Monday 14 May 2018

enb-news.com




வருக, வருக, என வரவேற்கின்றோம்!

ENB இணைய அறிவித்தல்



அன்பார்ந்த ENB வாசகர்களே,

கடந்த 15ஆண்டுகளுக்கு மேலாக எமது அரசியல் பிரச்சாரம் அச்சுத் தளத்தில் -1993 ஜூலையில்- இருந்து மாறி  ON LINE இல் இயங்கியது. புதிய சாதனத்தைக் கையாளுவதில் ஆர்வம் இருந்த அளவுக்கு அறிவோ,அநுபவமோ இயல்பாகவே இருக்கவில்லை.இதனால் முதல் 5 ஆண்டு முயற்சிகள் ஆதாரமே இல்லாமல்-சில அநுபவங்களைத் தந்துவிட்டு- அழிந்துவிட்டது!

பின்னர் Blogger இல் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கினோம். தேவையின் நிமித்தம் பல தளங்களை Blogger இல் உருவாக்கினோம், எனினும் ஒரு சிலவற்றையே பரவலாக்கி வந்தோம்.

இதில் `தமிழீழச் செய்தியகம்`,  Tamil Eelam News Network (ENB TENN) செய்தித் தளமாக இயங்கியது.

இன்று 14-05-2018 முதல் நமது செய்தியகம், World Wide Web இல்
enb-news.com எனும் முகவரியில் தொடரவுள்ளது என்பதை வாசகர்களுக்கு மிகுந்த மகிழ்வுடன் அறியத் தருகின்றோம்.

தங்கள் ஆதரவையும், ஆலோசனைகளையும், தொடர்ந்தும் பணிவுடன் வேண்டி நிற்கின்றோம்.

தொடர்புக்கு: eelamnewsbulletin@googlemail.com

இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!

என்றும் தோழமையுடன்
சுபா.
14-05-2018

வெளிவந்துவிட்டது ENB இணையம்!

வெளிவந்துவிட்டது ENB இணையம்!

வெளிவந்துவிட்டது ENB இன் அரசியல் பிரச்சார ஊடக இணையம் enb-news .com.
ENB இன் அரசியல் பிரச்சார ஊடக இணையம் enb-news .com இன்று முதல் www இல் ஒரு அங்கமாக பொது வெளியில் பிரவேசிக்கின்றது.
நினைவுக்கு எட்டியவரை நீண்டு பார்த்தால் இந்தப் பயணம் சுதந்திரன் பத்திரிகையில் இருந்து ஆரம்பித்திருக்கக் கூடும். ஒரு சுமாரான காலம் கடந்த பழசு!
Blogger இலேயே ஒரு பத்தாண்டு ஓடிக் கழிந்துவிட்டது.
இந்தப் பத்தாண்டில் எதிர்த்தும், ஆதரித்தும் எம்மோடிருந்த வாசகர்கள், தொடர்ந்தும் துன்புற்றும், இன்புற்றும் எம் கூடப் பயணிப்பார்கள் என நம்புகின்றோம்.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நாம் தொடர்ந்து கூறிவந்தவாறு `உலக மறு பங்கீட்டு போர் முரசுகள்` கொட்டத் தொடங்கிவிட்டன.
இனத்துவ நலன்களைக்கூட ஏகாதிபத்திய தாச, இந்திய விரிவாதிக்கப் பாச பாதையில் அடைய முடியாது என்பதை சம காலமும், ஈழத்து அநுபவமும் காட்டிவிட்டது.
இந்த மாடுகள் நீதிக்கும், அதிகாரத்துக்கும் எதிரியின் வாசல் மணியை அடித்துக்கொண்டிருக்கக் காட்டும் வழியில் தொடர்ந்தால் நாளை ஊனுக்கு, ஒரு புல் வெளிகூட இருக்காது!


இன்று மே 14 - 2018.
70 ஆண்டுகளுக்கு முன்னால் ஆக மூவாயிரம் யூதர்கள் மட்டுமே வாழ்ந்த பாலஸ்தீனம் ஆக்கிரமிக்கப்பட்டு, பாலஸ்தீனர்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டு, குடியேற்றப்பட்ட யூதர்களுக்காக இஸ்ரேல் என்கிற ஒரு நாடு செயற்கையாக உருவாக்கப்பட்டது.
இன்று பாலஸ்தீனம் என்று ஒரு தேசம் பெளதீக ரீதியில் இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது.
புலிகள் இல்லாத நிராயுதபாணிகளாக்கப்பட்ட ஈழம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை இதுதான்.
ஈழதேசத்தின் சுய நிர்ணய உரிமையை உயர்த்திப் பிடித்து, ஈழப்பிரிவினைக்கான பொது ஜன வாக்கெடுப்புக்கு சிங்களத்தைப் பணியவைப்பதே இப்பிரச்சனைக்கான ஒரே தீர்வாகும்.
இதனை மக்கள், மக்கள் மட்டுமே சாதிக்கமுடியும்.
இதற்கான பலத்தைத் திரட்ட ஈழ தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்பவும், உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்று சேரவும் வேண்டும்.
`இனத்துவ` வேடம் பூண்டு இந்த ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும் சக்திகளைத் தனிமைப்படுத்த வேண்டும், அப்போது தான் இனத்துவ வாதம் ஜனநாயக பூர்வமானதாக இருக்கும்.அதன் மூலம் தான் இன நலன்களைக் காத்துக் கொள்ளவும் முடியும்.
மே நாள் பிரசுரம் விளக்கிக் கூறியவாறு, இன்றுள்ள தேக்க நிலையை ஜனநாயக அரசியல் பிரச்சாரம் மட்டுமே தகர்த்தெறியும். ``வேறெந்த குறுக்கு வழியும் கிடையாது``. கிடையவே கிடையாது!
இது தான் இணையம் ( enb-news.com), சுமக்கின்ற பொறுப்பு.
இறுதி வெற்றி ஈழமக்களுக்கே!
புதிய ஈழப்புரட்சியாளர்கள். Eelam New Bolsheviks 
14-May-2018

NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...