SHARE

Thursday, June 16, 2016

வெற்றிச் செல்வியின் ஏழாம் நூல்

ஆறிப்போன காயங்களின் வலி!




ஈழப் போரின் இறுதி நாட்கள், காணாமல் போனவனின் மனைவி, போராளியின் காதலி,உட்பட வெற்றிச் செல்வியின் ஆறு நூல்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன.ஆறிப்போன காயங்களின் வலி! அவரது ஏழாவது நூலாகும். அல்லது வலியாகும்!


வெற்றிச் செல்வி குறித்த ஒரு சுருக்கமான அறிமுகத்தை அவர்கள் பி.பி.சி.தமிழோசைக்கு அளித்த பேட்டியில் காணமுடியும்.



https://audioboom.com/boos/3280531-

 `மன்னார் இணையம்` கண்ட நேர்காணலில் மேலும் விரிவாக காண முடியும்.

`ஆறிப்போன காயங்களின் வலி` நூல் வெளியீட்டு அழைப்பிதழ்.


நூல் வெளியீடு குறித்து வெற்றிச் செல்வியின் தகவல்கள்;

16 June at 21 hrs 
அன்பிற்கினிய முகநூல் உறவுகளே! வரவிரும்புபவர்கள் அனைவரும் வருக. பாதுகாப்பு கருதியோ நேரமின்மை காரணமாகவோ தூரம் என்றோ வர இயலாது போய், புத்தகம் வேண்டுமே என்பவர்கள் உள் பெட்டியில் முகவரி தாருங்கள். வெளியீடு முடிந்த அடுத்த நாளே அஞ்சலில் அனுப்புகிறேன். எனினும் நேரில் உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

14 June at 06:45
விரைவில் எனது 7ஆவது நூலாகிய ஆறிப்போன காயங்களின் வலி வெளிவர இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.
அன்பிற்கினிய முகநூல் உறவுகளே! வரவிரும்புபவர்கள் அனைவரும் வருக. பாதுகாப்பு கருதியோ நேரமின்மை காரணமாகவோ தூரம் என்றோ வர இயலாது போய், புத்தகம் வேண்டுமே என்பவர்கள் உள் பெட்டியில் முகவரி தாருங்கள். வெளியீடு முடிந்த அடுத்த நாளே அஞ்சலில் அனுப்புகிறேன். எனினும் நேரில் உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

14 June at 06:50 
போராளி என்பதால் தூக்கிவைத்துக் கொண்டாடுபவர்களும் தூக்கிப்போடவும் முடியாமல் தூக்கி வைத்துக்கொண்டாடவும் முடியாமல் திண்டாடுபவர்களும் தூரவே வைத்துக்கொண்டு மனசுக்குள் மாடிகட்டி வைத்திருப்பவர்களும் ஏசணும்போல இருந்தாலும் ஏசவேண்டாமே என்று விட்டுவைத்திருப்பவர்களும் நான் எங்கே போகிறேன் வருகிறேன் என்று எல்லா நாட்களையும் கணக்கெடுத்துக் கொண்டிருப்பவர்களும் என்னைச் சுற்றி வாழும் அழகும் அழகற்றதுமான உலகத்தில் நான் கவலையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

எனது புதிய நூலின் வருகை என்னையும் என்சார்ந்தவர்களையும் மகிழ்ச்சிப்படுத்துவதை உணர்கிறேன். அரசியல் காரணங்களுக்காக தங்களால் வர முடியாது என்று தயவோடு கூறி ஒதுங்கும் அன்பர்களே, உங்களில் எனக்கொரு ஆதங்கமும் இல்லை.
இன்னமும் நம் சூழல் மாறவில்லை என்பதையே உங்கள் வார்த்தைகள் நிரூபிக்கின்றன.


எனினும் தவிர்க்க முடியாத காலத்தின் குரலாய் என் குரலும் ஒலித்துக்கொண்டிருக்கும்.

வெற்றிச் செல்வி படைப்பும் பகிர்வும்


வெற்றிச் செல்வி ஒரு போராளிப் படைப்பாளி!

===============================================
``அணைய விடாதீர்கள்,ஊதிக் கொண்டே இருங்கள்``
ஒலித்துக் கொண்டே இருங்கள்!
==============================================================


நன்றி: தகவல் ஊடகங்கள், வெற்றிச் செல்வி Face Book Page, ENB TENN

No comments:

Post a Comment

Ukraine could join EU by 2027

  Ukraine could join EU by 2027 under draft peace plan ‘Crafty’ diplomacy by Kyiv could force the bloc to rewrite its accession procedures J...