரன்: நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்த...

சமரன்: நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்த...: கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாத  நிலைப்பாடும்  கட்சி ஐக்கியத்திற்கான முயற்சிகளும் பிளவுகளும் 2 நக்சல்பாரி எழுச்சியும் மா.லெ. கட...

Thursday, October 03, 2019

சமரன்: நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்த...

சமரன்: நவீன திரிபுவாதத்தையும் கலைப்புவாதத்தையும் எதிர்த்த...: கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாத நிலைப்பாடும் கட்சி ஐக்கியத்திற்கான முயற்சிகளும் பிளவுகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவுகளுக...

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...