SHARE

Wednesday, August 20, 2014

''இனப்படுகொலையின் பொறுப்பாளிகள், போர்க் குற்றவாளிகளான விடுதலைப்புலிகளே!`` பச்சைமுத்து

`` ஒரே ஒருவர் தமிழீழம் என்று சொன்னார், அவரைத் தலைவராக்குவதற்காக இன்று ஒன்றரை இலட்சம் மக்களை இழந்து நிற்கின்றோம், என்ன கொடுமையிது? 
அவரை ஊக்குவித்தது யார்? இங்குள்ள நாலஞ்சு அரசியல்வாதிகள், அவங்களுக்கு வந்து சிறீலங்கா தமிழர்களைப் பற்றிப் பேசேல்லன்னா இங்க அரசியலே கிடையாது......
இவர்களது ஊக்குவிப்பில் அவர்கள் தொடர்ந்து போரை நடத்தினர்.
இறுதிக்கட்டத்தில் அப்பாவி மக்களை முன்னிறுத்தி, குழந்தைகளை முன்னிறுத்தியதன் விளைவாக இன்று அவர்களையெல்லாம் நாம் இழந்து நிற்கின்றோம்.`` பச்சைமுத்து.



இதனைச் சுருக்கித் தொகுத்துச் சொன்னால்,''இனப்படுகொலையின் பொறுப்பாளிகள், போர்க் குற்றவாளிகளான விடுதலைப்புலிகள்``என்பதே ஆகும்.இது ராஜபக்சவின் குரலை பச்சைமுத்து தன் தொண்டைக்குழியால் இறக்குவது தவிர வேறெதுவும் இல்லை.


பச்சைமுத்துவின் ``இந்த நாலஞ்சு அரசியல்வாதிகளில்`` ''அண்ணன் செந்தமிழன் சீமானும்'' அடங்குவாரா?  ``இனப்படுகொலைக்கும், போர்க்குற்றத்துக்கும், ஒன்றரை இலட்சம் மக்களை இழந்த கொடுமைக்கும்`` துணைபோன பச்சைமுத்துவின் குற்றச்சாட்டுக்கு செந்தமிழனின் பதில் என்ன? இருப்பானா செந்தமிழன் சீமான் நெருப்பாய்?


No comments:

Post a Comment

ஈழப் படுகொலைப் பாசிச மோடியே திரும்பிப் போ!

  ஆனந்தபுரத்துக்கு திட்டம் வகுத்த ஈழப்படுகொலைப் பாசிச மோடியே  திரும்பிப் போ! சொல்லில் சோசலிசமும் செயலில் பாசிசமுமான, சமூக பாசிச அனுரா ஆட்சிய...