SHARE

Monday, August 08, 2016

விச ஊசி மரணங்கள் இனப்படுகொலையே!



விடுதலைப் புலிப் 
 `புனர் வாழ்வுப் போராளிகளின்` விச ஊசி மரணங்கள்`இனப்படுகொலையே!

ஈழ இனப்படுகொலை ஆவணம்

ஒட்டி சுட்டான் வாக்கு மூலம்

அதே நேரம், யுத்தத்தின் பின்னரான புனர்வாழ்வின்போது தமக்கு இரசாயனம் கலந்த உணவுகள் வழங்கப்பட்டதோடு சந்தேகத்திற்கிடமான ஊசி மருந்துகளும் ஏற்றப்பட்டதாக முன்னாள் போராளி ஒருவர் சாட்சியமளித்துள்ளார். இதனால் தம்மால் சுறுசுறுப்பாக பணியாற்றமுடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கின் நான்கு மாவட்டங்களில் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் நடைபெற்றிருந்தன. அவற்றில் பங்கேற்று மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் ஒட்டிசுட்டானில் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் அமர்வில் பங்கேற்ற முன்னாள் போராளி ஒருவரே இவ்வாறு சாட்சியமளித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்–

இறுதிப்போரின்போது பலர் சரணடைந்திருந்தனர். இது தொடர்பாக பல செய்திகள் உள்ளன. ஆனால் மக்கள் இவ்விடையம் தொடர்பாக கதைக்கப் பயப்படுகின்றார்கள். இதைக் கதைக்கப்போனால் எமக்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லை. தாம் ஒருவரையும் கொல்லவில்லை என்கிறார்கள் அவ்வாறாயின் அங்கு சென்றவர்கள் எல்லாம் நஞ்சு அருந்தியா இறந்தார்கள்.

கோழியைப் பிடித்து சாப்பிட்டவனிடம் எங்கள் கோழியைக் கண்டீரோ என எவ்வாறு கேட்க முடியும். அவன் எங்களிற்கு நீதியைத் தரப்போவதில்லை. எங்கள் தமிழ் அரசியல கட்சிகள் கூட பெல்டி அடிச்சுக்கொண்டு இருக்கிறாங்கள். கண்டிப்பா சர்வதேசத்தில் இருந்து நடுநிலமையான நாடுகள் தான் எமக்கு நீதியை வழங்கவேண்டும்.

கிரேசிமா நாகசாயி வரலாற்றை எடுத்துக்கொண்டால் கூட கண்டிப்பா இன்றைக்கும் அமெரிக்காவிற்கு இழுக்குத்தான்.

எங்கண்ட விரலை வெட்டிப்போட்டு தம்பி தெரியாம வெட்டீட்டன் நான் அம்பு வில்லு தாறன் உன்னை பாதுகாக்க என கூறுவது போலத்தான் அரசின் செயற்பாடுகள் இருக்கின்றன.

விடுதலைப் புலிகள் இவ்வாறான வேலையைச் செய்யவில்லை. யுத்த தர்மம் என்று ஒன்று உள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்க இராணுவத்திற்கு யுத்த தர்மத்தைப் பற்றி கடைசிவரை போதிக்க வேண்டும்.

சரணடையப்போறவங்களைச் சுடுவது நியாமமில்லை. ஏனெனில் அவர்கள் நிராயுதபாணிகள்.

நான் ஒரு முனைநாள் போராளி. தடுப்பால வந்த பிறகு நாங்கள் யுத்தங்களை விட்டு ஒதுங்கி இருக்கிறம். சொன்னாலும் சொல்லாட்டாலும் உவங்கள் எங்களிற்கு இரசாயண உணவுகளைத் தந்திருக்கிறாங்கள் என்பது எங்களிற்கு விளங்குகின்றது.

நான் முன்பு 100 கிலோ தூக்கி எத்தினயோ கிலோமீற்றர் ஓடுற எனக்கு ஒரு பொருளைக்கூட தூக்க முடியவில்லை. கண் பார்வை குறைகின்றது. எங்களிற்கு ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் விழங்குகின்றது.

ஏன் தடுப்பு மருந்து முழுப்பேருக்கும் ஏற்றினவங்கள். ஊசியைக் கொண்டுவந்து போடுவாங்கள். என்ன தடுப்பிற்காக ஏற்றினார்கள் என்று எமக்குத் தெரியாது. ஊசி ஏற்றிய அன்று மாலையே ஒரு போராளி இறந்துவிட்டார்.

அங்கு என்ன என்ன நடந்தது என்று எங்களிற்கு மட்டும்தான் தெரியும். நாங்கள் தலைவரின் உப்பைச் சாப்பிட்டு வளர்ந்தவர்கள். கருணா மாறினாலும் நாங்கள் மாறவில்லை. நாங்கள் உணர்வோடு தான் இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 ஊசி மருந்து  107 வது போராளி மரணம்
Last updated 11 hours ago -  Eelasudar .com -  0 Comments

திருகோணமலை மொராவ கன்புலம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையாரான பேரின்பராசா தனபாலசிங்கம் வயது 40 என்ற முன்னால் போராளி கடந்த 02/08/2016 செவ்வாய்க்கிழமை மர்மமாக மரணமடைந்துள்ளார் என்று அறியப்படுகிறது மேலும் இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது

கடந்த 29/07/2016 அன்று தனது மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது சிறிய விபத்துக்குள்ளானார் என்றும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று சுகத்துடன் வீட்டிற்கு சென்றதுடன் பின்னர் 01/08/2016 அன்று திடீரென தனது தலையில் விறைப்புத்தன்மை காணப்படுவதாக கூறி மீண்டும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அநுராதபுரம் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையிலேயே மரணமாகியுள்ளார்.


மேலும் இவர் 1990களில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து ஈழ விடுதலைக்காக போராடினார் என்பதுடன் கடந்த 2013 புனர்வாழ்வுபெற்று விடுதலையாகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடரும் இந்த மர்ம மரணங்களின் விடைதான் என்ன? மீதமிருக்கும் போராளிகளின் நிலைதான் என்ன? விடைதருவார் யாரோ?




Mysterious deaths of ex-LTTE cadres create unease in North Sri Lanka


By P K Balachandran | Express News Service Published: 05th August 2016 10:18 PM Last Updated: 06th August 2016 06:47 PM

COLOMBO: A series of mysterious deaths reportedly occurring among former Tamil Tiger cadres who had been rehabilitated and released into society is creating unease in Sri Lanka’s Tamil-majority Northern Province.

According to the Tamil media, 105 former members of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) have so far died mysteriously, allegedly after being injected with a drug when they were undergoing post-war ‘rehabilitation’ in Sri Lankan army run camps.

The deaths, allegedly due to poisoning, came to light when an ex-cadre reportedly told the Sri Lankan government’s ethnic reconciliation committee at a recent sitting in Oddusuddan, that he had been injected with a drug which has disabled him. He told the committee that while in the LTTE he could  carry heavy weights and run, but now he finds it difficult to lift even 10 kg. Other ex-cadres had also been given mysterious injections, he said.

With the media reporting 105 deaths, some due to cancer, T.Ravikaran, Northern Provincial Council (NPC) member for Mullaitivu district, and former Tamil National Alliance MP, Suresh Pramachandran demanded that all the ex-cadres who had undergone rehabilitation be examined by a team of foreign doctors as Sri Lankan government doctors could be biased.

“Members of the ex-cadres families are very apprehensive since the news came out. I have therefore decided to move a resolution on this issue at the NPC on August 9. I spoke to Chief Minister Wigneswaran about this and he said he would also place some facts before the Council.

The provincial Health Minister Dr.Sathyalingam has promised to get the ex-cadres medically examined. The Sri Lankan Health Minister Dr.Rajitha Senaratne told the media that the Health Ministry is ready to conduct a health survey of the ex-cadres. But military spokesman Brig.Jayanath Jayaweera trashed the story that the ex-cadres were administered a poisonous drug during the rehabilitation process.

A leader of the TNA told Express that since nobody has an authentic figure of deaths nor information about the cause of deaths, the party is investigating.

“We do not want to comment on it without having the facts. In a few days we may be able to say something based on facts. We cannot automatically accept any figure that may be touted now,” the leader said.

The only authentic case of an ex-cadre dying of a disease got during rehabilitation is that of the LTTE’s political wing leader, Thamilini. She was diagnosed as a cancer victim while she was in a rehabilitation camp and was treated at the government cancer hospital at Maharagama. But despite the best efforts of her Sinhalese doctors, she died. She acknowledged the service rendered by these doctors in her posthumously published Tamil biography, Oru Koovaalin Nizhalil (In The Shadow Of A Sharp Sword).
==========================

No comments:

Post a Comment

Moody's may raise credit rating, SL achieves significant step forward in EDR- IMF

  Moody's may raise Sri Lanka's credit rating Moody's may raise Sri Lanka's 'Ca' long-term foreign currency rating, ...