Sunday 20 February 2011

பூக்களின் பூஜை

தாய் நிலத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்!

பெற்றதாய் சுமந்தது பத்துமாதம்
நிலம் சுமப்பதோ நீண்டகாலம்.
அன்னை மடியிலிருந்து கீழிறங்கி
அடுத்த அடியை நீ வைத்தது
தாயகத்தின் நெஞ்சில் தானே.
இறுதியில் புதைந்தோ
அல்லது எரிந்தோ எருவானதும்
தாய்நிலத்தின் மடியில்தானே.
நிலமிழந்துபோனால் பலமிழந்துபோகும்
பலமிழந்துபோனால் இனம் அழிந்துபோகும் 
ஆதலால் மானுடனே!
தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்.

புலவன்:புதுவை இரத்தினதுரை

பூவரசம் வேலியும் புலினிக் குஞ்சுகளும் பக்கம் 88

அம்மாவின் இறுதிக்கிரிகை பற்றிய தகவல்கள்

ஒரு கொடியேற்றுவோம், ஒருதாய் மக்கள் நாம் என்போம்!

பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதியை நேரில் சென்று மிரட்டிய இந்திய தூதரக அதிகாரி!

பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதியை நேரில் சென்று மிரட்டிய இந்திய தூதரக அதிகாரி!


சிறீலங்கா அரச படைகளினால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கவேண்டும் என பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதியை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலக அதிகாரி நேரில் சென்று மிரட்டியதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 112 மீனவர்களுக்கும் எதிர்வரும் 28 ஆம் நாள் வரை தடுப்புக்காவல் உத்தரவை பருத்தித்துறை பகுதி நீதிமன்றம் விதித்திருந்தது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்ட பெரும் கொந்தளிப்பினால் இந்திய மத்திய அரசு அவசர நடவடிக்கையை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா, சிறீலங்கா வெளிவிவகார அமைச்சரை தொலைபேசியில் மிரட்டிய அதே சமயம், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரி மகாலிங்கம் என்பவர் கடந்த வியாழக்கிழமை (17) பருத்தித்துறை பகுதி நீதிமன்ற நீதிபதி சிறீநிதி நந்தசேகரனின் இல்லத்திற்கு சென்று மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.

எனினும் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இந்தியாவின் அழுத்தம் அதிகாரிக்க கொழும்பு மாவட்ட பிரதம நீதிபதி இந்த விடயத்தில் தலையிட்டு மீனவர்களை உடனடியாக விடுதலை செய்துள்ளார் என அவை மேலும் தெரிவித்துள்ளன. இதனிடையே, சிறீலங்கா கடற்படையினரின் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களை இந்திய கடற்படையின் உயர்மட்ட அதிகாரி ஒருவரே வந்து பொறுப்பேற்று சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Feb 19, 2011 / பகுதி: செய்தி பதிவு

தேசியத் தாயார் பார்வதி அம்மா காலமானார்.


தேசியத் தாயார் பார்வதி அம்மா அவர்கள் தமிழீழ நேரப்படி 20.02.2011 அன்று அதிகாலை 6.30 மணியளவில் காலமானார்.தமிமீழத் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு அன்னாருக்கு தேசிய அஞ்சலி செலுத்துமாறு புலம் பெயர் வாழ் தமிழர்களை வேண்டிக் கொள்கின்றோம்.


“I do not know why Kalaignar Aiya [Tamil Nadu Chief Minister M. Karunanidhi] sent me back,” Parvathi Amma, who was admitted to Valveddiththu’rai (VVT) hospital told TamilNet in May 2010.

=== புதிய ஈழப்புரட்சியாளர்கள். ===

NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...