SHARE

Wednesday, August 03, 2016

சிங்களம் கொலைக் குழியாக்கிய ஈழ குடிநீர்க் கிணறு ’கண்டுபிடிப்பு’!


மாந்தை புதைகுழிக்கு அருகில் மர்மக் கிணறு!

மன்னார் நீதவான் முன்னிலையில் தோண்டல்

(உதயன் பத்திரிகை செய்தி சொல்லிய விதம்!)


மன்னார் மாந்தை  மனித புதைகுழிக்கு சற்று தொலைவில் கண்டு பிடிக்கப்பட்ட மர்ம கிணறு இன்று திங்கட்கிழமை காலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெ க்ஸ்ராஜா முன்னிலையில் தோண்டப்பட்டது.

குறித்த மர்மக்கிணறு தொடர்பாக வழக்கு விசாரனை இன்று திங்கட்கிழமை காலை மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது காணாமற் போனவர்களின் உறவுகள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறஞ்சன், மற்றும் ரனித்தா ஞானராஜா ஆகியோர் மன்றிற்கு பிரசன்னமாகியிருந்தனர்.

இதன்போது அழைக்கப்பட்ட அரச திணைக்களங்களின் அதிகாரிகள் அனைவரும் மன்றில் பிரசன்னமாகியிருந்ததோடு மன்னார் மாவட்ட விசேட சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் டபிள்யூ.ஆர்.எஸ்.ராஜபக்ஸ அவர்களும் மன்றில் பிரசன்னமாகியிருந்தார்.

 இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான குறித்த மர்மக்கிணற்றை தோண்ட உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் குறித்த கிணறு தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

முதலில் குறித்த கிணறு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெடி பொருட்கள் எவையும் காணப்படுகின்றதா என்பது குறித்து விசேட அதிரடிப்படையினர் சோதனைகளை மேற்கொண்டனர்.

பின்னர் நீதவான் முன்னிலையில் குறித்த மர்ம கிணறு தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.முதற்கட்டமாக காலை 10.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரை குறித்த மர்ம கிணறு தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது சிறு எலும்புத்துண்டுகள் இரண்டு அகழ்வின் போது மீட்கப்பட்டன.

குறித்த அகழ்வு நடவடிக்கைகளின் போது மன்னார் மாவட்ட விசேட சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் டபிள்யு.ஆர்.எஸ்.ராஜபக்ஸ அழைக்கப்பட்ட அரச திணைக்களங்களின் அதிகாரிகள், பொலிஸார், விசேடஅதிரடிப்படையினர், காணாமல் போன உறவினர்கள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறஞ்சன், ரனித்தா ஞானராஜா, மன்னார் சட்டத்தரணிகள் சங்கம் சார்பாக சட்டத்தரணிகளான எம்.சபூர்தின், பிரிமூஸ்சிறாய்வா ஆகியோர்  பிரசன்னமாகியிருந்தனர்.

No comments:

Post a Comment

Ukraine could join EU by 2027

  Ukraine could join EU by 2027 under draft peace plan ‘Crafty’ diplomacy by Kyiv could force the bloc to rewrite its accession procedures J...