அரசியல் பிரச்சாரத்தின் ஆதாரக் கோட்பாடு

========================================================================================================

அரசியல் பிரச்சாரத்தின் ஆதாரக் கோட்பாடு.

'' நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவித சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒழிந்து நிற்பதைக் கண்டுகொள்ள மக்கள் தெரிந்துகொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் காட்டு மிராண்டித் தனமாகவும் அழுகிப் போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஒரு ஆளும்வர்க்கத்தின் சக்தியைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், அபிவிருத்திகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாளாக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன?

பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைச் சிருக்ஷ்டிக்கவும் திறன் பெற்றவையும், சமுதாயத்தில் தாங்கள் வகிக்கும் ஸ்தானத்தின் காரணமாக அப்படிச் சிருக்ஷ்டித்துக் தீரவேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிறவையுமான சக்திகளை, நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்துக்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு ஞானமூட்டிப் போராட்டத்துக்கு ஸ்தாபன ரீதியாகத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி. ''

மாமேதை தோழர் லெனின்
===========================================================================================================================

Tuesday, 16 May 2017

வித்தியாவுடன் சக மாணவர்களின் படுகொலைக்கு நீதி வேண்டி யாழ் பல்கலை மாணவர் போராட்டம்..!

 
வித்தியா மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு நீதி வேண்டி யாழ் பல்கலை மாணவர்கள் போராட்டம்..!

 
பாலியல் வன்கொடுமையின் பின் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி வித்தியா சிவலோகநாதனின் வழக்கில் விரைவான நீதி கோரியும், வேண்டுமென்றே காலதாமதம் காட்டப்படும் பல்கலைக்கழக மாணவர் படுகொலை வழக்கை விரைவுபடுத்தி நீதி வழங்கக் கோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.

இன்று காலை 11 மணியளவில் பல்கலைக்கழக முன்றலில் அனைத்துப் பீட மாணவர்களும் கூடி பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:

சகோதரி வித்தியா சிவலோகநாதன் அவர்கள் பாலியல் வன் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கின் நீதவான் மன்ற விசாரணை முடிவுற்று வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட விசேட தீர்ப்பாயத்திற்கு விடப்பட்டதாக அறிகிறோம். மேற்படி வழக்கு கொழும்பில் மூன்று சிங்களம் பேசும் நீதிபதிகள் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.இச் செய்தி முழுத் தமிழ் சமூகத்தையும் பேரதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது.
யுத்தத்தோடு தொடர்பில்லாத வழக்கொன்றே எமது நீதிபதிகளால் விசாரிக்கப்பட முடியாததாகின்ற போது, யுத்தத்தோடு தொடர்புபட்ட வழக்குகள் எமது நீதிமன்றங்கள் முன்னால் விசாரிக்கப்படுமா என்ற கேள்விகளை முன்கொணர்கிறது.

மேலும் வித்தியாவின் தாயார் உறவினர்களுக்கு கொழும்பில் தாம் அறியாத மொழியில் இவ் வழக்கு நடத்தப்படுவது பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். வழக்கு விவகாரங்களில் பங்கு பற்றுவதற்கும் தமது நலன்களை கவனிக்க உரிய சட்டத்தரணிகளை நியமிக்கவும் இது கடினமானதாகும். மேற்படி வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதி மன்றத்தில் விசாரிக்க பிரதம நீதியமைச்சர் ஆவன செய்ய வேண்டும் என நாம் கோருகின்றோம்.

எமது சக மாணவர்களான சுலக்சன் கஜன் ஆகியோருக்கு எதிரான யாழ் நீதவான் நீதி மன்ற விசாரணையை வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்படுகிறது. பொலிஸார் முறையான விசாரணை ஒன்றை நடத்தவில்லை என பாதிக்கப்பட்டவர்களின் நலன்களைக் கவனிக்கும் சட்டத்தரணிகள் கூறுகின்றனர். சம்பவம் நடந்து ஒரு கால மாதத்திற்குள் குற்றச்சாட்டுப்பத்திரம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட வேண்டும். என்ற எமது கோரிக்கையை அதிமேதகு சனாதிபதி ஏற்றுக்கொண்டு விரிவாக பொலிஸ் விசாரனையை நிறைவு செய்ய உத்தரவிடுவதாக வாக்களித்திருந்தமை இன்று முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படவிருந்த பொருளாதார உதவிகள் எவையும் முறையாக வந்து சேரவில்லை. இவை தொடர்பில் அரசாங்கம் அடுத்து வரும் 30 நாட்களுக்குள் எமக்கு உரிய பதில் தரவேண்டும். இல்லா விடில் அறவழி போராட்டங்கள் தொடர்பில் நாம் தீர்க்கமாக முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்ததுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment