SHARE

Wednesday, October 01, 2014

ஜெயா கும்பலின் ஊழல் குற்றமும், ஊளையிடும் சுற்றமும்!

ஜெயா கும்பலின் ஊழல் குற்றம்:



ஊளையிடும் சுற்றம்:

முதல்வர் ஜெயலலிதா தண்டனைக்கு உள்ளாகியிருப்பது மிகுந்த மனவேதனையைத் தருகிறது: பிரதமர் வி.உருத்திரகுமாரன்

[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 10:59.09 AM GMT ]

'தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பதவியினை இழந்து சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு தமிழீழ மக்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது. இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

'தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் மீது பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபா அபராதமும் விதித்து அளித்துள்ள தீர்ப்பின் பிரகாரம் அவர் முதல்வர் பதவியினை இழந்து சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு தமிழீழ மக்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது.

இந்த நெருக்கடியான நிலையைச் சட்டரீதியாக எதிர் கொண்டு மீண்டும் தமது அரசியல் வாழ்வில் அவர் வெற்றி பெறுவார் என நாம் உறுதியாக நம்புகிறோம்' இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அதிமுகவின் உத்தியோகபூர்வ பத்திரிகையான நமது எம்ஜஆர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

செல்வி ஜெயலலிதா அவர்கள் 2011 ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக நான்காவது தடவை பதவியேற்ற பின்னர் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவான, உறுதியான, துணிவான ஒரு நிலைப்பாட்டை எடுத்து வந்தவர். ஈழத் தமிழர் தேசியப் பிரச்சினையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களைத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றக் காரணமாக இருந்தவர்.

சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகியிருக்கும் தமிழீழத் தாயக மக்களால் தமக்கான ஒரு பாதுகாப்புக் கவசமாக உணரப்பட்டவர். தமிழீழ மக்களுக்கு மட்டுமல்ல தமிழக மக்களின் வளமான எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு நல்லபல திட்டங்களை நிறைவேற்றி வந்தவர்.

இத்தகையதொரு நிலையில் ஜெயலலிதா அவர்கள் தண்டனைக்குள்ளாகியிருப்பது மிகுந்த மனவேதனையைத் தருவதாக உள்ளது.

1996ம் ஆண்டில் இருந்து 18 வருடங்களாக நடைபெற்று வந்த ஜெயலலிதா அவர்கள் மேலான வழக்கின் மீது வழங்கப் பட்டுள்ள தீர்ப்பு கடுமையானதெனப் பலரும் கருதுகின்றனர்.

நீதிபதி சட்டத்தின் எல்லையைத் தாண்டி இத் தண்டனையை வழங்கியுள்ளதாக இந்தியாவின் புகழ் பெற்ற மூத்த பெரும் வழக்குரைஞரான ராம் ஜெத்மலானி அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்தத் தீர்ப்பினை ஜெயலலிதாவினது அரசியல் எதிரிகள் வரவேற்கக்கூடும். ஆனால் சட்ட அறிஞரான தன்னால் ஏற்க முடியாதுள்ளது' எனவும் அவர் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் தீர்ப்பின் தருணமும் கடுமையும் இதன் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாமோ என்ற ஐயப்பாட்டையும் சில மட்டங்களில் தோற்றுவித்துள்ளன. செல்வி ஜெயலலிதா அவர்களும் இந்தத் தீர்ப்பின் மீது உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய நீதித்துறை இவ் வழக்கு விடயத்தில் பொறுப்பானதும் நியாயமானதுமான முறையில் செயற்படும் என்பதே எமது நம்பிக்கையாகும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார் என அதிமுகவின் உத்தியோகபூர்வ பத்திரிகையான நமது எம்ஜஆர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
=========================


ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட தண்டனை அரசியல் பின்னணியை கொண்டது. 

உலக தமிழர் பாதுகாப்பு மையம்- இங்கிலாந்து


ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக அளிக்கப்பட தண்டனை அரசியல் பின்னணியை கொண்டது. - உலக தமிழர் பாதுகாப்பு மையம்- இங்கிலாந்து
இதற்கு பின்னால்   இன்று   ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி ஒரு காரணம் என்பதை ஆழமாக சிந்தித்தால் புரியும்.

இன்று ஆட்சியை கைப்பற்றி இருக்கும் பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில்  அணைத்து  மாநிலங்களிலும் பெரும் பான்மையை பெற்று இருந்த போதிலும் தமிழ் தேசிய உணர்வுடைய தமிழ்நாட்டை மட்டும் வெல்ல முடியவில்லை, தமிழ் நாடே இந்தி மொழி பரவலாகத்திட்கும் தடையாக இருக்கிறது - தமிழ் தேசிய சிந்தனை வளர்ந்து நிற்கும் பிரதேசமாக இந்த தமிழகம் இருக்கிறது,

இந்த மாநிலத்தை தமது கைக்குள் கொண்டுவருவது எப்படி என்ற திட்டத்தின் ஒரு படியே செல்வி ஜெயலலிதா மற்றும் அவருடன் நெருக்கிய உறவில் இருந்தவர்களுக்கு அளிக்கப்பட தண்டனை.

ஜனநாயக கோட்பாட்டின் படி அந்த மாநிலத்தின் மக்களின் மாநில சபை ஆகட்டும் மத்திய சபை ஆகட்டும் அதிக விருப்பவாக்குக்களை பெற்று, ஆட்சியில் இருக்கும் ஒருவரை,வெறும் ஒரு சில நீதிபதிகளின் விருப்பத்தில்  அவரை ஆட்சி பீடத்தில் இருந்து நீக்குவது எப்படி என்று தெரியவில்லை.

அண்ணா ஹசாரே டெல்லியில் இந்தியாவில் சகல அரச - சட்ட மட்டத்தில் புறையோடி இருக்கும்  ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த போது, அந்த ஊழல் வட இந்திய அரச மட்டத்தில் தான் அதிகம் இருந்ததால் அந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார், ஆனால் இதில் தண்டிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டு இருக்கும் ஒரு சிலரை பார்த்தால், அரசில் நோக்கத்திற்காக கட்சி நோக்கத்திற்காக சிறை வைக்கப்பட்டவர்கள் அதிகம். அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது திரண்டு எழுந்தது வட மாநிலங்களே அதிகம், காரணம் இந்த மாநிலங்களில் தான் ஊழல் பல மட்டங்களில் புறை ஓடிக்கொண்டு இருந்தது.

அதற்காக தமிழகத்தில் ஊழல் இல்லை என்று கூறவில்லை, ஆனால் இந்த விடயத்தில் தண்டனை அளிப்பதிலும் கூட அரசியல், தேர்தல் நோக்கம் தான் முன்னிற்கிறது என்பதை வலியுறுத்த வேண்டி இருக்கிறது.

இன்று வட இந்திய அரசியலில் இருப்பவர்கள் எல்லோரையும் எடுத்து பார்த்தால் - அவர்களின் ஆரம்ப வாழ்க்கைக்கும் - இன்று வாழும் வாழ்க்கைக்கும் வித்தியாசம் இருக்கும். மண்ணில் இருந்து வானத்தை எவ்வாறு திடீரென்று தொடார்கள் என்பது கேள்விக்குறி.

இன்று முக்கியமாக அடுத்த பேசப்படும் 2 ஜி விவகாரத்தை எடுத்து பார்த்தால் - தமிழக முக்கிய கட்சியாகத் தான் இருக்கிறது. இந்த விவகாரத்தில் பங்குதாரர் ஆக இருந்ததாக கூறப்பட்டும் அல்லியான்ஸ், அல்லது டாடா போன்ற நிறுவனங்களை பற்றி அதிகமாக பேசப்படுவதாக தெரியவில்லை.

அடுத்து இன்று தண்டிக்கப்பட்டு இருக்கும் செல்வி ஜெயலலிதா அவர்கள் வெறும் கையேடு அரசியலுக்கு வந்தவர் அல்ல, அவர் தென் இந்திய சினிமாத் துறையை உச்சத்தில் இருக்கும் போது அரசியலுக்கு வந்தவர் என்பதை எல்லோரும் புரிந்து கொள்வீர்கள், ஆகவே அவர் சொத்து குவித்தார் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது- இது நம்பக்கூடியதாக இல்லை.

தமிழகத்தில் நடைபெறும் அரசியல் பழிவாங்கலின்  எதிரொலி தான் இதே வொளியே வேறு எதுவும் இல்லை.

இதை வட இந்திய அரசியல் கட்சிகள் தமிழகத்தை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் பயன்படுத்துகின்றன என்பது தான் நாம் எல்லோரும்   புரிந்து கொள்ளவேண்டும்.

இதை தமிழ் உணர்வாளர்கள் புரிந்து கொள்ளவார்கள் என்பதை நாம் உணர்கிறோம், அதை விட்டு விட்டு இதன் மூலம் ஆரசியல் லாபம் அடைபவர்கள், அடைய நினைபவர்கள், மக்கள் மனத்தில் உயர்ந்த இடத்தில் இருக்க மாட்டார்கள்.

ஈழத் தமிழர்களுக்கு, ஈழத் தமிழர் விடுதலைக்காக, தூக்கு தண்டனை கைதுகளுக்கு எதிராக செல்வி ஜெயலலிதா கொடுத்த குரல், மாநில அவை தீர்மானங்கள் அவர் செய்த முயற்சிகள், தமிழ் பாதுகாப்புக்கு  சமஸ்கரித்த மொழி இந்தி மொழி திணிப்புக்கு எதிராக கொடுத்த  கொடுத்துகொண்டிருந்த குரல்   செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராக அளிக்கப்பட தண்டனை இட்டு ஈழத் தமிழர்கள் நாம் மிகவும் அதிர்ச்சியுடன் பார்த்தாலும், இதன் பின்னால அரசில் பின்னணி இருப்பதாகவே பார்க்கிறோம்.

இவர் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் - தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்  தொடர்ந்து மக்கள் நலனை பாதுகாக்க வேண்டும் என்பதே எமது விண்ணப்பம்.

- உலக தமிழர் பாதுகாப்பு மையம்- இங்கிலாந்து.
worldtamilprotection@gmail.com
============================
உதயன் பத்திரிகை


===================================
Tamil Net


Timing of Jayalalithaa case targets Dravidian polity



Feature Article
2ND LEAD
Timing of Jayalalithaa case targets Dravidian polity

[TamilNet, Saturday, 27 September 2014, 17:10 GMT]

Tamil Nadu Chief Minister and AIADMK Chief Ms J Jayalalithaa has been sentenced on Saturday to 4 years of imprisonment, Rs. 100 crore fine and has been debarred from contesting elections for six years after the completion of the prison term by a special court of India, in a 18-year-old disproportionate assets case. Last month, New Delhi’s Central Bureau of Investigation filed a new telecommunication corruption case against a former DMK minister and a Malaysian corporate owner of Eezham Tamil origin, in addition to earlier cases on DMK leaders. The New Delhi government stridently opposes and blocks any UN or international scrutiny on crimes committed in the island of Sri Lanka. Ms Jayalalithaa, personally as well as through Tamil Nadu State Assembly, has been demanding international investigations on the genocide in the island.

The timing of the judicial measures, politically and geopolitically targets Dravidian polity in Tamil Nadu that challenges the ‘Hindutva’ polity’s imperialist vision, which doesn’t shun complicity in the genocide of Eezham Tamils, political observers in Chennai said.

New Delhi’s partnership with Colombo in the genocidal-military engineering in the region is the core factor behind the unfolding developments related to Tamil Nadu, the observers further said.

Citing political unrest in Tamil Nadu following the court verdict on Saturday, BJP’s Strategic Action Committee chairman Subramanian Swamy, who had originally filed the case against Ms Jayalalithaa in 1996, has already started demanding dismissal of the Tamil Nadu government and ‘presidential rule’ in the State.

While individual misappropriation of public funds are heard, decided, publicized and used, en bloc misappropriation of the lands and resources of the whole nation of Eezham Tamils takes place by the larger designs of the New Delhi Establishment. New Delhi's approach to Tamil Nadu is no more ‘national’. It is international imperialistic and geopolitical. The Tamil Nadu polity has to be awakened to the larger realities and should respond in intelligent ways, the political observers in Chennai said.

* * *
Further observations by a political analyst in Chennai follow:

The Dravidian movement had emerged as a counter-hegemonic force in Tamil Nadu politics in the early 20th century, where its foundational leaders had challenged the Indian nationalist movement for being North Indian centric and for upholding Brahminism both in society and politics.

One of the most important historic leaders of this movement, Periyar, who was a staunch anti-caste and pro-women’s rights activist, was of the opinion from the 1920’s that a separate state of Dravida Nadu alone could guarantee rights for the Tamils in the mainland.

However, the demand for a separate state was dropped by DMK, which split from the Periyar’s Dravidar Kazhagam in 1949 to become a political party. The DMK, led by CN Annadurai (Anna), focused more on having more political and cultural autonomy for the state of Tamil Nadu.

After Anna was elected as Chief Minister in 1967, the state rule has alternated only between Dravidian parties - the DMK led by Karunanidhi following Anna’s death, and the AIADMK led by MGR and later by Jayalalitha.

Several Indian academics have conceded to the Dravidian rule that the alternating governments, with their policy of competitive populism and socio-economic welfare schemes, have contributed to making Tamil Nadu one of the model states in India.

Yet, at several occasions in the past, the centre has used its powers to dismiss governments in Tamil Nadu if the state’s rulers did not comply with the centre’s line.

Likewise, this is not the first time that corruption charges against the Dravidian parties have been laid. Indian-centric media, both ‘left-wing’ and ‘right-wing’, have for several years tried to paint the Dravidian rule as essentially corrupt.

However, the recent judicial moves against Dravidian leaders have a larger and more insidious agenda.

This particular case against Jayalalitha was filed by Subramaniam Swamy in 1996. Swamy, a high ranking member in the BJP which currently rules the central government, has also clashed with the AIADMK leader recently on the issue of Tamil fishermen being shot by the Sri Lanka Navy.

He has also called for dismissal of the Tamil Nadu government citing Jayalalitha’s opposition to Sri Lanka.

While Jayalalitha was initially opposed to the political demands of the Eezham Tamil people, one of her campaign slogans in the run-up to the 2011 elections was support for free Tamil Eelam.

After she came to power, historically significant resolutions were passed in the Tamil Nadu state assembly, calling for an independent international investigation into Sri Lanka’s genocidal crimes and for a referendum to be conducted among Eezham Tamils to decide their political future.

These moves irked Delhi-centric politicians and political pundits, with many expressing the opinion that a state government cannot interfere in foreign policy, which, according to them, was a preserve of the centre.

It also needs to be noted that the India has blocked even the minimal investigations that the UN has recently commissioned. Likewise, the extent of the role of Indian officials in the war is yet to be properly investigated.

The war on the Eezham Tamil nation was facilitated by the world powers in general, specifically the Washington-New Delhi axis, owing to the geo-political significance of the region.

The same logic of these imperialisms recognizes the role that Tamil Nadu can play in the future in significantly shaping and maybe even securing political justice for the Eezham Tamils.


The targeting of strong leaders in the Tamil Nadu state, the assault on civil and political liberties, the creation of a security or corruption paranoia by the Indian media, the calls by Hindutva extremists to impose President’s rule, all have to be seen in the light of New Delhi’s attempts to break the morale of the Tamil people.

மனோ கணேசன்:

அஇஅதிமுக தலைவி ஜெயலிதாவை விமர்சனம் செய்ய இங்கே எவருக்கும் யோக்கியதை இல்லை 

மனோ கணேசன்:- 01 அக்டோபர் 2014


அதிமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலிதாவை விமர்சனம் செய்ய இங்கே எந்த ஒரு அரசியல்வாதிக்கும் யோக்கியதை இல்லை. குறிப்பாக ஊழல், குடும்ப ஆட்சி, வீண் விரயம், அதிகார துஷ்பிரயோகம், எதிரணியினர் மீது வன்முறை, ஊடக அடக்கு முறை, மனித உரிமை மீறல், சட்ட ஆட்சி இன்மை, சொந்த வயிற்றுப்பாடு தேவைக்காக சொந்த மக்களையே விற்று சாப்பிடும் அரசியல் ஆகியவற்றில் உலக சாதனை செய்துள்ள இந்த வெட்கங்கெட்ட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளுக்கு கொஞ்சமும் அருகதை இல்லை.

அதிமுக தலைவர் ஜெயலிதாவை பார்த்து எள்ளி நகையாடவும், சாபமிடவும் இங்கே உள்ள சில அரசாங்க எலிகள் கிளம்பியுள்ளதை பார்க்கும் போது விசித்திரமாக இருக்கின்றது. ஜெயலலிதா எட்டு கோடி மக்களின் முதலமைச்சர் என்பதையும், தமிழக மக்களின் அறுதி பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ள, இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியின் தலைவர் என்பதையும் இந்த எலிகளுக்கு நான் ஞாபகமூட்டுக்கின்றேன்.

முன்னாள் தமிழக முதல்வர் தவறு இழைத்துள்ளாரா, இல்லையா என்பது பற்றி இந்திய நீதித்துறை தீர்மானிக்கட்டும். நீதித்துறைக்கு முகங்கொடுக்க அதிமுக சட்டபிரிவு, பிரபல இந்திய சட்ட அறிஞர் ராம் ஜெத்மலானி தலைமையில் அணி திரண்டுள்ளது. அதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

உலகம் ஒரு மத பயங்கரவாதியாக அடையாளம் கண்டுள்ள சர்ச்சைக்குரிய மியான்மார் நாட்டு மத தலைவர் விராது தேரரை இன்று இந்த நாட்டுக்குள்ளே சர்வ மரியாதைகளுடன் அழைத்து வருகிறீர்கள். இந்த நாட்டின் பொதுபல சேனை அடிப்படைவாத அமைப்பு, விராது தேரரின் 969 என்ற அடிப்படைவாத அமைப்புடன் ஒப்பந்தம் செய்து, ஆவணங்களை பரிமாறிக்கொள்கின்றது. அந்த மாநாட்டில் பல இனங்கள் வாழும் இலங்கையின் பன்மை தன்மையை குழப்பி விடும் முகமாக, இலங்கையின் பெயரை சிங்ஹலே என மாற்றவேண்டும் என்றும், இங்கு வாழும் மக்களை சிங்ஹல–பெளத்தர்கள், சிங்ஹல-தமிழர்கள்,  சிங்ஹல-இந்துகள், சிங்ஹல-முஸ்லிம்கள், சிங்ஹல-கிறிஸ்தவர்கள் என அழைக்க வேண்டும் என்றும், தேசியக்கொடியை இன்னமும் சிங்கள பெளத்த மயமாக்க வேண்டும் எனவும் கருத்துகள் கூறப்படுகின்றன.

வெளிநாட்டு விராது தேரின் ஆலோசனைகளின்படி நமது நாட்டில் நடைபெறும்  இவை அரசாங்கத்தின்  கண்களுக்கு சட்டமீறல்களாக, குற்றங்களாக தெரியவில்லை. ஆனால்,

வெளிநாட்டு  அரசியல் தலைவர் முன்னாள் முதல்வர் ஜெயலிதா தொடர்பில் அவரது நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் குற்றங்களாக அரசாங்கத்தின் கூட்டு கட்சிகள் சிலவற்றுக்கு தெரிகின்றன. எனவே ஜெயலலிதா பற்றி அவசரப்பட்டு தெரிவிக்கப்படும் அரைவேக்காட்டு கருத்துகளை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இலங்கை நீதிமன்றத்தில்  நிறுத்தப்படவில்லை. இலங்கை மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்தார் என குற்றஞ்சாட்டப்படவில்லை.  எனவே அவரைப்பற்றி  கருத்து கூறுமுன்  இவர்கள் தங்களை திருத்தி கொள்ள வேண்டும்.  மாநிலத்திலும், தேசியரீதியாகவும் பலமான ஒரு அரசியல்  தலைவரையும் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் இந்திய நீதித்துறையை பார்த்து பாடம் படிக்க வேண்டும். இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சுறுத்தலை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதிமுக தலைவர் ஜெயலலிதா தனது ஆட்சிகாலத்தில் இலங்கை தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்திருந்தார். இதுவே இவர்களது கோபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. அதிமுக தலைவர் ஜெயலலிதா அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். இந்த எதிர்பார்ப்பு நல்ல எண்ணம் கொண்டது இல்லை. இங்கே வாழும் தமிழருக்காக அதிகாரத்துடன் குரல் கொடுக்கும் எந்த ஒரு சக்தியும் எந்த ஒரு நாட்டிலும் , குறிப்பாக தமிழகத்தில் இருக்கக் கூடாது என்ற எண்ணமே அரசாங்கத்திற்கு உள்ளே நிலவுகின்றது.

தமிழகம்:

அன்னமிட்ட கைக்கு அநியாய தீர்ப்பா?
                                                                          தெய்வத்தை மனிதன் தண்டிக்கலாமா?



திரண்ட திரையுலகம்:


தொடரும்:..........

No comments:

Post a Comment

“Nowadays, many people wondering how even to celebrate Christmas and find their daily meals,” Cardinal

Speaking to the media ahead of Christmas on Dec. 19, the cardinal urged Catholics to remember the less fortunate this Christmas, encouraging...