

ஜனாதிபதி மஹிந்தவுக்கு மன்மோகன்சிங் வாழ்த்து
வீரகேசரி நாளேடு 1/29/2010 10:43:33 AM -
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஆறாவது ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மன்மோகன்சிங், உங்கள் தலைமையில் இலங்கையில் பூரண அமைதி ஏற்பட்டு அனைத்து சமூகத்தினரும் இணக்கத்துடனும், மரியாதையுடனும் வாழ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் பேசும் மக்களுக்கு ''கௌரவமான நிரந்தர அரசியல் தீர்வு''
"மஹிந்தவின் சிந்தனை தொலைநோக்கு"
* தற்போதைய நாடாளுமன்றத்துக்கு மேலதிகமாக, மாகாணசபைகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய மேல்சபை ஒன்று இருக்கும்.
* வடக்கும், கிழக்கும் இணைக்கப்படமாட்டாது.
* மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது.
* பிரிவினைக்கு இடமில்லை
ஜெனரலின் "நம்பிக்கை தரும் மாற்றம்''
* விடுதலைப் புலிகளூக்கெதிராகப் போரிட்டு விடுவிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைக்கும் தேவை தமக்கில்லையெனவும் கிழக்கு மாகாணத்தை தான் மீட்டதன் காரணமாகவே, வடக்குடன் இணைக்கப்பட்டிருந்த கிழக்கை வடக்கிலிருந்து பிரிக்க முடிந்ததாகவும் பொன்சேகா கூறியுள்ளார்..கிழக்கு மாகாணம் புலிகளிடமிருந்து விடுவிக்கப்படதனாலேயே உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்து சாதகமான தீர்ப்பைப்பெற முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
* தமிழ்மக்களின் அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு, ''பிரிக்கப்படாத இலங்கைக்குள் அடையப்படவேண்டும்'' என்பதே நமது நிலைப்பாடு- TNA -சம்பந்தன்
* இந்தியாவின் நிலைப்பாட்டில் இப்போது மாற்றம் தெரிகின்றது- சம்பந்தன்
* தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியாவுக்கு இப்போதுள்ள விருப்பம் தமிழ்க் கூட்டமைப்புக்கு தெரிவிப்பு- நிருபமா ராவ்
* தேர்தலின் பின்னர் மீண்டும் இந்தியா சென்று முக்கியமாக அரசியல் தீர்வு விடயம் குறித்து இந்திய உயர்மட்டத்துடன் பேச்சுநடத்தவுள்ளோம்- மாவை சேனாதிராஜா
===================================================================
இந்தியாவின் நிலைப்பாட்டில் இப்போது மாற்றம் தெரிகின்றது - சம்பந்த ஐயா சொல்கின்றார்!
திகதி: 11.01.2010 // தமிழீழம்
இந்தியாவின் நிலைப்பாட்டில் தற்போது மாற்றத்தைக் காண்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்ற கருத்து இந்தியாவில் வளர்ந்து வருவதை அவதானிக்கிறோம் என சம்பந்தன் நேற்று யாழில் கூறியுள்ளார்.
இந்தியாதான் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு, அவர்களுக்கு நல்லதொரு அரசியல் தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க உதவவேண்டும் என்று எமது மக்கள் சார்பாக இந்தியாவிடம் பகிரங்கமாகக் கேட்டுக்கொள்கிறேன் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இன்னும் ஓரிரு தினங்களில் புதுடில்லிக்கு எனது நண்பர்கள் சிலருடன் சென்று தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு
தொடர்பாகப் பேச்சு நடத்தவுள்ளேன் எனத் தொவிவித்துள்ளார். ஆனால் தான் என்ன தீர்வு பற்றி பேசபோகின்றேன் என மக்களிடம் கூறவில்லை.
நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டில் சிறப்புரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
சர்வதேசப் பங்களிப்பு குறித்து இங்கு கருத்துக்கூறுவது பொருத்தம் எனக் கருதுகின்றேன். 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின் இனப்படுகொலை நடைபெற்றபின் சர்வதேச சமூகம் எமது விடயத்தில் மிகவும் அக்கறை காட்ட ஆரம்பித்தது. இந்தியா கூடுதல் பங்களிப்புச் செய்தது. துரதிர்ஷ்டவசமாக ஒரு காலகட்டத்தில் பல சம்பவங்கள் இடம்பெற்ற பின்னர் இடம்பெற்ற விடயங்கள் குறித்துப் பேச வேண்டிய அவசியமில்லை. இந்தியா ஒதுங்கிவிட்டது.
அவர்கள் ஒதுங்கியதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஏனைய நாடுகளைப் பொறுத்தமட்டில் ஓரளவு அக்கறை காட்டி வந்தார்கள். அவர்களின் பங்களிப்பு பரிபூரணமானதாக இருந்ததாகக் கூறமுடியாது. பல நாடுகளின் நிலைப்பாடு, இந்தியா என்ன செய்கின்றதோ அதன் பின்னால் நிற்போம் என்பதாகும். பல நாடுகளின் ராஜதந்திரிகள், வெளிநாட்டுத் தலைவர்கள் இங்கு வரும்போது அவர்கள் கூறுவது என்னவென்றால் இந்தியா பங்கெடுக்க வேண்டும்; நாங்கள் உதவியாக இருப்போம் என்பதாகும்.
இதை இந்தியாவிற்கு நாங்கள் பலதடவைகள் எடுத்துக்கூறி வந்துள்ளோம். தற்போது இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றத்தைக்காண்கிறோம். தமிழர் பிரச்சினை தொடர்பாக தங்களின்
பங்களிப்பைச் செய்து நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்து அவர்கள் மத்தியில் வளர்ந்து வருவதை அவதானிக்கின்றோம். நானும் எனது நண்பர்கள் சிலரும் எதிர்வரும் இரண்டு மூன்று நாள்களுக்குள் புதுடில்லிக்குச் செல்லவிருக்கின்றோம்.
எமது மக்கள் சார்பாக இந்தியாவுக்கு ஒரு விநயமான வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றோம். தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள். எமது மக்களின் நிம்மதியான வாழ்வுக்குஅவர்களுக்கு நல்லதொரு அரசியல்தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க உதவுங்கள் என்று எமது மக்கள் சார்பாக பகிரங்கமாகக் கேட்டுக் கொள்ளவிரும்புகின்றேன் என்றார்
==================
தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியாவுக்கு இப்போதுள்ள விருப்பத்தை தமிழ்க் கூட்டமைப்புக்கு தெரியப்படுத்தினார் நிருபமா ராவ்
இலங்கையின் அரசியல் காட்சியரங்கிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேறியுள்ள நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் பாரியளவிலான பங்களிப்பை வழங்க இந்தியா திட்டமிடுகிறது.
அண்மையில் புதுடில்லிக்குச் சென்று திரும்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தூதுக்குழுவுக்கு இந்த விடயம் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான காலகட்டத்தில் இலங்கையில் மாற்றமடைந்துவரும் அரசியல் நிலைவரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தெரிவிப்பதற்காகத் தங்களுக்கு புதுடில்லி அழைப்பு விடுத்திருந்ததாக யாழ்.மாவட்ட எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். அதேவேளை, தமிழ்க் கூட்டமைப்பிடமிருந்து ராஜபக்ஷவுக்கு ஆதரவைப் பெறுவதற்கு புதுடில்லி முயற்சித்ததாகத் தெரிவிக்கப்படுவதை சுரேஷ் பிரேமச்சந்திரன் மறுத்துள்ளார்.
யுத்தத்தால் அகதிகளாக்கப்பட்டோரின் நெருக்கடிகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகளவுக்கு ராஜபக்ஷவின் நிர்வாகம் செய்திருக்கவில்லையென்றும் அவர்களின் வாழ்விடங்களில் அவர்களை மீளக்குடியேற்றுவது தொடர்பாகவும் போதிய நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு புதுடில்லிக்குச் சுட்டிக்காட்டியுள்ளது. அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றிவிட மறுத்துவிட்டிருப்பதாகவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தமிழ் பேசும் மாகாணமாக்குவதற்கு
டில்லிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கிழக்கில் அரச அனுசரணையுடனான சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதையும் தமிழர்களுக்கு அதிகாரத்தைப்
பகிர்ந்தளிக்கும் விடயங்களை ஆராயும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் பணிகள் முடக்கப்பட்டிருப்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதுடில்லிக்குத் தெரிவித்திருக்கிறது..
==================
தேர்தலின் பின்னர் மீண்டும் இந்தியா சென்று உயர்மட்ட தலைவர்களை சந்திக்கவுள்ளோம் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவிப்பு
வீரகேசரி நாளேடு 1/18/2010 8:39:22 AM - எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இம்மாத இறுதியில் மீண்டும் இந்தியாவுக்கு விஜயம் செய்து உயர்மட்ட தலைவர்களை சந்திக்க எதிர்பார்க்கின்றோம். இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. முக்கியமாக அரசியல் தீர்வு விடயம் குறித்து இந்திய உயர்மட்டத்துடன் பேச்சுநடத்தவுள்ளோம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
வீரகேசரி நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மாவை சேனாதிராஜா எம்.பி. இது தொடர்பில் மேலும் கூறியதாவது
கடந்தவாரம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவுக்கு விஜயம் செய்து அந்நாட்டின் உயரதிகாரிகளை சந்தித்து பேச்சு நடத்தியது. முக்கியமாக இந்திய வெளியுறவு செயலாளரை சந்தித்து பேசினோம். அதாவது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் இந்திய உயரதிகாரிகளுக்கு எடுத்துக்கூறினோம்.
நாம் கூறிய விடயங்களை ஆர்வமாகவும் அக்கறையுடனும் செவிமடுத்த இந்திய தரப்பினர் அவற்றை உள்வாங்கிக்கொண்டனர். மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தொடர்ந்து செயற்படத் தயார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதேவேளை மோசமான காலநிலை காரணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்க முடியவில்லை. நாங்கள் சென்ற விமானம்
மோசமான காலநிலை காரணமாக மீண்டும் சென்னை திரும்பிவிட்டது. அதற்கிடையில் இந்திய வெளியுறவு அமைச்சர் வெளிநாடு சென்றுவிட்டார்.
எனவே மீண்டும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்து உயர்மட்ட தலைவர்களை சந்திக்கவுள்ளோம். அதன்போது பல விடயங்கள் குறித்து கலந்துரையாட எதிர்பார்க்கின்றோம்.
வீரகேசரி நாளேடு 1/18/2010 9:51:16 AM - அரசாங்கம் கூறுவதைப்போல் எந்தவொரு அரசியல் கட்சியுடனோ அல்லது கட்சித் தலைவர்களுடனோ இரகசிய உடன்படிக்கைகள் எதுவும் கைச்சாத்திடப்படவில்லை.
எனது நாட்டை துண்டாடுவதற்கோ அல்லது அதன் ஒருமைப்பாட்டை சீர்குலைப்பதற்கோ எந்தச் சந்தர்ப்பத்திலும் இடமளிக்க மாட்டேன் என்று எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
என்மீது வைத்துள்ள நம்பிக்கையின் பிரகாரமே பலதரப்பட்ட அரசியல் சக்திகள் எனக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், என்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ஆளும் தரப்பினால் முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும் எனது சேவைக் காலத்தில் ஒரு சதத்தையேனும் மோசடி செய்யவில்லை என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன் என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
40 வருடகால அரச சேவையில் பணியாற்றிய நான் அக்காலப்பகுதியில் அரசாங்கத்தினால் எனக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்பினை எந்தவிதமான குறைபாடுகளும் இன்றி நிறைவேற்றியிருக்கிறேன்.
இந்நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதி மொழியின் பிரகாரம் புலிப் பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை மக்களே அறிவர்.
ஊழல் மோசடிகளோ அல்லது நிதி தொடர்பிலான மோசடிகளோ இல்லாவிட்டால் தரகுப் பணம் சம்பாதிப்பதிலோ ஈடுபட்டிருந்தால் என்னால் தொழில் ரீதியாக முன்னேற்றம் கண்டிருக்க முடியாது. எனவே, எந்தவிதமான ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்டதில்லை என்பதை என்னால் பகிரங்கமாக கூறிக் கொள்ள முடியும். அரச சேவையில் இருந்த காலப்பகுதியில் ஒரு
சதத்தையேனும் மோசடி செய்யவில்லை என்பதை பொறுப்புடன் கூறிக் கொள்கிறேன்.
பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முழுமையான ஆதரவு மற்றும் அமைப்புக்கு மத்தியிலேயே நான் அரசியல் பயணத்திற்குள் பிரவேசித்துள்ளேன்.
இப்போது நான் இணைந்துள்ள அரசியல் கட்சிகளுடன் எந்த விதமான உடன்படிக்கைகளும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதேபோல், எந்தவொரு அரசியல் தலைவர்களுடனும் கூட ஒப்பந்தங்களை மேற்கொள்ளவில்லை.
அவர்கள் என்னுடன் இணைந்திருப்பது என்மீதும் எனது கடந்தகால 40 வருட நம்பிக்கைமிக்க சேவையில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையின் காரணத்தினாலேயே ஆகும். நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதையிட்டு தோல்வியைக் கண்டுகொண்டிருக்கின்ற தற்போதைய ஜனாதிபதியும் அவரது குழுவினரும் என்மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.
என்மீது விரல் நீட்டி குற்றம் சுமத்துபவர்கள் என்மீது மட்டுமல்லாது என்னைப்போல் அரச சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராகவே குற்றம் சுமத்துகின்றனர் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். இதனால் அரச சேவையாளர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு இலக்காகியுள்ளனர்.
எனவே, என்மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். அரச ஊழியர்களின் சேவைøய பெற்றுக்கொண்டு பின்னர் அவர்களையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உறுதி மொழிகளையும் தூக்கியெறிவது ஜனாதிபதியின் இயல்பான விடயமாகும். ஆனாலும் அந்த நிலைப்பாட்டை நான் கொண்டிருக்கவில்லை என்பதையும் மக்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
இந்திய-இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சனை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல் இரு நாட்டு கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இந்திய...