SHARE
Tuesday, March 29, 2011
கர்ப்பத்தை எப்படி மறைக்க முடியாதோ. அப்படியே வர்க்கத்தையும் மறைக்க முடியாது!
கர்ப்பத்தை எப்படி மறைக்க முடியாதோ. அப்படியே வர்க்கத்தையும் மறைக்க முடியாது!
மூர்க்க பிடிவாதமுள்ள வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றுப் போக்கில், எல்லா நடு நிலையும். எல்லா சார்பின்மையும் இறுதியில் சாயம் வெளுத்து தன் சொந்தவர்க்கத்தை ஆரத்தழுவி கட்டி அணைத்து தன்னை அம்பலப்படுத்திக் கொள்ளும்.இதன் மூலம் உழைக்கும் மக்களிடம் இருந்து தனிமைப்படும்.லிபியப் போர் உலக மக்களுக்கு அல்ஜசீராவை தோலுரித்துக்காட்டி அம்மணமாக்கிவிட்டுள்ளது!
Qatar recognise Libyan Transitional National Council as the sole legitimate representative of Libya
Posted on March 28, 2011 by admin
Qatar recognised the rebel Libyan National Council as the sole legitimate representative of the Libyan people n Monday, the Qatari state news agency reported.
“This recognition comes from a conviction that the council has become, practically, a representative of Libya and its brotherly people,” the agency reported, quoting a Foreign Ministry official.Explaining the decision, the official said the rebel council included representatives of different Libyan regions and had acceptance among the Libyan people.
லிபியாவில் நிகழ்வதை உலகுக்காட்டுவதில் அல்ஜசீரா, Qatari அரசின் நலன் வழி நடந்து உண்மையை திட்டமிட்டு மூடிமறைத்தது.
Monday, March 28, 2011
லிபியா மீதான யுத்தத்தைக் கண்டிக்கும் சிங்கள சமூக தேசிய வெறியர்கள்
லிபியா மீதான தாக்குதல்களை கண்டித்து ஐ.நா. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
பதிவு Mar 24, 2011 / பகுதி: சிறப்புச் செய்தி /
லிபியா மீதான மேற்குலக நாடுகளின் தாக்குதல்களை கண்டித்து இன்று கொழும்பு ஐ.நா. அலுவலகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லிபியா மீதான தாக்குதல் குறித்து அமைச்சர் விமல் வீரவன்ச கருத்து தெரிவிக்கையில்,
லிபியாவில் நடைபெற்ற போராட்டங்கள் ஆனது உள்நாட்டு விடயமாகும். உள்நாட்டின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள லிபியாவின் அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்குமே உரிமையுள்ளது. எந்த ஒரு நாட்டினதும் உள்நாட்டு விடயங்களில் தலையிட்டு இறையாண்மைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் உரிமை எந்தவொரு அரசிற்கோ அமைப்பிற்கோ கிடையாது.

தாக்குதல்கள் நடத்துவதற்கு அனுமதியளித்து பான் கீ மூனும் போர்க்குற்றவாளியாகியுள்ளார். ஏனைய நாடுகளில் போர் குற்றங்களைத் தேடும் ஐ.நா. உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இன்று லிபியாவில் பாரிய போர் குற்றங்களை வெளிப்படையாக செய்து வருகின்றன. படைகளைப் பயன்படுத்தி ஏனைய நாடுகளை ஆக்கிரமிக்க இது ஒன்றும் 19ஆம் நூற்றாண்டு அல்ல.
எனவே,லிபியா மீதான தாக்குதலை இலங்கை வன்மையாக கண்டிக்கின்றது எனக் கூறினார்.
குறிப்பு:
லிபியாவுக்கு எதிரான யுத்தத்தை கண்டிப்பதாக இது தோற்றமளித்தாலும், ஈழதேசத்தில் சிறீலங்கா நடத்திய இனப்படுகொலையையும், யுத்தக்குற்றங்களையும் நியாயப்படுத்துவதே கெளரவ அமைச்சர் விமல் வீரவன்சவின் குறிக்கோள் என்பது தெளிவாகின்றது.’’எந்த ஒரு நாட்டினதும் உள்நாட்டு விடயங்களில் தலையிட்டு இறையாண்மைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் உரிமை எந்தவொரு அரசிற்கோ அமைப்பிற்கோ கிடையாது.’’ உண்மைதான் அமைச்சரே கூடவே ஒரு தேசத்தின் சுயநிர்ணயத்தில் தலையிடுவதற்கும் எந்தவொரு அரசிற்கோ அமைப்பிற்கோ உரிமை கிடையாது என்பதையும் சேர்த்துச் சொல்லவிடாமல் தங்களைத் தடுப்பது என்ன? முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் மக்களைப் படுகொலை செய்த இறையாண்மையுள்ள சிறீலங்கா அரசு, ஒரு களங்கமாக தங்கள் கண்களுக்கு தெரியாதது ஏன்? சிங்களப் பெருந்தேசிய வெறிதானே!!
’’லிபியாவின் எண்ணெய் வளத்தை குறிவைத்து மேற்குலக நாடுகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன’’.உண்மைதான் இதில் தங்களுக்கு என்ன கவலை? தங்கள் நாட்டில் எந்தவளங்களை மேற்குலக நாடுகளுக்கு- கூடவே கிழக்குலக நாடுகளுக்கும் பங்கிட்டு! - தாரைவார்க்காமல் பாதுகாத்து வைத்திருக்கின்றீர்கள் ஒரு உதாரணம் காட்டமுடியுமா?
Sunday, March 27, 2011
நேற்றோவின் கொலைக்கரத்தில் லிபிய மக்கள் அடையப்போவது விடுதலையல்ல, படுகொலையே!
கொசோவோவில் குடித்த இரத்தமும், ஆப்கானிஸ்தானில் குடிக்கும் இரத்தமும் சாட்சியமளிப்பது ஆக்கிரமிப்பு கொலைவெறியே!
நேற்றோவின் கொலைக்கரத்தில் லிபிய மக்கள் அடையப்போவது விடுதலையல்ல, படுகொலையே!
இரவல் படையில் ”கிளர்ச்சி’’ செய்யும் லிபிய ஆயுதக் கும்பல்,
அந்நிய ஏகாதிபத்திய நேற்றோ கைக்கூலிகளே!
உலக மறுபங்கீட்டுக்கான ஏகாதிபத்திய கொலைகார இராணுவக் கூட்டணி நேற்றோவின், லிபியாவை துண்டாடும் திட்டத்தை எதிர்ப்போம்!
---------------------------------------செய்தி:
Nato to command all Libya's military operations
Nato ambassadors meeting in Brussels have agreed that the alliance will take command of all international military operations relating to Libya.
That includes airstrikes on Colonel Gaddafi's forces.
The decision ends days of diplomatic wrangling and paves the way for the US to relinquish its temporary leadership of the operation.
Some Nato members - notably Turkey and Germany - have been reluctant for the alliance to take charge of the air strikes because of the risk of civilian casualties.
Thursday, March 24, 2011
Tomahawk Cruise Missles Penetrate Gaddafi Compound Rare Launch Video
லிபிய நாட்டை மறுபங்கீடு செய்ய
அமெரிக்க,ஐரோப்பிய பச்சைப் பாசிச பயங்கரவாதிகள், லிபிய மக்களுக்கு எதிராக ஏவிய அநீதியான ஆக்கிரமிப்புப் போர்.
Subscribe to:
Posts (Atom)
"சயனைட்" நாவல் - ஒரு பார்வை
"சயனைட்" நாவல் - ஒரு பார்வை "தங்கமாலை கழுத்துக்களே கொஞ்சம் நில்லுங்கள்! நஞ்சுமாலை சுமந்தவரை நினைவில் கொள்ளுங்கள், எம் இனத்த...
-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...