அரசியல் பிரச்சாரத்தின் ஆதாரக் கோட்பாடு

========================================================================================================

அரசியல் பிரச்சாரத்தின் ஆதாரக் கோட்பாடு.

'' நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவித சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒழிந்து நிற்பதைக் கண்டுகொள்ள மக்கள் தெரிந்துகொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் காட்டு மிராண்டித் தனமாகவும் அழுகிப் போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஒரு ஆளும்வர்க்கத்தின் சக்தியைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், அபிவிருத்திகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாளாக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன?

பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைச் சிருக்ஷ்டிக்கவும் திறன் பெற்றவையும், சமுதாயத்தில் தாங்கள் வகிக்கும் ஸ்தானத்தின் காரணமாக அப்படிச் சிருக்ஷ்டித்துக் தீரவேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிறவையுமான சக்திகளை, நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்துக்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு ஞானமூட்டிப் போராட்டத்துக்கு ஸ்தாபன ரீதியாகத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி. ''

மாமேதை தோழர் லெனின்
===========================================================================================================================

Saturday, 22 December 2018

சமரன்: தேர்தல் புறக்கணிப்பு செயல்தந்திர வழியும் பணிகளும்....

சமரன்: தேர்தல் புறக்கணிப்பு செயல்தந்திர வழியும் பணிகளும்....: தேர்தல் புறக்கணிப்பு கோட்பாட்டு அடிப்படைகள் 3(1) 3(2) 3(3)   தேர்தல் புறக்கணிப்பு நடைமுறைப் பணிகள் 3(1) ...

Friday, 14 December 2018

காங்கிரசும், பா.ஜ.க வும் இந்தியப் பாசிசத்தின் இருமுகங்கள்.பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங்கதளம், சிவசேனை ஆகிய இந்து மதவெறி பாசிச அமைப்புகள் 1992 டிசம்பர் 6-ஆம் தேதி அயோத்தி பாபர் மசூதியைத் திட்டமிட்டுத் தாக்கித் தகர்த்து தரை மட்டமாக்கினர். இக்கோரச் சம்பவத்தின் பின்னணியில் இந்தியாவில் தலையெடுத்தாடும் இருதலைப் பாசிசப் பாம்பான பா.ஜ.க, காங்கிரஸ் எதிரிகளை எதிர்த்து,தேசிய முன்னணி, இடது சாரி முன்னணி,மற்றும் மாநில
சமரச சக்திகளைத் தனிமைப்படுத்தி, இந்து பாசிச அரசியலை எதிர்த்து மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை ஆதரிப்போர் அனைவரையும் ஓர் அணியில் திரட்டுவதற்கான அரசியல் செயல் தந்திர பாதை என்கிற முறையில் `காங்கிரசும், பாரதிய ஜனதாவும் இந்தியப் பாசிசத்தின் இரு முகங்கள்`.எனும் நூல் மார்ச் 1993 இல் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தினால் அச்சுப் பதிப்பாக வெளியிடப்பட்டு, பாசிச எதிர்ப்பு ஜனநாயகப் பிரச்சார இயக்கம்
முன்னெடுக்கப்பட்டது.

அப்பிரசுரத்தை 2013 அக்ரோபரில் இணைய பதிப்பாக வாசகர்களுக்கு சமர்ப்பித்திருந்தோம்.

முதல் பிரசுரம் வெளிவந்த இந்தக் கால் நூற்றாண்டில் சர்வதேசச் சூழலிலும் இந்தியச் சூழலிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.ஏகாதிபத்திய நெருக்கடியும் பாசிச வளர்ச்சியும் பன்மடங்கு மேலோங்கியுள்ளன. இந்திய அமெரிக்க ஏகாதிபத்தியக் கூட்டு உலக மறுபங்கீட்டின் யுத்ததந்திரக் கூட்டாக வளர்ந்துவிட்டது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிகள் மாறிவிட்டன.எனினும் இவையெதுவும் அரசியல் செயல்தந்திர வழியின் பொதுத் திசையை*  எவ்விதத்திலும் மாற்றவில்லை.அதன் சரியான தன்மை மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இன்று இந்தியப் பாசிசம், உலகு தழுவிய பாசிசத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்ட சூழலில் இப்பிரசுரம் இன்னும் மிகுந்த முக்கியத்துவம் உடையதாகிவிட்டது.

இந்தியப் பாசிசத்தை பா.ஜ.க வின் இந்துத்துவா (Hindutuva) என்பதாக
மட்டும் குறுக்கி காங்கிரஸுடன் கூட்டமைத்து `பாசிசத்தை ஒழிக்கப் போவதாக` திருத்தல்வாதிகள் உள்ளிட்ட நாடாளுமன்ற சந்தர்ப்பவாதிகள் தேர்தல் கூட்டுக்கள் அமைக்கத் தொடங்கிவிட்டனர். இவர்களோடு கூடவே தமிழக இனமானக் கும்பல்களும் ராஜபக்சவின் ஈழ இனப்படுகொலைக்கு முதுகெலும்பாக இருந்த-இருக்கின்ற-இருக்கப் போகின்ற காங்கிரஸோடு -சனாதன எதிர்ப்பு-கூட்டமைக்கின்றனர்.

இச்சூழலில் `காங்கிரசும், பாரதிய ஜனதாவும் இந்தியப் பாசிசத்தின் இரு முகங்கள்' காட்டுகின்ற செயல்தத்திர வழி இந்தியாவில் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை பாட்டாளிவர்க்கத் தலைமையில் கட்டமைப்பதற்கான நெறிகளை வகுத்தளித்திருக்கின்றது.

இதனால் இதனைப் பரந்து பட்ட மக்கள் இடையே எடுத்து விளக்கி பிரச்சாரம் செய்வது இன்று அவசர அவசியமாயுள்ளது.


இந்நூலின் ஆசான் போல்சுவிக் புரட்சியாளர் தோழர் ஏ.எம்.கே இன்று நம்முடன் இல்லை. இம் மூன்றாவது இணைய பதிப்பை அவருக்கு சமர்ப்பணம் செய்கின்றோம்.

சமரன் (ப-ர்/14-12-2018)

Saturday, 8 December 2018

"மாவீரர் தின நிகழ்வுகளும் மக்கள் சந்திக்கும் சவால்களும்"

 உரையாடல்

மக்களின் பிள்ளைகளின் தியாகத்தில் லாபம் அடைபவர்கள் யார்? தொடர்ந்து வஞ்சிக்கப்படுவோர் யார்?

உரையாடல் வெளி

"மாவீரர் தின நிகழ்வுகளும் மக்கள் சந்திக்கும் சவால்களும்"

கலந்துகொள்வோர்

கோகுலரூபன் 
நடேசன் 
புவி

வழிகாட்டல்,ஆலோசனை: எஸ். வாசன் 
நிர்வாகம், ஒளிப்பதிவு: ரஞ்சன்

தயாரிப்பு: மக்கள் கலை பண்பாட்டுக் களம்.


Thursday, 29 November 2018

சமரன்: தோழர் ஏ.எம்.கே.இறுதிப் பயணம் (வீடியோ)

சமரன்: தோழர் ஏ.எம்.கே.இறுதிப் பயணம் (வீடியோ): 26-11-2018 மாலை 4.30 மணியளவில் ஆரம்பித்து 5 கிலோ மீற்றர் வரை நகர்ந்த தோழர் ஏ.எம்.கே இன் இறுதிப் பயண ஊர்வலம். தோழர் ஏ.எம்.கே.வழியில் ...

Sunday, 25 November 2018

சமரன்: கட்சிப் பிரசுரம்:மா.லெ.புரட்சியாளர் தோழர் ஏ.எம்.கே...

சமரன்: கட்சிப் பிரசுரம்:மா.லெ.புரட்சியாளர் தோழர் ஏ.எம்.கே...: 26-11-2018

தோழர் ஏ.எம்.கே.அவர்களின் இறுதி ஊர்வல அறிவிப்பு


புரசிகர போல்சுவிக் தோழர் 
ஏ.எம்.கோதண்டராமன்

அவர்களின் இறுதி ஊர்வல அறிவிப்பு.

தோழர் ஏ.எம்.கே.அவர்களின் இறுதி ஊர்வலம்,

சிவப்பு அஞ்சலிக்கு அனைவரும் வருக!

26-11-2018, திங்கள் மாலை 4.00 மணி

இடம்:நியூ காலனி, திருநகர், காட்பாடி, வேலூர்.

இ.க.க.(மா.லெ) மக்கள் யுத்தம் போல்ஸ்விக்-தமிழ் நாடு
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்-தமிழ்நாடு

தொடர்புக்கு: 9941611655,  9003164280


சர்வதேச போல்சுவிசத்தின் தீரமிக்க போர்வாளும், இந்தியப்புரட்சி இயக்கத்தின் தத்துவ ஆசானுமாகிய தோழர் ஏ.எம்.கோதண்டராமன் அவர்கள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று, 84வது வயதில் தனது சிந்தனையை நிறுத்திக்கொண்டார்.


இந்திய உழைக்கும் மக்களே, உலகத் தொழிலாளர்களே,ஒடுக்கப்படும் தேசங்களே, புரட்சிகர ஜனநாயக சக்திகளே, அறிவுஜீவிகளே, கட்சி உறுப்பினர்களே,கழகத் தோழர்களே; இந்தச் செய்தியை மிகுந்த துயருடன் 
தங்களிடம் பகிர்ந்துகொள்கின்றோம்.


கட்சித் தோழர்களாலும், புரட்சிகர ஜனநாயக அறிவுஜீவிகளாலும் தோழர் ஏ.எம்.கே என்றும், தொழிற்சங்க பரப்பில் `பெரியவர்` என்றும், ஈழத் தோழர்களிடையே `தாத்தா` என்றும் அன்புடனும்,மதிப்புடனும்,தோழமையுடனும் அழைக்கப்பட்ட
அந்த அற்புதமான மானுடர் இன்று எம்முடன் பெளதீக ரீதியாக இல்லை.இயங்கியலுக்கு எதுவும் விதிவிலக்கல்ல!


எனினும் அவர் தம் சிந்தனையாலும்,சொல்லாலும்,செயலாலும் எம்மில் பிரிக்க இயலா அங்கமாக, உணர்வில் கலந்த உயிராக என்றும் வாழ்வார். இங்குதான் ஒரு தனிமனிதரின் வரலாற்றுப் பாத்திரம் அடங்கியிருக்கின்றது.


இந்திய விடுதலையில் இரண்டு தாத்தாக்கள்.
ஒன்று விதேசியத் தாத்தா! மற்றது தேசியத் தாத்தா!!

முதலாவது முடிந்துவிட்டது,இரண்டாவது தொடங்கிவிட்டது.

ஈழப்புரட்சிக்கும் இது பொருந்தும். 

இனி வரலாறு அவர் வழியில் தான் நடக்கும்.
அவர் நாமம் தான் நிலைக்கும்.

எமது அருமைத் தாத்தா,
புரட்சிகர போல்சுவிக் தோழர்
ஏ.எம்.கோதண்டராமன் நாமம் நீடூழி வாழ்க!
அவர்தம் புரட்சிப்பயணம் வெல்க!!

அஞ்சலிக்க அணிதிரள்வோம்!


Saturday, 17 November 2018

வேண்டாப் பிண்டத்தை வெட்டிச் சரிப்போம்!

முதலாளித்துவ நாடாளுமன்றம் நடைமுறையில்

காலாவதி ஆகியதன் விளைவே சிங்களத்தில் நிகழ்ந்த கலகம்.

`தாமரைக் களத்தில்` சில மொட்டுக்கள்!

சிங்கள நாடாளுமன்றம் சோல்பரி அரசியல் யாப்பால்
உருவாக்கப்பட்ட அரைக்காலனிய அந்நிய மன்றமாகும்.
மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டபோது
அதன் செங்கோல் வளைந்து விட்டது.
1972,1978 யாப்பும் 6வது திருத்தமும் வந்த போது செங்கோல்
முழுதாக முறிந்து விட்டது.
பயங்கரவாதச் சட்டம், அவசரகாலச் சட்டம் உள்ளிட்ட
கறுப்புச் சட்டங்கள் வந்து, இனப்படுகொலை யுத்தம்
சட்ட பூர்வமாக்கப்பட்ட போது எரிந்து சாம்பராய் விட்டது.
19வது திருத்தம் அதை உயிர்ப்பிக்கவில்லை, மாறாக 19
திருத்தங்களும் பாசிசப் பேயாக வளர்ந்து நிற்கின்றன.
ஒரு ஆயிரம் பேர் வடகிழக்கில் 6வது திருத்தத்தை நீக்கக்
கோரி ஆர்ப்பரித்தால், அல்லது இராணுவ முகாம் முன்னால்
ஒரு `பட்டாசு` வெடித்தால் அந்தக்கணமே இவர்கள்
ஒன்று சேர்ந்து விடுவார்கள்.
இந்த வேண்டாப் பிண்டத்தைக் கட்டிக் காப்பது அல்ல,
வெட்டிச் சரிப்பதே ஜனநாயகம்!