SHARE

Sunday, March 25, 2018

ஆனந்த சுதாகரனின் மகள் சங்கீதாவின் கருணை மனு!





ஜனாதிபதியின் மகளுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதிய ஆனந்த சுதாகரனின் மகள்
March 22, 2018  11:29 pm

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மகள் சங்கீதா தனது அப்பாவை மன்னித்து விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் மகள் சதுரிகாவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கடந்த 15 ஆம் திகதி அன்று சுகயீனம் காரணமாக மரணமடைந்த தனது மனைவியின் இறுதி நிகழ்வுக்கு சிறைவிடுப்பில் வருகைதந்த ஆனந்தசுதாகர் இறுதி நிகழ்வு முடிந்து மீண்டும் சிறைசாலை பேரூந்தில் மகசீன் சிறைச்சாலை நோக்கி செல்வதற்கு ஏறிய போது அவரது பத்து வயது மகள் சங்கீதாவும் சிறைச்சாலை பேரூந்தில் தந்தையுடன் சேர்ந்து ஏறியமை அனைவரின் மனங்களையும் நெகிழவைத்த உருக்கமான காட்சியாக இருந்தது.

தாயும் தந்தையும் இல்லாத நிலையில் வாழ்ந்து வரும் கனிரதன் மற்றும் சங்கீதாவின் நிலைமைகளை கருத்தில் கொண்டு ஆனந்தசுதாகருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு பல மட்டங்களிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்தான் இன்று (22) ஆனந்தசுதாகரின் மகள் சங்கீதா ஜனாதிபதியின் மகள் சதுரிகாவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

அன்புடன் சதுரிகா அக்காவுக்கு!

அம்மாவையும் இழந்து அப்பாவையும் பிரிந்து நானும் அண்ணாவும் அநாதையாய் இருக்கின்றோம். நான் அம்மாவின் வயிற்றில் இருந்த போதே அப்பா கைது செய்யப்பட்டார். எனக்கு இன்று எனக்கு பத்து வயது இதுவரைக்கும் அப்பாவுடன் பாசமாக பழகியது இல்லை. அம்மாவின் செத்தவீட்டில்தான் அப்பாவின் மடியில் இருக்க கிடைத்தது. அதுவும் கொஞ்சநேரமே. அம்மா இல்லாத இந்த வீட்டில் நானும் அண்ணாவும் அப்பாவுடன் இருக்க ஆசையாய் இருக்கு. அக்கா உங்களுக்குத் தெரியும் அப்பாவின் பாசமும் அருமையும். நீங்கள் கருணை வைத்து உங்கட அப்பாவுக்கு கொஞ்சம் சொல்லி எங்கட அப்பாவை மன்னித்து விடச்சொல்லுங்கோ.

அக்கா நான் இப்ப கடவுளை விட உங்கட அப்பாவைதான் நம்புறன் ஏனென்றால் இந்த உலகத்தில் அவரால் மட்டும்தான் எங்கட அப்பாவை விடுவிக்க முடியும். இது நடக்க நீங்களும் உங்கட அப்பாவிடம் சொல்லுங்கோ. அன்புள்ள அக்கா அம்மாவும் அப்பாவும் இல்லாத இந்த வீட்டில் எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை.

அக்கா என்னை உங்கள் தங்கையாக நினைத்து எனது அப்பாவை விடுதலை செய்ய நீங்களும் உதவுங்கள், என அனைவரது மனதையும் உருக்கும் விதத்தில் குறித்த சிறுமி ஜனாதிபதியின் மகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

(கிளிநொச்சி நிருபர் நிபோஜன்)
=================
அர­சி­யல் கைதி­யான சுதா­கரனை பொது­மன்­னிப்­பில் விடு­விக்­குக!
மைத்­தி­ரி­யி­டம் கூட்­ட­மைப்­புக் கோரிக்கை

10 ஆண்­டு­க­ளா­கச் சிறை­யில் வாடும் ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்ட தமிழ் அர­சி­யல் கைதி­யான சச்­சி­தா­னந்­தம் ஆனந்­த­ சு­தா­க­ரனை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது­மன்­னிப்பு வழங்கி விடு­தலை செய்­ய­வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நேற்­றுச் சபை­யில் கோரிக்கை விடுத்­தது.

சிறார்­கள் மீது அதிக அன்பு வைத்­துள்ள அரச தலை­வர் மைத்­திரி, சுதா­க­ரின் இரண்டு பிள்­ளை­க­ளி­ன­தும் எதிர்­கா­லத்­தைக் கருதி இந்த முடிவை எடுக்­க­வேண்­டும் என்று கூட்­ட­மைப்­பின் வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சார்ள்ஸ் நிர்­ம­ல­நா­தன் வலி­யு­றுத்­தி­னார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற நீதித்­துறை சட்­டத்­தின் கீழ் ஒழுங்கு விதி­கள் மீதான விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு கோரிக்கை விடுத்­தார். அவர் தெரி­வித்­த­தா­வது-

இலங்­கை­யில் நடை­மு­றை­யி­லி­ருக்­கும் பயங்­க­ர­வாத தடைச் சட்­டம் நீக்­கப்­பட்டு, மனித உரி­மை­க­ளைக் காக்­கும் வகை­யில் பன்­னாட்­டுத் தரத்­தி­லான சட்­ட­மொன்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டும் என்று ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் 2015ஆம் ஆண்டு இலங்கை அரசு உறுதி வழங்­கி­யது. அந்த உறு­தி­மொழி இன்­றும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

பிழை­யான இந்­தச் சட்­டத்­தால் பல தமிழ் இளை­ஞர்­கள் சிறை­க­ளில் வாடு­கின்­ற­னர். பயங்­க­ர­வாத தடைச் சட்­டம் எப்­போது நீக்­கப்­ப­டும் என்­பதை நீதி அமைச்சு அறி­விக்­க­வேண்­டும். சட்­டத்­தின் விளைவு கொடூ­ர­மா­னது. கடந்த ஞாயி­றன்று கிளி­நொச்­சி­யில் நெஞ்சை நெகி­ழ­வைக்­கும் சம்­ப­வ­மொன்று நடை­பெற்­றது.

2008ஆம் ஆண்டு பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தின் கீழ் கைது செய்­யப்­பட்ட சச்­சி­தா­னந்­தம் ஆனந்­த­சு­தா­கர் என்ற அர­சி­யல் கைதிக்கு ஆயுள்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. கடும் மன அழுத்­தத்­துக்­குள்­ளான அவ­ரின் மனைவி கடந்த 18ஆம் திகதி உயி­ரி­ழந்­தார். அவ­ரின் இறு­திக்­கி­ரி­யை­க­ளில் பங்­கேற்­ப­தற்கு கண­வ­ரான சுதா­க­ருக்கு மூன்று மணி நேரமே வழங்­கப்­பட்­டது.

இறு­திக்­கி­ரி­யை­க­ளில் பங்­கேற்­று­விட்டு சுதா­கர் சிறைச்­சாலை வாக­னத்­தில் ஏறும்­போது அவ­ரின் மக­ளும் அதில் ஏறி­விட்­டார். இந்­தக் காட்­சி­யா­னது அனை­வ­ரை­யும் சோகத்­தில் ஆழ்த்­தி­யது.

சுதா­க­ருக்கு இரண்டு பிள்­ளை­கள் இருக்­கின்­ற­னர். தற்­போது தாயும் இல்லை. தந்­தை­யும் சிறை­யில். அவர்­க­ளின் எதிர்­கா­லம் என்­ன­வா­கும்?. இரண்டு பிள்­ளை­க­ளி­ன­தும் கல்­வி­யை­யும், எதிர்­கா­லத்­தை­யும் கருதி அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது­மன்­னிப்பு வழங்கி சுதா­கரை விடு­தலை செய்­ய­வேண்­டும்.

நிகழ்­வு­க­ளில் பங்­கேற்­றும் அரச தலை­வர் மைத்­திரி அங்­கு­வ­ரும் சிறார்­க­ளி­டம் அன்­போடு பழ­கு­வார். இந்த இரண்டு பால­கர்­க­ளின் எதிர்­கா­லம் பற்றி யோசித்து தாம­த­மின்றி அரச தலை­வர் இந்த முடிவை எடுக்க வேண்­டும் – என்­றார். 

===============



No comments:

Post a Comment

Moody's may raise credit rating, SL achieves significant step forward in EDR- IMF

  Moody's may raise Sri Lanka's credit rating Moody's may raise Sri Lanka's 'Ca' long-term foreign currency rating, ...