Sunday 26 September 2010

இலங்கை மீதான குற்றச்சாட்டுகளை பான் கீ மூனின் நிபுணர் குழு விசாரிக்காது! ஜனாதிபதி மஹிந்தவிடம் பான் கீ நேரில் தெரிவிப்பு

இலங்கை மீதான குற்றச்சாட்டுகளை பான் கீ மூனின் நிபுணர் குழு விசாரிக்காது! ஜனாதிபதி மஹிந்தவிடம் பான் கீ நேரில் தெரிவிப்பு.
இலங்கை மீதான குற்றச்சாட்டுகளை பான் கீ மூனின் நிபுணர் குழு விசாரிக்காது! ஜனாதிபதி மஹிந்தவிடம் பான் கீ நேரில் தெரிவிப்புயாழ்- உதயன் 2010-09-26 08:27:00 நியுயோர்க், செப்ரெம்பர்

இலங்கை தொடர்பாகத் தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு அந்த நாட்டு அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு எந்தவித அதிகாரமும் வழங்கப்படவில்லை என்றும் இலங்கை சம்பந்தமான விடயங்களில் தனக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு மட்டுமே அந்தக்குழு நியமிக்கப்பட்டிருக்கிறது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், தம்மைச்சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரில் விளக்கியுள்ளார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐ.நா.செயலாளருக்கும் இடையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் ஜனாதிபதியின் அலுவலகம் இங்கு வெளியிட்ட அறிக்கையில்
இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது.இருவருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமானது என்றும் பெரும் பயன் உடையது என்றும் இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தின் அறிக்கையில்
சிலாகிக்கப்பட்டிருக்கிறது. இதேவேளை ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அலுவலகம் இருவருக்கும் இடையிலான சந்திப்புக் குறித்து வெளியிட்ட அறிக்கையில் இலங்கை ஜனாதிபதிக்கு அந்நாட்டு மக்கள் வழங்கியுள்ள அரசியல் ஆணை நாட்டிற்கான அரசியல் தீர்வு, நல்லிணக்கம், பொறுப்புக் கூறுதல் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கு
தனித்தன்மையுள்ள விசேடமான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க குழுவின் செயற்பாடுகளையும் அதற்கு வழங்கப்பட்டுள்ள
அதிகாரங்கள் குறித்தும் ஐ.நா. செயலாளருக்கு விரிவாக விளக்கினார். ஆணைக்குழு முற்று முழுதான வெளிப்படைத் தன்மை கொண்டது. நீண்ட கால பிரச்சினைக்கான உண்மையான காரண காரியங்களைக் கண்டறிந்து, அத்தகைய தகராறுகள் இனிமேலும் நாட்டில் தலையெடுக்காது இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை சிபார்சு செய்வதே ஆணைக்குழுவின் பணியாக அமையும் என்றும் ஜனாதிபதி ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு
விரித்துரைத்தார் என்று ஜனாதிபதி அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நல்லிணக்க ஆணைக்குழு, போரின் போது பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று விசாரணைகளை நடத்தியது. ஆணைக்குழுவின் முன் விரும்பிய எவரும் சாட்சியம் அளிக்க வகை
செய்யப்பட்டுள்ளது.




எமது நாட்டில் நல்லிணக்கத்தை தோற்றுவிக்கவும் நீதியைப் புதுப்பித்து நிலை நாட்டவும் உதவும். தகுதியுள்ள கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் எவருக்கும் சந்தர்ப்பம் அளிக்க நல்லிணக்க ஆணைக்குழு எப்போதும் தயாராக உள்ளது என்பனவற்றை மஹிந்த ராஜபக்ஷ, பான் கீமூனுக்கு விரிவாக தெளிவுபடுத்தினார் என்றும் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட
அறிக்கை விஸ்தாரணம் செய்தது.மஹிந்த பான் கீ மூன் சந்திப்பின் போது அகதிகளுக்கான ஐ.நா. தூதரகமும் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பணியாற்றும் சர்வதேச தொண்டர் நிறுவனங்களும் போர்
நடைபெற்ற பகுதியில் மீள்குடியேற்றம் வேகமாக நடை பெறுவதை வெளிச்சப்படுத்தி உள்ளன. ஆகையால் இனிமேல் அங்கிருந்து மக்கள், குழுக்கள் குழுக்களாக வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து கோர வேண்டிய தேவை இருக்கமாட்டாது என்று ஜனாதிபதி செயலாளர் நாயகத்துக்கு விரிவாக எடுத்துக் கூறினார். வடஇலங்கையின் அபிவிருத்திக்கும் கல்வி வளர்ச்சிக்கும் அரசு செய்து வரும் பணிகள் தேசிய நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவதற்கான வழிமுறைகள் ஆகும் என்றும் அப்பகுதி மக்களுக்கான புனர் வாழ்வு மற்றும் புனருத்தாரண பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐ.நா. பொதுச் செயலாளருக்கு மிக விரிவாக எடுத்துக்கூறி இருந்தார் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.பிற்குறிப்பு: இது ஒன்றும் புதிய செய்தி கிடையாது.ஐ.நா.சபை அந்தக்குழுவை அமைத்த போதே அது பான் கீ மூனுக்கு இலங்கை நிலைமை தொடர்பாக ஆலோசனை வழங்கும் குழுவாகத்தான் அமைக்கப்பட்டது.அவ்வாறு தான் அவர்களால் சொல்லப்பட்டது.அவ்வாறுதான் அவர்களால் அழைக்கப்பட்டது.இதனை யுத்தக் குற்ற விசாரணைக்குழு என மக்களுக்கு
பொய்யுரைத்தவர்கள் நவீன காலனியாதிக்கத்தின் தமிழ்த்தாசர்களும், அவர்களது ஊடகங்களுமே! இதை உசுப்பேற்றி விட்டது நெடுமாறன் -வை கோ- சீமான் கும்பல்!இவர்களது புணர்ச்சியில் பிறந்த ' தமிழீழ புரட்சிகர மாணவர்கள்' இந்தப் பாதையில் 'நடக்கத்' தொடங்கினர். உலகெங்கும் நவீன காலனிய தேசிய ஒடுக்குமுறையின் அவமானச்சின்னமாக விளங்கும் ஐ.நா.சபையில் ஈழதேசத்துக்கு நீதி கிடைக்கும் என மக்களுக்கு தவறான வழியைக் காட்டினர்.தமிழீழ மக்களே, தவறான வழிநடத்தலுக்கு கொடுத்த விலை போதும்! விழிப்படைவீர்! விழிப்புடன் இருப்பீர்!!விதேசிகளை என்றும் எதிர்ப்பீர்! தேசியம் காப்பீர்! ஜனநாயகம் காப்பீர்!.விடுதலைக்காக தொடர்ந்து போராடுவீர்!.

NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...