SHARE

Monday, November 03, 2014

மலையக மண் சரிவு: மக்கள் எதிர்ப்பு

அரசியல் வாதிகளின் கவனத்தை ஈர்க்க மலையக தொழிலாளர் போராட்டம்!

கொஸ்லந்த மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு கோரி கவனஈர்ப்பு போராட்டம் - சா.சதீஸ்குமார் 
(நமது மலையகம்)

கொஸ்லந்த மீரியபெத்த பிரதேசத்தில் இடம் பெற்ற மண்சரிவு அபாயத்தில் சிக்குண்டு உயிர் இழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலும் மீரியபெத்த பிரதேசத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த கோரியும், இந்த சம்பவம் குறித்து மலையக அரசியல் வாதிகள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென கோரியும் இன்றையதினம் பொகவந்தலாவ நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொகவந்தலாவ செல்வகந்த, கொட்டியாகலை, குயினா, பொகவான, டியன்சின், சினாகலை ஆகிய தோட்டங்களை சோர்ந்த 1000 இற்கும் மேற்பட்ட மக்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் 
ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









நன்றி: நமது மலையகம்

No comments:

Post a Comment

Moody's may raise credit rating, SL achieves significant step forward in EDR- IMF

  Moody's may raise Sri Lanka's credit rating Moody's may raise Sri Lanka's 'Ca' long-term foreign currency rating, ...