SHARE

Saturday, November 08, 2014

மஸ்கெலியா கார்ட்மோர் தோட்டத்தில் மண்சரிவு அபாயம்: 47 குடும்பங்கள் வெளியேற்றம்

மஸ்கெலியா கார்ட்மோர் தோட்டத்தில் மண்சரிவு அபாயம்: 47 குடும்பங்கள் வெளியேற்றம்

Submitted by P.Usha on Sat, 11/08/2014 - 14:56 வீரகேசரி

மஸ்கெலியா கார்ட் ஜமோர் தனியார் தோட்டம் கல்கந்த டிவிசனில் நிலத்திலும், குடியிருப்புகளிலும் வெடிப்பு ஏற்பட்டு, நிலம் தாழ்ந்து வருவதால் அங்குள்ள  47 குடும்பங்களைச் சேர்ந்த 202 பேர் வெளியேற்றப்பட்டு கார்ட்மோர் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரதேசத்தில் பாரிய கற்பாறை ஒன்றும் சுமார் 70 அடி உயரமுள்ள மலைப் பிரதேசமும் சரிந்து விழும் அபாயம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மக்கள் பாடசாலையில் தங்கியுள்ளதால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளமையால் தொடர்ந்தும் மக்கள் பாடசாலையில் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   

No comments:

Post a Comment

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம். ஏப்ரல் 5, 2025 ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிமேதகு பிரதமர் ஸ்ரீ நரேந்த...