அரசியல் பிரச்சாரத்தின் ஆதாரக் கோட்பாடு

========================================================================================================

அரசியல் பிரச்சாரத்தின் ஆதாரக் கோட்பாடு.

'' நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவித சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒழிந்து நிற்பதைக் கண்டுகொள்ள மக்கள் தெரிந்துகொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் காட்டு மிராண்டித் தனமாகவும் அழுகிப் போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஒரு ஆளும்வர்க்கத்தின் சக்தியைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், அபிவிருத்திகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாளாக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன?

பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைச் சிருக்ஷ்டிக்கவும் திறன் பெற்றவையும், சமுதாயத்தில் தாங்கள் வகிக்கும் ஸ்தானத்தின் காரணமாக அப்படிச் சிருக்ஷ்டித்துக் தீரவேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிறவையுமான சக்திகளை, நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்துக்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு ஞானமூட்டிப் போராட்டத்துக்கு ஸ்தாபன ரீதியாகத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி. ''

மாமேதை தோழர் லெனின்
===========================================================================================================================

Tuesday, 18 June 2013

அறிமுகம்: புதிய ஈழ புத்தக நிலையம்


 
ENB இணைய குடும்பத்தில் மற்றொரு குழந்தையாக `புதிய ஈழ புத்தக நிலையம்` NEBH, இணைந்து கொண்டுள்ளது என்பதை தாழ்மையுடன் அறியத் தருகின்றோம்.

உலக சோசலிச, மற்றும் புதிய- தேசிய ஜனநாயகப் புரட்சிகர சர்வ தேசிய இயக்கத்தின் அறிவார்ந்த வெளியீடுகளை உழைக்கும் மக்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை NEBH தனது தலையாய பணியாகக் கொண்டுள்ளது.

NEBH புரட்சிகர அரசியல் இலக்கிய வெளியீடுகளின் (இலாப நோக்கற்ற)   விற்பனை நிறுவனமும், அதே வேளை .புரட்சிகர இலக்கிய வெளியீடுகளின், சர்வதேச அரசியல் விவகார வெளியீடுகளின் அறிமுகத் தளமுமாகும்.

சமூக மாறுதலை வேண்டிநிற்கும் சமுதாய சக்திகளுக்கு இவ்விணையம் காணிக்கை!
 
புதிய ஈழப்புரட்சியாளர்கள்

Sunday, 9 June 2013

ஈழமும் தேசிய இனப் பிரச்சினையும் - நூல் வெளியீட்டு நிகழ்வு

ஈழமும் தேசிய இனப் பிரச்சினையும் - நூல் வெளியீட்டு நிகழ்வு

சமரன் வெளியீட்டகத்தின் `ஈழமும் தேசிய இனப்பிரச்சனையும்` நூல் வெளியீட்டு விழா 12/06/13 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

சோலையார் பேட்டை இரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள மாருதி திருமண மண்டபத்தில் இந்நிகழ்வு இடம் பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு ம.ஜ.இ.க. வேலூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் க.குணாளன் தலைமை ஏற்கிறார்.

ம.ஜ.இ.க. மாநில அமைப்பாளர் தோழர் ஞானம் அவர்கள் நூலை வெளியிட்டு வைத்து சிறப்புரை ஆற்றுவார்.

முதல் வெளியீட்டு நூலை திருப்பத்தூர்-வேலூர் மாவட்ட  பெரியார் திராவிடக் கழக செயலாளர் தோழர் A.D.G.கெளதமன் பெற்றுக்கொள்கிறார்.

ம.ஜ.இ.க. தோழர்கள் மா.குணாளன்- தஞ்சை, தோழர் மனோகரன் சென்னை ஆகியோர் கருத்துரை வழங்குவர்.

இறுதியில் மக்கள் கலை மன்ற கலை நிகழ்ச்சி இடம்பெறும்.

இந்நிகழ்வுகள் அனைத்துக்கும் நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் ஜீவா
முன்னிலை வகிப்பார்.