SHARE

Tuesday, May 16, 2017

வித்தியாவுடன் சக மாணவர்களின் படுகொலைக்கு நீதி வேண்டி யாழ் பல்கலை மாணவர் போராட்டம்..!

 
வித்தியா மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு நீதி வேண்டி யாழ் பல்கலை மாணவர்கள் போராட்டம்..!

 
பாலியல் வன்கொடுமையின் பின் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி வித்தியா சிவலோகநாதனின் வழக்கில் விரைவான நீதி கோரியும், வேண்டுமென்றே காலதாமதம் காட்டப்படும் பல்கலைக்கழக மாணவர் படுகொலை வழக்கை விரைவுபடுத்தி நீதி வழங்கக் கோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.

இன்று காலை 11 மணியளவில் பல்கலைக்கழக முன்றலில் அனைத்துப் பீட மாணவர்களும் கூடி பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.



இந்தப் போராட்டம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:

சகோதரி வித்தியா சிவலோகநாதன் அவர்கள் பாலியல் வன் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கின் நீதவான் மன்ற விசாரணை முடிவுற்று வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட விசேட தீர்ப்பாயத்திற்கு விடப்பட்டதாக அறிகிறோம். மேற்படி வழக்கு கொழும்பில் மூன்று சிங்களம் பேசும் நீதிபதிகள் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.



இச் செய்தி முழுத் தமிழ் சமூகத்தையும் பேரதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது.
யுத்தத்தோடு தொடர்பில்லாத வழக்கொன்றே எமது நீதிபதிகளால் விசாரிக்கப்பட முடியாததாகின்ற போது, யுத்தத்தோடு தொடர்புபட்ட வழக்குகள் எமது நீதிமன்றங்கள் முன்னால் விசாரிக்கப்படுமா என்ற கேள்விகளை முன்கொணர்கிறது.

மேலும் வித்தியாவின் தாயார் உறவினர்களுக்கு கொழும்பில் தாம் அறியாத மொழியில் இவ் வழக்கு நடத்தப்படுவது பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். வழக்கு விவகாரங்களில் பங்கு பற்றுவதற்கும் தமது நலன்களை கவனிக்க உரிய சட்டத்தரணிகளை நியமிக்கவும் இது கடினமானதாகும். மேற்படி வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதி மன்றத்தில் விசாரிக்க பிரதம நீதியமைச்சர் ஆவன செய்ய வேண்டும் என நாம் கோருகின்றோம்.

எமது சக மாணவர்களான சுலக்சன் கஜன் ஆகியோருக்கு எதிரான யாழ் நீதவான் நீதி மன்ற விசாரணையை வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்படுகிறது. பொலிஸார் முறையான விசாரணை ஒன்றை நடத்தவில்லை என பாதிக்கப்பட்டவர்களின் நலன்களைக் கவனிக்கும் சட்டத்தரணிகள் கூறுகின்றனர். சம்பவம் நடந்து ஒரு கால மாதத்திற்குள் குற்றச்சாட்டுப்பத்திரம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட வேண்டும். என்ற எமது கோரிக்கையை அதிமேதகு சனாதிபதி ஏற்றுக்கொண்டு விரிவாக பொலிஸ் விசாரனையை நிறைவு செய்ய உத்தரவிடுவதாக வாக்களித்திருந்தமை இன்று முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படவிருந்த பொருளாதார உதவிகள் எவையும் முறையாக வந்து சேரவில்லை. இவை தொடர்பில் அரசாங்கம் அடுத்து வரும் 30 நாட்களுக்குள் எமக்கு உரிய பதில் தரவேண்டும். இல்லா விடில் அறவழி போராட்டங்கள் தொடர்பில் நாம் தீர்க்கமாக முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்ததுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

Moody's may raise credit rating, SL achieves significant step forward in EDR- IMF

  Moody's may raise Sri Lanka's credit rating Moody's may raise Sri Lanka's 'Ca' long-term foreign currency rating, ...