அரசியல் பிரச்சாரத்தின் ஆதாரக் கோட்பாடு

========================================================================================================

அரசியல் பிரச்சாரத்தின் ஆதாரக் கோட்பாடு.

'' நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவித சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒழிந்து நிற்பதைக் கண்டுகொள்ள மக்கள் தெரிந்துகொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் காட்டு மிராண்டித் தனமாகவும் அழுகிப் போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஒரு ஆளும்வர்க்கத்தின் சக்தியைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், அபிவிருத்திகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாளாக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன?

பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைச் சிருக்ஷ்டிக்கவும் திறன் பெற்றவையும், சமுதாயத்தில் தாங்கள் வகிக்கும் ஸ்தானத்தின் காரணமாக அப்படிச் சிருக்ஷ்டித்துக் தீரவேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிறவையுமான சக்திகளை, நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்துக்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு ஞானமூட்டிப் போராட்டத்துக்கு ஸ்தாபன ரீதியாகத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி. ''

மாமேதை தோழர் லெனின்
===========================================================================================================================

Wednesday, 4 April 2018

காவிரி: தமிழகம், புதுவையில் முழு அடைப்புகாவிரி: தமிழகம், புதுவையில் முழு அடைப்பு- பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கம்

சென்னை/புதுச்சேரி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக விடுத்திருந்த முழு அடைப்புப் போராட்டம் காலை 6 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பெரும்பாலான இடங்களில் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை.

இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு அலுவலகங்கள் பல இடங்களில் இழுத்து மூடப்பட்டு வருகின்றன. ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு அமைப்புகளின் சார்பில் முழு அடைப்புப் போராட்டமும் நடத்தப்பட்டன.இந்த நிலையில் தமிழகம் தழுவிய முழு அடைப்புப்
போராட்டத்துக்கு திமுக இன்று அழைப்பு விடுத்திருந்தது. இப் போராட்டத்துக்கு வணிகர் சங்கங்கள், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. இன்று காலை 6 மணி முதலே பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதேபோல் பேருந்துகளும் மிகவும் குறைவான அளவிலேயே இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகம்- கர்நாடகா எல்லையான ஓசூரில் இரு மாநில பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள் நடக்காத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை!

Read More: http://samaran1917.blogspot.co.uk/2018/02/blog-post.html

No comments:

Post a Comment