இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம்.
ஏப்ரல் 5, 2025 ஜனாதிபதி ஊடகப் பிரிவு
அதிமேதகு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களே, கௌரவ பிரதமர் அவர்களே, விருந்தினர்களே, கௌரவ அமைச்சர்களே, ஊடகவியலாளர்களே வணக்கம்! நமஸ்தே! காலை வணக்கம்!
Ayubowan, Vanakkam, Namaste, and Good Morning!
எமது அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு வருகை தரும் முதலாவது அரச தலைவர் என்ற வகையில் அதிமேதகு இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மற்றும் தூதுக்குழுவினரை அன்போடு வரவேற்கிறோம். சம்பிரதாய அரசியல் பின்னணியின்றி பிரவேசித்து, தனது நாடு வளர்ச்சியடைந்த நவீன உலகத்திற்குள் செல்வதற்கு தடையாக காணப்பட்ட அரசியல் கலாச்சாரம் மற்றும் நெருக்கடிகளை மாற்றியமைப்பதாக மக்களுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்பாட்டிற்கு அமைவாக ஆட்சிக்கு வந்த கௌரவ ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களினால் இந்தியாவில் செய்யப்பட்ட மாற்றத்துக்கு நிகரான எதிர்பார்ப்புக்களுடன் கூடிய வகையில் அதிகாரத்தை கைபற்றிய நாம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளமை வரலாற்று தடமாகும் என்று கருதுகிறேன்.
இந்த விஜயம் இலங்கை மற்றும் இந்தியாவின் ஆரம்ப காலத்திலிருந்து பேணிவரும் ஒத்துழைப்பின் நெருக்கம் மற்றும் நட்புறவை வெளிக்காட்டுகிறது. 50 கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட சிறிய கடல் பரப்பினால் வேறுபட்டிருக்கும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவு மிகவும் நெருக்கமானது. பல்வகைத்தன்மையின் தேசமான இந்தியா வரலாற்று காலத்திலிருந்து உலக கலாச்சாரம் மற்றும் உலக மரபுரிமைகளுக்கான குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. அது இன்றளவில் உலக அரங்கில் முதன்மைப் பணியை ஆற்றுகிறது. இந்தியா பிராகாசிக்கும் விதத்தையும், எழுச்சி பெற்று நிற்கும் விதத்தையும் நாங்கள் காண்கிறோம். வலயத்தின் பலவானாக மாத்திரமன்றி, உலக பலவானாகவும் இந்தியா இடம்பிடித்திருப்பதை கண்டு நாம் பாராட்ட வேண்டும். அதற்காக நேர்மையான கைத்தட்டலை வழங்குகிறோம். இந்தியாவை போலவே இலங்கையும் தெற்காசியாவின் எழுச்சியை விரும்புகிறது. தெற்காசியா பிரகாசிக்ககூடிய மற்றும் கூட்டாக பெற்றுக்கொள்ளக்கூடிய இலக்குகள் தொடர்பில் சிந்திக்கிறோம். இலங்கையும் இந்தியாவும் தமது புவியியல் அமைவிடங்களுக்கு மேலதிகமாக பல்வேறு விடயங்களை பகிர்ந்துகொள்கின்றன. எமக்கிடையில் 2500 வருடங்களுக்கும் அதிகமான காலம் வரலாற்று,கலாச்சார, மத தொடர்புகள் நீடிக்கிறது. காலத்தின் சோதனையையும் வென்றிருக்கும் எமது தொடர்பாடல் பொதுவான பெறுமதிகள்,அன்னோன்யம் மற்றும் பொதுவான எதிர்பார்புக்கள் மூலமே கட்டியெழுப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியா தத்தமது நாடுகளில் பல்வகைத்தன்மையை பகிர்ந்துகொண்டு நாகரிக பங்காளிகள் என்ற வகையில் வரலாற்றிலிருந்து மொழி, மதம், ஒழுக்கம், கலை, கலாச்சாரம், உள்ளக கட்டிடக்கலை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நெருக்கமானவர்களாக மாறியுள்ளன. அண்மைய கைவிடாத நட்பு, தொடர்பிற்கு உதாரணமாக ஒரு விடயம் நினைவிலிருக்கிறது. 1996 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தின் போது பாதுகாப்பு காரணங்களினால் இரு அணிகள் இலங்கைக்கு வர புறக்கணித்த நேரத்தில் இந்தியா கிரிக்கெட் அணி இணைக் குழுவாக பங்கேற்று காண்பித்த நட்பு! அதற்கான எமது நன்றியை மீண்டும் சொல்கிறோம்.
இலங்கையின் தேசிய எதிர்பார்ப்புக்களுக்கு முன்னுரிமை அளித்து, சமாதானம் மற்றும் மக்களின் இறையாண்மையை மேம்படுத்திக்கொண்டு முன்னெடுக்கப்படும் வெளிநாட்டு கொள்கைகளே எமது பயணப்பாதையாகும். சிறிது நேரத்துக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எமது பிரதிநிதிகளுக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்தை நடைபெற்றது. எமது இருதரப்பு ஒத்துழைப்புக்களின் தற்போதைய நிலைமை விரிவாக மீளாய்வு செய்த நாம் அன்யோன்யமாக ஈடுபாடு காண்பிக்கும் துறைகளில் ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்திக்கொள்ளும் விதம் தொடர்பில் கருத்து பரிமாரிக்கொள்ளப்பட்டது. புதுடில்லிக்கான எனது விஜயத்தை நினைவுகூறும் அதேநேரம் அதன்போது இணங்கியவாறு, பகிர்ந்துகொள்ளும் எதிர்காலத்துக்கான ஒத்துழைப்பை பலப்படுத்திக்கொள்ள இந்தியா – இலங்கை ஒருங்கிணைந்த பிரகடணம் உள்ளிட்ட விடயங்களை நனவாக்கிக்கொள்ள இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்பை பிரதமர் மோடியிடம் அறிவித்துள்ளேன்.
இந்நாட்டு பொருளாதாரத்தை மீள எழுச்சி பெறச் செய்தல், வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக பெற்றுக்கொடுத்த ஒத்துழைப்புக்காக பிரதமர் மோடி மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தேன். பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மற்றும் இந்தியாவை சர்வதேசத்திற்கு கொண்டுச் சென்ற அவரது மாற்றத்துக்கான ஆரம்பக்கட்ட முயற்சிகள் மற்றும் இலங்கை தொடர்பில் அவர் கொண்டிருக்கும் தனிப்பட்ட நட்புறவு காரணமாக பொருளாதார மறுசீரமைப்பு, உடகட்டமைப்பு அபிவிருத்திகளை பலப்படுத்தல் மற்றும் சமூக அபிவிருத்தி உள்ளிட்டத் துறைகளில் இலங்கையர்களான எமக்கு பெருமளவான பிரதிபலன்கள் கிடைத்துள்ளன.
“அயலவருக்கு முதலிடம்” என்ற இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வடிவத்திற்கு அமைவாக எமது நாட்டின் பொருளாதார மீட்சிக்கும் ஸ்திரமான பொருளாதார பயணத்திற்கு இந்தியா காண்பிக்கும் முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்புக்காக பிரதமர் மோடிக்கு நாம் நன்றி சொல்கிறோம். சாத்தியமான கடன் மறுசீரமைப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி பயணிக்கும் எமது தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து நான் பிரதமர் மோடிக்கு விளக்கமளித்தேன். கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் போது இந்திய அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பிற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதும் காணப்படுகின்ற சிறப்பான பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடினோம். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வலயத்துக்கு பாதகமான எந்தவொரு செயல்பாட்டுக்கும் இலங்கைக்குள் இடமளியோம் என்ற நிலைப்பாட்டினை மீண்டும் உறுதிப்படுத்தினேன். அன்னியோன்யமான பொருளாதார வலயங்களுக்கு அப்பால் சமுத்திர வலயங்களுக்கு வெளியிலான எல்லைகளை அமைப்பதற்கு ஐக்கிய நாடுகளின் சமுத்திர எல்லைகள் தொடர்பான ஆணைக்குழுவிடம் சமர்பிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் உரிமைத்துவம் தொடர்பிலான தொழில்நுட்ப இருதரப்பு பேச்சுவார்த்தையை விரைவில் நடத்துவதற்கான தலையீடை பிரதமர் மோடியிடம் நான் கோரினேன்.
வளர்ச்சி,புத்தாக்கம், வினைத்திறனை மேம்படுத்த டிஜிட்டல் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவத்தை இலங்கை அறிந்துகொண்டுள்ளது. அதற்கான பன்முக துறைகளில்; ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய டிஜிட்டல் மயமாக்கல் ஒத்துழைப்பு குறித்தும் நாங்கள் கலந்துரையாடினோம். இலங்கையின் டிஜிட்டல் அடையாளம் (ளுடுருனுஐ) வேலைத்திட்டத்தை செயற்படுத்த 300 கோடி இந்திய ரூபாய் நிதி அன்பளிப்பை வழங்கியமைக்கான இந்திய அரசாங்கத்திற்கு நான் நன்றி சொல்கிறேன். எமது பொருளாதார மற்றும் தனிப்பட்ட ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக்கொள்ளும்போது தொடர்பாடல் உரை தீர்மானமிக்க வகிபாகத்தை கொண்டிருக்கும். மஹவ – ஓமந்தை ரயில் வீதியை அமைப்பதற்கான வழங்கிய ஒத்துழைப்பிற்கும் மஹவ – அநுராதபுரம் ரயில் நிலையங்களில் அமைக்கப்படும் சமிக்ஞை கட்டமைப்புக்காக வழங்கிய 14.9 அமெரிக்க டொலர் மில்லியன் கடன் உதவியை அன்பளிப்பாக மாற்றியமைத்ததற்காகவும் பிரதமர் மோடிக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். பிரதமர் மோடியும் நானும் இந்த வேலைத்திட்டத்தை நாளை அநுராதபுரத்தில் ஆரம்பிக்க உள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.
எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகவும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் நம்பகமான, தாங்கிக்கொள்ளக்கூடிய, காலோசிதமான, எரிசக்தி வளங்களை பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்கான எமது அரசாங்கத்தின் முன்னுரிமை மற்றும் அந்த துறைகளுக்குள் மேலும் ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய இணக்கப்பாடுகள் தொடர்பில் நாங்கள் விரிவாக கலந்துரையாடினோம். அதேபோல் அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் விவசாயம் தொடர்பில் கருத்துகளை பரிமாறிக்கொண்டோம். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு குறித்தும் பிரதமர் மோடியும் நானும் கலந்துரையாடினோம்.
பிரதான ஒத்துழைப்பு துறைகளில் அதிகளவான இந்திய முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்வதை ஊக்குவிக்க இந்திய அரசாங்கம் மற்றும் பிரதமர் மோடியின் ஒத்துழைப்புக்களை நாங்கள் கோரினோம். சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு குறித்தும் எமது கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. அண்மைக்காலமாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே இலங்கைக்கு வருகின்றனர். அதன்படி இந்த துறையை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துவது குறித்தும் கருத்து பரிமாறிக்கொண்டோம். எமது வெளிநாட்டு பணியாளர்கள் பயனடையும் வகையில் இருநாடுகளுக்கும் இடையிலான சமூக பாதுகாப்பு உடன்படிக்கைளுக்கான பிரதமர் மோடியின் தலையீட்டையும் நாம் கோரியுள்ளோம். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை எட்டக்கூடிய ஒத்துழைப்பு அணுகுமுறைகள் குறித்து நாம் கலந்துரையாடினோம்.
(ஆங்கில மூலம்: Recognizing the serious environmental damage caused by bottom trawling, a prohibited practice in both our countries, we called for decisive measures to halt this activity and to address illegal, unreported, and unregulated fishing.-ENB)
இரு நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட முறையான, ஆழத்திற்கு இழுத்துச் செல்லும் மீன் வலை முறையால் ஏற்படும் கடுமையான சுற்றாடல் பாதிப்பை அறிந்துகொண்டு இந்த செயற்பாட்டை நிறுத்தல், சட்டவிரோதமாக நிர்ணயிக்கப்டாத அல்லது வரையறுக்கப்படாத மீன்களை பிடிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டோம். இன்றைய தினம் எரிசக்தி ஒத்துழைப்பு, சுகாதார துறை ஒத்துழைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் விஸ்தரிப்பு, கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட துறைகளுக்கு அமைவாக இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் இருதரப்பு ஒப்பந்தங்கள் பலவற்றை பரிமாற்றிக்கொள்ளும் நிகழ்வில் பங்கேற்க கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. அது எமது தொடர்புகளின் மற்றுமொரு கட்டமாகும் என்பது உறுதி. எமது தேசிய மின் உற்பத்தி கட்டமைப்பிற்கு 120 மெகாவோட் மின்சாரத்தை இணைக்கும் சம்பூர் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுதல், இலங்கை முழுவதிலும் உள்ள 5000 மதத் தலங்களுக்கு சூரிய மின் கட்டமைப்பை விநியோகிக்கும் திட்டத்தை ஆரம்பிக்கவும் இலங்கையிலுள்ள ஒரேயொரு வெப்பநிலை கட்டுப்பாட்டு களஞ்சியமான தம்புள்ளையின் விவசாய களஞ்சியத்தை ஒன்லைன் முறை மூலம் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் மோடியுடன் இணைந்துகொள்ள கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த மக்கள் மையத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக வழங்கிய நட்புறவு அடிப்படையிலான ஒத்துழைப்புக்கு இந்திய அரசாங்கத்திற்கு நன்றி சொல்கிறேன். இந்தியாவிடமிருந்து எமக்கு கிடைத்த மிக உயர்வான பரிசான புத்த மதத்தின் வருகையின் பின்னர் எமது நாட்டில் ஏற்பட்ட உயர்வான நாகரிக வளர்ச்சி சின்னமாக விளங்கும் அநுராதபுரத்திற்கு பிரதமர் மோடி மற்றும் தூதுக்குழு நாளை விஜயம் செய்யவுள்ளதை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். அநுராதபுரத்தில் ஜய ஸ்ரீP மகா போதியையும் தரிசிக்கவுள்ளார். கடந்த பொருளாதார நெருக்கடியின் போது இலங்கையின் ஜனநாயகம் மற்றும் ஸ்திரத்ன்மையை உறுதி செய்வதற்காகவும் பொருளாதார அபிவிருத்திக்காகவும் இந்தியா மேலும் ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்தமைக்காக பிரதமர் மோடி அறிவித்தார்.
இலங்கை கட்டியெழுப்ப பங்காளியாகவும், நண்பனாகவும் இந்திய அருகில் இருக்கும் என்பதை உறுதிப்படுத்திய அந்த ஒத்துழைப்பு பெரும் பலமானது என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். அபிவிருத்தி, புத்தாக்கம், இந்து சமுத்திர வலயத்தின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, சமாதானம், என்பவற்றோடு எமது மக்களினதும் பங்களிப்புடன் பொதுவான எதிர்கால பயணத்தை தொடர்வதற்கு எமது இரு நாடுகளினதும் மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இந்தியாவும் இலங்கையும்; வரைப்படத்திலிருக்கும் இரு நாடுகளாக மட்டும் அன்றி, வரலாற்றினால் வலுவடைந்த, பொருளாதாரத்தினால் இணைந்துகொண்ட நட்புறவால் ஒன்றுபட்டிருக்கும் தேசங்கள் என்பதை வலியுறுத்த வேண்டும். அதேபோல் பிரதமர் மோடியின் “சப்பா சாப், சப்பா விகாஸ்”; திட்டங்கள் காலோசிதமானதும் நடைமுறைக்கு அமைவானதுமான திட்டம் என்ற வகையில் அவற்றை வரவேற்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி இலங்கை மற்றும் அதன் மக்களுக்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் வழங்கிய ஒத்துழைப்பிற்கு துறைசார் நட்புறவு மற்றும் அணிசேரா பன்முக ஒத்துழைப்பின் அடையாளமாக வெளிநாட்டு அரச தலைவர் ஒருவருக்கு இலங்கையினால் வழங்கப்படும் மிக உயர்வான கௌரவமாக “ஸ்ரீ லங்கா மித்ர விபூசன” பதக்த்தை அவருக்கு வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருப்பதை நான் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
இந்த கௌரவ பதக்கம் இலங்கையின் மக்கள் மீதான அவர்களின் நட்பு மற்றும் ஒத்துழைப்பை வழங்கும் வெளிநாட்டுத் தலைவர்களை பாராட்டி வழங்கப்படும் கௌரவ பதக்கமாகும். எல்லா நேரங்களிலும் இலங்கைக்கான முன்னிலையான பிரதமர் நரேந்திர மோடி இந்த கௌரவத்திற்கு மிகத் தகுதியானவர் என்று நம்புகிறோம். இலங்கையர் நாம் மாற்றத்துக்கான பாதையில் செல்கிறோம். அதனை நாங்கள் “வளமான நாடு – அழகான வாழ்வு” என்ற தேசிய கொள்கையாக அறிமுகப்படுத்துகிறோம். பொருளாதார முன்னேற்றம், சமூக நீதி, எல்லா பிரஜைகளுக்கும் அவர்களின் பின்னணி எவ்வாறானதாக இருந்தாலும் முன்னேற்றம் அடைவதற்கான வழியாக அதனை கட்டியெழுப்பியுள்ளோம். அயலவர்களாகவும், பங்காளிகளாகவும், வரலாற்று நண்பர்களாகவும் இணைந்து அபிவிருத்தி நிறைந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறோம். மக்களை மையப்படுத்திய அரசியல் மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு விஜயம் செய்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரின் தூதுக் குழுவிற்கு எனது நன்றியை மீண்டும் சொல்கிறேன். நன்றி!
இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கே.