அரசியல் பிரச்சாரத்தின் ஆதாரக் கோட்பாடு

========================================================================================================

அரசியல் பிரச்சாரத்தின் ஆதாரக் கோட்பாடு.

'' நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவித சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒழிந்து நிற்பதைக் கண்டுகொள்ள மக்கள் தெரிந்துகொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் காட்டு மிராண்டித் தனமாகவும் அழுகிப் போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஒரு ஆளும்வர்க்கத்தின் சக்தியைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், அபிவிருத்திகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாளாக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன?

பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைச் சிருக்ஷ்டிக்கவும் திறன் பெற்றவையும், சமுதாயத்தில் தாங்கள் வகிக்கும் ஸ்தானத்தின் காரணமாக அப்படிச் சிருக்ஷ்டித்துக் தீரவேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிறவையுமான சக்திகளை, நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்துக்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு ஞானமூட்டிப் போராட்டத்துக்கு ஸ்தாபன ரீதியாகத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி. ''

மாமேதை தோழர் லெனின்
===========================================================================================================================

Thursday, 29 November 2018

சமரன்: தோழர் ஏ.எம்.கே.இறுதிப் பயணம் (வீடியோ)

சமரன்: தோழர் ஏ.எம்.கே.இறுதிப் பயணம் (வீடியோ): 26-11-2018 மாலை 4.30 மணியளவில் ஆரம்பித்து 5 கிலோ மீற்றர் வரை நகர்ந்த தோழர் ஏ.எம்.கே இன் இறுதிப் பயண ஊர்வலம். தோழர் ஏ.எம்.கே.வழியில் ...

Sunday, 25 November 2018

சமரன்: கட்சிப் பிரசுரம்:மா.லெ.புரட்சியாளர் தோழர் ஏ.எம்.கே...

சமரன்: கட்சிப் பிரசுரம்:மா.லெ.புரட்சியாளர் தோழர் ஏ.எம்.கே...: 26-11-2018

தோழர் ஏ.எம்.கே.அவர்களின் இறுதி ஊர்வல அறிவிப்பு


புரசிகர போல்சுவிக் தோழர் 
ஏ.எம்.கோதண்டராமன்

அவர்களின் இறுதி ஊர்வல அறிவிப்பு.

தோழர் ஏ.எம்.கே.அவர்களின் இறுதி ஊர்வலம்,

சிவப்பு அஞ்சலிக்கு அனைவரும் வருக!

26-11-2018, திங்கள் மாலை 4.00 மணி

இடம்:நியூ காலனி, திருநகர், காட்பாடி, வேலூர்.

இ.க.க.(மா.லெ) மக்கள் யுத்தம் போல்ஸ்விக்-தமிழ் நாடு
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்-தமிழ்நாடு

தொடர்புக்கு: 9941611655,  9003164280


சர்வதேச போல்சுவிசத்தின் தீரமிக்க போர்வாளும், இந்தியப்புரட்சி இயக்கத்தின் தத்துவ ஆசானுமாகிய தோழர் ஏ.எம்.கோதண்டராமன் அவர்கள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று, 84வது வயதில் தனது சிந்தனையை நிறுத்திக்கொண்டார்.


இந்திய உழைக்கும் மக்களே, உலகத் தொழிலாளர்களே,ஒடுக்கப்படும் தேசங்களே, புரட்சிகர ஜனநாயக சக்திகளே, அறிவுஜீவிகளே, கட்சி உறுப்பினர்களே,கழகத் தோழர்களே; இந்தச் செய்தியை மிகுந்த துயருடன் 
தங்களிடம் பகிர்ந்துகொள்கின்றோம்.


கட்சித் தோழர்களாலும், புரட்சிகர ஜனநாயக அறிவுஜீவிகளாலும் தோழர் ஏ.எம்.கே என்றும், தொழிற்சங்க பரப்பில் `பெரியவர்` என்றும், ஈழத் தோழர்களிடையே `தாத்தா` என்றும் அன்புடனும்,மதிப்புடனும்,தோழமையுடனும் அழைக்கப்பட்ட
அந்த அற்புதமான மானுடர் இன்று எம்முடன் பெளதீக ரீதியாக இல்லை.இயங்கியலுக்கு எதுவும் விதிவிலக்கல்ல!


எனினும் அவர் தம் சிந்தனையாலும்,சொல்லாலும்,செயலாலும் எம்மில் பிரிக்க இயலா அங்கமாக, உணர்வில் கலந்த உயிராக என்றும் வாழ்வார். இங்குதான் ஒரு தனிமனிதரின் வரலாற்றுப் பாத்திரம் அடங்கியிருக்கின்றது.


இந்திய விடுதலையில் இரண்டு தாத்தாக்கள்.
ஒன்று விதேசியத் தாத்தா! மற்றது தேசியத் தாத்தா!!

முதலாவது முடிந்துவிட்டது,இரண்டாவது தொடங்கிவிட்டது.

ஈழப்புரட்சிக்கும் இது பொருந்தும். 

இனி வரலாறு அவர் வழியில் தான் நடக்கும்.
அவர் நாமம் தான் நிலைக்கும்.

எமது அருமைத் தாத்தா,
புரட்சிகர போல்சுவிக் தோழர்
ஏ.எம்.கோதண்டராமன் நாமம் நீடூழி வாழ்க!
அவர்தம் புரட்சிப்பயணம் வெல்க!!

அஞ்சலிக்க அணிதிரள்வோம்!


Saturday, 17 November 2018

வேண்டாப் பிண்டத்தை வெட்டிச் சரிப்போம்!

முதலாளித்துவ நாடாளுமன்றம் நடைமுறையில்

காலாவதி ஆகியதன் விளைவே சிங்களத்தில் நிகழ்ந்த கலகம்.

`தாமரைக் களத்தில்` சில மொட்டுக்கள்!

சிங்கள நாடாளுமன்றம் சோல்பரி அரசியல் யாப்பால்
உருவாக்கப்பட்ட அரைக்காலனிய அந்நிய மன்றமாகும்.
மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டபோது
அதன் செங்கோல் வளைந்து விட்டது.
1972,1978 யாப்பும் 6வது திருத்தமும் வந்த போது செங்கோல்
முழுதாக முறிந்து விட்டது.
பயங்கரவாதச் சட்டம், அவசரகாலச் சட்டம் உள்ளிட்ட
கறுப்புச் சட்டங்கள் வந்து, இனப்படுகொலை யுத்தம்
சட்ட பூர்வமாக்கப்பட்ட போது எரிந்து சாம்பராய் விட்டது.
19வது திருத்தம் அதை உயிர்ப்பிக்கவில்லை, மாறாக 19
திருத்தங்களும் பாசிசப் பேயாக வளர்ந்து நிற்கின்றன.
ஒரு ஆயிரம் பேர் வடகிழக்கில் 6வது திருத்தத்தை நீக்கக்
கோரி ஆர்ப்பரித்தால், அல்லது இராணுவ முகாம் முன்னால்
ஒரு `பட்டாசு` வெடித்தால் அந்தக்கணமே இவர்கள்
ஒன்று சேர்ந்து விடுவார்கள்.
இந்த வேண்டாப் பிண்டத்தைக் கட்டிக் காப்பது அல்ல,
வெட்டிச் சரிப்பதே ஜனநாயகம்!

Thursday, 15 November 2018

மாவீரர் நாள் முழக்கங்கள்-2018மாவீரர் நாள் முழக்கங்கள் - 2018

ஏகாதிபத்தியவாதிகளே:

அமெரிக்க இந்திய முகாமோ, ரசிய சீன முகாமோ
இலங்கையை மறுபங்கீடு செய்ய ஒருபோதும் அனுமதியோம்!

இந்திய விரிவாதிக்கத்தின் தமிழகத் தரகு - இனமானத் தூண்களே:

ஈழத்தமிழர் பிரச்சனையில், இனப்படுகொலை இந்திய அரசு
தலையீடு செய்ய அழைப்பு விடாதீர்!
``தொப்புள்க் கொடி உறவுகளே``,
இந்திய இலங்கை ஒப்பந்தத்தைக் கிழித்தெறியப் போராடுவீர்!

சிங்களமே:

`ஒரே நாடு` பேசி ஒட்டுமொத்த நாட்டையும் அந்நியருக்கு தாரை வார்க்காதே!
அனைத்து அந்நிய அநியாயக் கடன்களையும் ரத்துச் செய்!
அந்நிய மூலதன உலகமயத்தைக் கைவிடு,  உள்ளூர் உற்பத்திக்கு வழிவிடு!
சிங்கள விவசாயிகளுக்கு நிலம் வழங்கு!
மலையக மக்களுக்கு மாநிலம் வழங்கு!
முஸ்லிம் மக்களுக்கு சுயாட்சி வழங்கு!
இந்திய இலங்கை ஒப்பந்தம் உள்ளிட்ட நாட்டின் `இறையாண்மைக்கு` எதிரான
அனைத்து அந்நிய ஒப்பந்தங்களையும் கிழித்தெறி!

யுத்தத்தால் கொன்றொழித்த தேசத்தின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைத் தீர்!
தமிழ் விவசாயிகளின் தனியார் நிலத்தைத் திருப்பிக்கொடு!
அனைத்து யுத்த-அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!
ரோகண விஜேவீராவுக்கு பதில் சொல்!

புலம் பெயர் ஏகாதிபத்திய தாச, இந்தியக் கைகூலிகளே:

புலிக்கோடு போட்டு `தமிழ்த் தேசியம்` பேசி, ஈழவிடுதலைப் புரட்சியைக் காட்டிக் கொடுக்காதீர்!

தமீழீழ மக்களே:

அனைத்து `தமிழ்க் கட்சி` ஒட்டுக்குழுக்களையும், NGO களையும் நிராகரிப்பீர்!
அனைத்துத் தேர்தல்களையும் புறக்கணிப்பீர்,
பொது வாக்கெடுப்புக்கு போராடுவீர்!

மாண்ட நம் மக்கள் வாழ்க!                       மாவீரர் நாமம் வாழ்க!!

இறுதி வெற்றி ஈழமக்களுக்கே.

புதிய ஈழப்புரட்சியாளர்கள்.                                                                                               Eelam New Bolsheviks
                                                                                                                      (14-11-2018)